தமிழக முதல்வர் ஜாதி வெறியைத் தூண்டலாமா?

தமிழக முதல்வராக அரசு பதவியில் இருக்கும் கலைஞர் கருணாநிதி, இந்திய அரசியல் சட்ட அமைப்பு விதிகளை பாதுகாத்து, விதிகளை மீறுவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளார். அவரே தனது மனைவியின் கேலிச்சித்திரங்களை "ஆனந்தவிகடன்" பத்திரிகை வெளியிட்டது என்பதற்காக, அப் பத்திரிகையை "பார்ப்பனர் எடு" என்று வசை பாடியதுடன், அக்ரகாரத்திற்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? நாமும் கார்ட்டூன் வரைந்திட, அவர் ஆத்தில ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா? என்று சாதரண சராசரி மனிதனைப்போல், ஜாதி வெறி யைத்தூண்டி இரு வகுப்பருக்கிடையே குழப்பம் உண்டாக்கும் முறையில் 28-7-2009 அன்று அறிக்கை வெளியிட்டி இருக்கிறார்.

தமிழக முதல்வரின் ஜாதி வெறியைத்தூண்டும் அறிக்கை பற்றி திரு எஸ்.வி.ரமணி "You Tube" மூலம் விவரித்துள்ளார்.


தமிழ் ஈழம் தமிழர்கள் இதயத்தில்.

இன்று ஈழத்தில் கொடுங்கோலர்கள் ஆட்சியில் அல்லலுறும், தமிழர்கள் வாழ்வு வளம்பெற தனித்தமிழ் ஈழம் வாங்கிக்கொடுங்கள் என்று மத்திய அரசை கலைஞர் கருணாநிதி ஏன் கேட்கக்கூடாது? அப்படி தனித்தமிழ் ஈழம் பெற்றுத்தர கலைஞர் போராட முன் வந்தால், அவர் பின்னால் கோடிக்கணக்கானத் தமிழர்கள் அணிவகுக்கத் தயாராய் உள்ளார்கள்.

You Tube மூலம் எஸ்.வி.ரமணியின் தமிழ் உரையைக் கேளுங்கள்.


http://www.youtube.com/watch?v=GR6fnvbb2LM



இந்திய காங்கிரஸ் அரசு, இந்திய கலாச்சாரச் சின்னமாக விளங்கும் இராமர் சேதுவை இடிக்கச் சொல்லும் கருணாநிதிக்கு துணை போகக்கூடாது. அயோத்தி மன்னன் தசரதனின் மைந்தன் இராமன் வாழ்ந்த வரலாற்றை நமக்குப் படம் பிடித்துக் காட்டும் இராமர் சேது பாலத்தை ஏன் இடிக்கக்கூடாது ? என்பதை திரு எஸ்.வி ரமணி You Tube மூலம் தனது தமிழ் உரையில விளக்கி உள்ளார். http://www.youtube.com/watch?v=PdeR9TsHmEc




தமிழ் இனத்தை அழித்த ராஜ் பக்சேயை எதிர்த்து வை.கோ.வின் போர்க்குரல்.

சிங்கள இனவெறி ராணுவம், கொடுமைக்கார ராஜ் பக்சேயின் தலைமையில் இலட்சக்கணக்கான தமிழர்களை இரத்த வெள்ளத்தில் மிதக்கச்செய்து கோரத் தாண்டவம் ஆடியதை இந்த உலகமே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. இந்தக் கொடுமைகளை எதிர்த்து இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் எழுப்பப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவாக செயல்பட்டதை கண்டித்து திரு. வை.கோ. அவர்கள் பேசியதை திரு. எஸ்.வி.ரமணி உங்களுக்கு You Tube மூலம் விளக்குகிறார் http://www.youtube.com/watch?v=u2Qa9bcyxMU


மகாத்மா காந்தி அடிகளும் காஞ்சி மஹா சுவாமிகளும்.


மகாத்மா காந்தி அடிகள் 1927 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தென்னாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். காஞ்சி காமகோடிபீடம் மகா பெரியவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்த காந்தி அடிகள் விஜய யாத்திரைக் காரணமாக பாலக்காட்டில் நெல்லிசேரி கிராமத்தில் தங்கியிருந்த அவரை சந்திக்க விரும்பினார்.

மகாத்மா 1927 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி காஞ்சிப் பெரியவரை நெல்லிசேரி கிராமத்தில் சந்தித்துப் பேசினார்.

அவர்கள் பேச்சின் முடிவில் காந்தி அடிகள், நாம் நம்மை கொலை செய்ய வருபவனிடமும் வேற்றுமை உணர்வை காட்டாமல் அவனிடமும் அன்பையும் நேசத்தையும் காட்டவேண்டும் என்று கூறினார். அன்பையும் மனித நேயத்தையும் வளர்த்து மனித குலம் நல வாழ்வு வாழ வேண்டும் என்று காந்தி அடிகளும், காஞ்சிப் பெரியவரும் விரும்பினார்கள். இரு இந்தியப் பெரியவர்களின் எண்ணங்களை நாம் பின்பற்றி மனித குலம் மனித நேயத்துடன் வாழ நாமும் வழிகாட்டிகளாக விளங்குவோம்.

இரு இந்தியப் பெரியவர்களின் சந்திப்பைப் பற்றி திரு எஸ்.வி. ரமணி தன தமிழ் உரை மூலம் சொல்கிறார். http://www.youtube.com/watch?v=NcCiq13d1TI



ஈழ விடுதலைப் போராட்ட மாவீரன் பிரபாகரன்.


ஈழத்தின் விடுதலை ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு, தமிழ் ஈழ மக்களின் வாழ்வையே தன வாழ்வாகக் கொண்டு வாழ்ந்த மாவீரன் பிரபாகரன். மாவீரன் பிரபாகரன் பற்றி திரு எஸ்.வி. ரமணி YOU TUBE மூலம் சில செய்திகளைச சொல்கிறார். http://www.youtube.com/watch?v=lC-5uhhsIa4

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ramani&oldid=2914656" இலிருந்து மீள்விக்கப்பட்டது