ஈழத்து தமிழ்திரைப்படத்துறை

ஈழத்து தமிழ்திரைப்படத்துறை உரிய வளர்ச்சியைப் பெறவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயம்இது குறித்து பல் வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன, 1951ஆம் ஆண்டுகளிலேயே இத்துறை குறித்து நம்மவர்கள் கவனம் செலுத்திய போதும் 1962இல் அதாவது 11 ஆண்டுகளுக்குப் பின்னரே முதலாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஹென்றி சந்திரவன்ஸ என்பவரது இயக்கத்தில் சமூதாயம் என்ற முதல் நம்நாட்;டுத் தமிழ் திரைப்படம் 16 மில்லிமீற்றரில் தயாரிக்கப்பட்டது. சாதாரனமாக ஒரு திரைப்படம் திரைஅரங்குகளில் திரையிடப்பட வேண்டுமெனில் அது 35 மில்லிமீற்றரில் பதிவுசெய்யப்பட வேண்டும்.எனினும் இம்முயற்சி தொடர்ந்து ஈழத்துத் தமிழ் திரைப்படங்கள் உருவாக வழிகோலியது.

இதன் பின்னர் 1963இல் கே. கிரு~;ணகுமாரினால் தோட்டக்காரி என்ற 35 மில்லிமீற்றர் திரைப்படம் உருவாக்கப்பட்டது. 1966 இல் கடமையின் எல்லை,அதே ஆண்டில் பாசநிலா மற்றும் டாக்ஸிடிறைவர் போன்றனவும் 1968 இல் நிர்மலா என்ற படமும் உருவாகின.

அறுபதுகளில தொடர்ந்த இந்த முயற்சிகள் உரிய வெற்றிகளை பெற முடியாதிருந்த போதும் இத்துறை வளர்ச்சியில் ஆர்வம் கொண்டோர் தமது முயற்சிகளை மேற்கொண்டே வந்தனர்.

எழுபதுகள் எமது திரைப்படத்துறைக்கு பொன்னான காலங்கள் எனலாம்1970 இல்; மஞ்சள்குங்குமம்,வெண்சங்கு,என்ற படங்களும் 1972 இல் குத்துவிளக்கு,1973 இல் மீனவப்பெண,;1975இல் புதிய காற்று என்ற படங்களும் வெளிவந்தன.

புதிய காற்று என்ற படம் நமது திரைப்படத்துறைக்கு நம்பிக்கையை ஊட்டிய ஒரு படமாகக் கருதப்படுகிறது. காரணம் பொருளாதார ரீதியில் முன்னைய படங்கள் உரிய இலக்கை அடையவில்லை ஆனால் இந்தப்படம் அந்த நிலையை சற்று மாற்றியமைத்து.இதுமட்டுமின்றி நமது கலைஞர்களாலும் தரமான படைப்பை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை எற்படுத்தியது. அதனை வி.பி.கணேசன் என்பவர் இதனைத் தயாரித்து வழங்கினார்

இதன்பின்னர்1976 ஆம் ஆண்டு கோமாளிகள் என்ற படம் வெளிவந்தது பிரபல கலைஞர் ராமதாஸ் இதனை தயாரித்தளித்தார் நகைச்சுவையை மையக்கருவாகக்கொண்டு வெளிவந்த இந்தப்படமும் ரசிகர்களை கவர்ந்தது இதன்பின்னர் 1977 இல் வெளிவந்த பொன்மணி என்ற படம் எமது இலக்கியதரத்தின் காத்திரமான முயற்சியாக கருதப்பட்டது. பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பங்களிப்போடு இப்படம் உருவானது என்பது சிறப்பு அம்சமாகும்.இதே ஆண்டில் காத்திருப்பேன் உனக்காக என்ற படமும் வெளிவந்தது.

இதேபோன்று 1978 ஆம்ஆண்டு ஆறு படங்கள் வெளிவந்தன நான்உங்கள்தோழன்,வாடைக்காற்று, தென்றலும்புயலும்,தெய்வம்தந்தவீடு,ஏமாளிகள்,அனுராகம் என்பன அவையாகும். 1979 இல் எங்களில்ஒருவன், மாமியாhவீடு,நெஞ்சுக்குநீதி.என்பனவும்1980 இல் இரத்தத்தின் இரத்தமே,அவள்ஒருஜீவநதியும் 1981 இல் நாடுபோற்ற வாழ்க,1982 இல் பாதைமாறிய பருவங்கள் என்பன வெளிவந்தன 1983 நாட்டில் எற்பட்ட கலவரம் எமது முயற்சிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.வத்தளை விஜய ஸ்ருடியோவில் படப்பிடிப்பில் பாதியில் நின்ற படங்கள் தீக்கிரையாகின.

இந்த இழப்பு எற்படுத்திய தாக்கம் அது வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது எனினும் 1993 ஆம் ஆண்டு பேராதனை ஜுனைடீன் என்பவர் சர்மிலாவின் இதய ராகம் என்ற படத்தை உருவாக்கித்தந்தார் நாட்டில் ஏற்பட்ட ஆயுதப்போராட்டம் காரணமாக முற்றுமுழுதாக நிலை குலைந்து போன இத்துறை படுத்தபடுக்கையாகவே இருக்கிறது எனினும் 2006 இல் மண் என்ற திரைப்படத்தின்; மூலமும் 2009 பெத்தம்மா என்ற படத்தின் ஊடாகவும் இரத்தம் பாய்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இத்துறையின் வளர்ச்சி கேள்விக்குறியை தூக்கிக்கொண்டே நிற்கிறது. ஈழத்துக் கலைத்துறைகள் அனைத்தும் இன்று நலிவுற்றிருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் எமது ரசிகர்கள். ரசிகர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு காரணமாக இருந்தது தென்னிந்திய தமிழ்கலை உலகம். அந்த கலை உலகம் நம்மகத்தில் எற்படுத்தியுள்ள ஈர்ப்பு - தாக்கம் என்பன எமது தனித்துவத்தை நிலை நிறுத்த தடைக்கற்களாக இருந்துள்ளன.

கலைத்துறை சார்ந்த அவர்களது அனைத்து வரவுகளும் நம்மவர்களின் மனதில் பிடித்துக் கொண்ட இடம் மிகப் பெரியது. அவர்கள் மேற்கொண்ட கலைதுறை நடவடிக்கைகள் அனைத்தையும் நம்மவர்களும் செய்துள்ளனர். அதன்போது எழுந்த ஒப்புநோக்கு எம்மவர்களை விட அவர்களை முன்னிலைப்படுத்தியுள்ளது அதன் காரணமாக நமது ரசிகர்களின் எண்ண ஓட்டம் 'அதுபோல் இது வருமா" எனக்கருதும் நிiமையை ஏற்படுத்தியது.

இத்தகைய ரசிப்பு வெளிபாடே எமது திரைப்படத்துறையிலும் எழுந்தது. தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் வளர்ச்சி கண்டு புதிய புதிய தொழில்நுட்பங்களின் ஏற்றங்களுக்குள்;;சென்று கொண்டிருந்த கால கட்டத்திலேயே நமது திரைப்படத் தயாhரிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் எம்மால் முன்வைப்பட்ட படைப்புகள் தென்னிந்திய சினிமாவின் தரத்தை ஈடுசெய்து செய்யும் நிலையில் இருக்கவி;ல்லை.அதற்காண காரணங்களில் ஒன்றாக எமது படைப்புகளின் உரையாடல்களும் இருந்தன பாசநிலா, குத்துவிளக்கு, பொன்மணி போன்ற படங்கள் முழமையாக யாழ்ப்பாணத்து மொழிவழக்கை கொண்டமைந்திருந்தன.தென்னகத்தில் இக்காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் தமக்கென ஒருபுதிய உரையாடல் போக்கை கொண்டிருந்தன இதனைப் பார்த்துப் பழக்கப்பட்டோருக்கு எமது மொழிநடை பிடிப்பு இல்லாத ஒன்றாகக் கருதப்பட்டது.

அதை விட முக்கியமாகக் கருதப்பட்டது (கயளவ கசயஅந) என்ற அம்சம் அதாவது தென்னிந்தியப் படங்கள் விரைவாக கதை நகர்த்தும் காட்சிப் பதிவுகளைக் கொண்டமைந்தன ஆனால் நமது காட்சிப்பதிவுகள் தாமதமான முறைகளை கொண்டிருந்தன அதன் காரணமாக (கயளவ கசயஅந) பார்த்துப் பழக்கப்பட்ட நமது ரசிகர்கள் அதனை ஏற்கவில்லை எனக்; கருதவும் இடமுண்டு.

எனினும் 1970 ஆம் ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட போது நம் நாட்டு திரைப்படங்கள்; அதிகளவில் வெளிவந்தன நம்மவர்கள் சிறப்பாக இனங்காணப்பட்டனர் இந்த திருப்பத்தை புதிய காற்று திரைப்படம் எற்படுத்தியது இந்த அடிச்சுவட்டில் தொடர்ந்த படங்களில் கோமாளிகள் எமது தனித்துவத்திற்கு எடுத்தக்காட்டாக அமைந்தது என்பதும் மறுப்பதற்கு இல்லை.

தென்னிந்திய திரைப்படப்பாடல்களையே முனுமுனுத்து வந்த நம்மவர்கள் நம்நாட்டு திரைப்படப் பாடல்களையும் முனுமுனுக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால் தொடர்ந்தும் இந்த நிலையை தக்கவைக்க முடியாமல் போனது எமது துரதி~;டமே.

இலங்கையில் சிங்கள திரைப்படத்துறையின் வளர்ச்சி பாராட்டத்தக்கது. ஆனால் அவர்களது வளர்ச்சிக்குப் பிரதானமானது அவர்களது மொழி அங்கு மட்டும் தான் பேசப்படுகின்றது என்ற அம்சமாகும்.

இந்நிலையில் தமது மொழிசாந்த கலை,இலக்கியத்துறை மேம்பாட்டுக்கு அவர்கள் தனித்துவமான அடையாளங்களை பதிக்க வேண்டியது அவசியமானதே அதன் காரணமாக அவர்கள் தமது மொழிசார்ந்த எந்த முயற்சியாக இருந்தாலும் அதற்கான முழுமையான ஒத்துழைப்பை ஊக்குவிப்பை வழங்குகின்றனர். தமிழர்களால் உருவாக்கப்பட்ட அவர்களது திரையுலகம் வீறுநடை போடுகிறது ஆனால் நாம்தான் தோங்கிக் கிடக்கிறோம் என்பதே உண்மையாகும்.

இந்நிலை நிச்சயமாக மாறவேண்டும் கடந்த காலங்கள் இதற்கான ஏற்புடைய காலங்களாக எமக்கு இருக்கவில்லை இனிவரும் காலங்களும் அவ்வாறனாதாக அமைந்து விடமால் இத்துறை குறித்து நாம் கவனம் செலுத்துவது அவசியமானது. அதற்கான திட்டமிட்டு நாம் செயல் பணிகளை மேற்கொள்ள வேண்டும.; குறிப்பாக பணம் படைத்தோர் இதில் நாட்டம் கொள்ளவேண்டும்.

ஆக்கம் ராதாமேத்தா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rathametha&oldid=878221" இலிருந்து மீள்விக்கப்பட்டது