புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு
(பயனர்:Redirect/IOM இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சர்வதேசக் குடியேற்ற அமைப்பு (International Organization for Migration (IOM) 1951 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரினால் குடிபெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இன்று அதன் இலக்குகளானது விரிவுபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமைப்பாகும். இது ஐக்கிய நாடுகள் அமைப்பல்லவெனினும் பல்வேறு நாடுகள் இவ்வமைப்புடன் சேர்ந்தியங்கி வருகிறது.[1]
இலங்கையில் இதன் பணி
தொகு1990 களில் இலங்கை இதன் ஓர் அங்கத்துவ நாடாகியது. 90களில் வளைகுடாப் போரில் 95,000 பேரை மீளவும் இலங்கைக்கு வருவிப்பதில் பங்காற்றியது. இதன் அலுவலகம் கொழும்பில் மே 2002 இல் ஆரம்பிக்கப் பட்டது. சுனாமியை அடுத்து இடைத்தங்கல் வீடுகள், சுகாதார சம்பந்தமான உதவிகள், போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் அளப்பரிய பங்காற்றியது.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- சர்தேச குடியேற்ற அமைப்பின் அதிகாரப் பூர்வமான இணையதளம்
- புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு (ஆங்கில மொழியில்)
- இலங்கைப் புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு பரணிடப்பட்டது 2007-03-14 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)