யாகூ! மெசஞ்சர்

(பயனர்:Redirect/yahoo!messenger இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாகூ! மெசஞ்சர் என்பது யாகூ!வினால் உருவாக்கப்பட்ட விளம்பரதாரர்களூடாக அனுசரணை வழங்கப்படும் இலவசமான இணைய உரையாடல் சேவை மென்பொருளாகும். யாகூ! மெசஞ்சரைப் பதிவிறக்கியோ வெப்மெசஞ்சர் என்ற இணையத்தள சேவை வழியாகவோ அல்லது நேரடியாக யா! மெயிலினூடாகவோ பயன்படுத்தலாம். யாகூ! மெசஞ்சரைப் பயன்படுத்தும் போது யாகூ! மெயில் வந்தால் உடனடியாகப் பயனரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும். பதிவிறக்கப்பட்ட பதிப்பில் இணையத்தளப் பதிப்பை காட்டிலும் வசதிகள் அதிகமாக இருக்கும். யாகூ! மெசஞ்சர் கணக்கை பிட்கின் (கெயிம்) போன்ற மென்பொரு கொண்டும் அணுக முடியும்.

உருவாக்குனர்யாகூ!
அண்மை வெளியீடு9.0.0.2160 (விண்டோஸ்)/3.0b1 (Mac) / 15 ஆவணி, 2009
இயக்கு முறைமைவின்டோஸ் 98/Me, 2000, XP, விஸ்டா, Mac OS X, Mac OS 9, Mac OS 8, யுனிக்ஸ்
மென்பொருள் வகைமைVoIP/Instant messaging client
உரிமம்Proprietary இலவசமென்பொருள்
இணையத்தளம்messenger.yahoo.com

யாகூ! மெசஞ்சர் சேவையை யாகூ! பயனர் கணக்கை கொண்டே பயன்படுத்தலாம். இதனால், யாகூ! மெசஞ்சரைப் பயன்படுத்தும்போது, யாகூ! மின்னஞ்சலில் வரும் மடல்கள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர, கணினியிடை குரல்வழி அழைப்புகள், கணினி - தொலைபேசி அழைப்புகள், கோப்புப் பரிமாற்றங்கள், இணையப் படக்கருவி அணுக்கம், குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, அரட்டை அறை சேவை ஆகிய வசதிகளையும் தருகிறது. யாகூ! மெசஞ்சர் பட்டியலில் உள்ள நண்பர்கள் அறியாமல் அதை பயன்படுத்தும் வசதி இருந்தாலும், படி ஸ்பை (Buddy Spy) என்னும் இலவச மென்பொருள் மூலம் நண்பர்கள் உரையாடலில் ஈடுபடுவதை அறிய முடியும்.

இம்மென்பொருளில் ஏனைய உரையாடல் மென்பொருட்களிற்கு மேலதிகமாக IMVironments (உரையாடல் window வின் தோற்றத்தை மாற்றல்) மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அவதாரங்கள் என்னும் வசதிகள் உள்ளன. எனினும் இவ்வசதிகளானது விண்டோசு தவிர்ந்த ஏனை இயங்குதளங்களில் கிடையாது. யாகூவின் ஆப்பிள் கணினிக்கான மெசஞ்சர் இன்னமும் பழைய பதிப்பிலேயே உள்ளது.

ஜூலை 13 2006 இல் இருந்து, யாகூ!, மைக்ரோசாப்ட் உடன் தனது மெசஞ்சர் வலையமைப்பை சேர்த்துக் கொண்டது. இதன் மூலம், மைக்ரோசாப்டின் .நெட் மெசன்சர் சேவையுடன் ஒத்தியங்கும் திறனை யாகூ! மெசஞ்சர் பெற்றது. இத்துடன், விண்டோசு லைவ் மெசஞ்சரிலிருந்து யாகூ மெசஞ்சருக்கும் யாகூ மெசஞ்சரிலிருந்து விண்டோசு லைவ் மெசஞ்சருக்கும் உரையாடல்கள் நிகழ்த்த முடியும். யாகூ! மெசஞ்சர், யாகூ! அரட்டை அறைக்குள் நுழைந்து கொள்ள அனுமதிக்கும் என்றாலும் இலவசமான சாவாவிலான மென்பொருள் ஆப்பிள் கணினிகளில் இயங்க மாட்டாது.

யாகூ! மெசன்சர் ஆரம்பத்தில் யாகூ! பேசர் பரணிடப்பட்டது 2010-12-20 at the வந்தவழி இயந்திரம் என்றே அறியப்பட்டது.

வசதிகள்

தொகு

தமிழ் ஆதரவு

தொகு
 
யாகூ மெசஞ்சரில் தமிழ் உரையாடல்

தமிழ் ஆதரவும் யாகூ! மெசஞ்சரின் 7 ஆவது பதிப்பில் இருந்து தமிழ் உட்பட இந்திய மொழிகளை ஆதரிக்கத் தொடங்கியது. லினக்ஸில் இயங்கும் கெயிம் தமிழில் நேரடியாக உரையாடல்களில் ஈடுபடலாமெனினும் வின்டோஸ் இயங்குதளத்தில் இயங்குகின்ற கெயிம் மென்பொருளில் நேரடியாக தமிழை உள்ளீடு செய்வது சிரமான காரியம். இதற்குத் தீர்வாக இதன் 7வது மற்றும் 8வது பதிப்பைப் பாவிப்பவர்கள் யாஹூ! மெசன்சரில் IndiChat பரணிடப்பட்டது 2006-12-05 at the வந்தவழி இயந்திரம் என்கிற பொருத்தை (plugin) பதிவிறக்கி நிறுவுவதன் மூலம் தமிழ், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் யாஹூ! மெசஞ்சர் பயனருடனோ அல்லது விண்டோஸ் லைவ் மெசஞ்சருடனும் பயனருடனோ ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து உரையாட முடியும். புதிதாக அறிமுகமான வெப்மெசஞ்சரிலும் தமிழை நேரடியாக உள்ளிடுவதில் சிரமங்கள் நீக்கப்பட்டு யாஹூ! மெயிலுடன் உள்ளிணைக்கப்பட்ட அரட்டையில் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுள்ள இதன் 9 வது பதிப்பிலும் தமிழை நேரடியாகத் தட்டச்சுச் செய்யலாம்.

யாஹூ! மெசன்ஜர் பொருத்துக்கள்

தொகு

யாஹூ! மெசஞ்சர் பொருத்துக்களை விருத்தி செய்யும் மென்பொருட்களூடாக விருத்தி செய்யலாம். இம்மென்பொருட்கள் யாஹூ! மெசஞ்சர் பொருத்து SDK பரணிடப்பட்டது 2009-01-20 at the வந்தவழி இயந்திரம் ஊடாகக் கிடைக்கின்றது.

யாஹூ! மெயிலுடன் கூட்டிணைவு

தொகு

நவம்பர் 9 , 2006 முதல் யாஹூ! மெசஞ்சர் யாஹூ! மெயிலுடன் கூட்டிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. உரையாடல் மின்னஞ்சல்கள் போன்றே சேமிக்கமுடியும். பின்னர் இதை தேடவும் முடியும் எனவே எந்தக் கணினியில் இருந்து உரையாடலில் ஈடுபட்டனர் என்ற பிரச்சினை இல்லாது ஒழிக்கப்படுகின்றது.

ஒலி அஞ்சல்கள் மற்றும் கோப்புக்களைப் பகிர்தல்

தொகு

யாஹூ! ஒலி அஞ்சகள் மற்றும் 1 ஜிகாபைட்டிற்கும் மிகையாகாத கோப்புக்களை பகிர உதவுகின்றது.

விண்டோஸ் லைவ் மெசன்ஜருடன் கூட்டிணைவு

தொகு

அக்டோபர் 13, 2005 யாஹூ! மற்றும் மைக்ரோசாப்ட் இரண்டு வலையமைப்புக்களையும் ஒருங்கிணைப்பதாக அறிவித்தனர்.இந்த ஒருங்கிணைவின் மூலம் யாஹூ! மற்றும் மைக்ரோசாப்ட் தூதூவர் வலையமைப்பே உலகின் இரண்டாவது பெரிய வலையமைப்பாக விளங்குன்றது. இதன் மூலம் ஓர் வலையமைப்பில் உள்ளவர் பிறிதோர் வலையமைப்பில் பயனர் கணக்கொன்றை ஆரம்பிக்காமல் உரையாடலில் ஈடுபடமுடியும். இவ்வசதியானது ஜூலை 12, 2006 முதல் சாத்தியமான போதிலும் இன்னமும் ஒலி மூல உரையாடல்களை இரண்டு வலையமைப்புகளுக்கிடையில் நிகழ்த்த முடியாது.

அரட்டை (Chat) அறைகள்

தொகு

ஏனைய போட்டியாளர்களைப் போன்றல்லாது யாஹூ! பல்வேறுபட்ட அரட்டை அரங்குகள் அல்லது அரட்டை அறைக்குள் காணப்படுகின்றன. இவை பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதில் நுளைபவர்கள் தமது சொந்த யாஹூ! அடையாளத்தைக் கொண்டோ அல்லது புனை பெயரிலோ இணைதல் இயலும்.

யாஹூ! அரட்டை அரங்குகளில் விளம்பரப்படுத்துவதற்காக தானியங்கிகள் ஏவிவிடப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரட்டை அரங்குகளில் உண்மையான பயனர்களைவிடத் தானியங்கிப் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தத் தானியங்கிகள் பல்வேறுபட்ட பாலியல் இணையத்தளங்களுக்கு இணைப்பை வழங்குவதோடு எரிதங்களையும் அனுப்பிவருகின்றது. இதுதவிர ஒலி உரையாடலகள் அவ்வளவு நம்பகரமானதல்ல பல்வேறுபட்ட பயனர்கள் இதில் இணைவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

யாஹூ! மே 2006 முதல் ஜாவா முறையில் அரட்டை அரங்கில் உள் நுளைவதற்கான அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.

பதிவிறக்கம்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூ!_மெசஞ்சர்&oldid=3351606" இலிருந்து மீள்விக்கப்பட்டது