எது சிறப்பான வாழ்க்கை ?


வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவே வாழும் காலம். இந்த வாழ்க்கையில் சிறந்தவராய் வாழ்வது எளிதும் அல்ல,கடினமும் அல்ல.


சிறப்பான வாழ்க்கை என்பது இரவு உறங்கும் முன் மனநிம்மதியுடன் உறங்குவதேயாகும்.

சின்னதாய் தோன்றும் எண்ணம் கூட உங்கள் மனநிம்மதியைக் குழைக்கும். தவறான புரிதல் உறக்கத்தைக் கெடுக்கு முழமை பெறாத வேலை நம்மை உறஙகாமல் செய்யும். தனிமை சிலருக்கு வெறுப்பை உண்டாக்கும், இதனால் மனநிம்மதி குறையும்.


அதிக ஓய்வு பல சிந்தனைகளுக்கு உட்படுத்திவிடும். இதனால் மனகுழப்பங்கள் ஏற்படலாம்.

ஒரு சிறந்த வாழ்க்கை என்பது எதன் பொருட்டு அளவிடப்படுகிறது? நம்முடைய சிந்தனையும் செயலிலும் தான். சிந்தனையில் நீங்கள் சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன், சிறப்பான செயல்களைச் செய்து கொண்டு இருக்கிறேன் என்று நம்பினால், நீங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்க்கிறீர்கள் என்று அர்த்தம். நாட்டிற்கே தலைவனாயினும் ஏதோ ஒரு சிந்தனை அவனை வாட்டுகிறது என்றால் அவன் சிறப்பான வாழ்க்கையை இழந்து விடுகிறான்.

ஓய்வின்றி பணத்திற்காக ஓடுபவன் அருகில் இருக்கும் சிறப்பான விடயங்களை இழக்கிறான். இதனால் நிம்மதியின்றி அலைகிறான்.

ஆக, சிந்தனையின் செயல்பாடே சிறப்பான வாழ்க்கைக்கு அடித்தளம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rooban_Arumugam&oldid=3524293" இலிருந்து மீள்விக்கப்பட்டது