பயனர்:S.Elaiyaraja/மணல்தொட்டி
பல்கலைக்கழகத் துறைகள்
தொகுபாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 துறைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 54 பட்ட மேற்படிப்புகளும் முதுதத்துவமாணி, முனைவர் பட்ட ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.
- தமிழ்த் துறை : 1984- ஆம் ஆண்டு தமிழும் மொழியியலும் ஒருங்கிணைந்த துறையாகத் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் தலைவராக முனைவர் கி. கருணாகரன் அவர்கள் பொறுப்பேற்றார். அதன்பின் 1986- ஆம் ஆண்டு தமிழ்த்துறை தனியாகப் பிரிந்தது. அதன் தலைவராக முனைவர் ந. செயராமன் அவர்கள் பொறுப்பேற்றார். தொடர்ந்து முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம், முனைவர் இரா.சந்திரசேகரன், முனைவர் சி. மா. இரவிச்சந்திரன், முனைவர் வ.ஜெயா, முனைவர் தே.ஞானசேகரன் ஆகியோர் துறைத்தலைவர்களாகவும் முனைவர் ரா. செயராமன், முனைவர் மு. ஜீவா, முனைவர் ஓ. பாலகிருஷ்ணன் அகியோர் பேராசிரியக்களாகவும் பணியாற்றினர். தற்போது முனைவர் சி.சித்ரா அவர்கள் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். இத்துறையில் முனைவர் ச.தங்கமணி, முனைவர் சு.ஆனந்தவேல், முனைவர் செ. இளையாராஜா, முனைவர் ச. கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.