SUNDHAI Ramasaravanan
Joined 6 நவம்பர் 2013
சுந்தம்பட்டி ஆர்.எஸ். எமைப்பற்றி ........
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் சுந்தம்பட்டி கிராமத்தில் ஏழை விவசாயிகளான இராமலிங்கம் செல்வம் தம்பதிகளுக்கு மகனாப்பிறந்து அறிவியல் நிறைஞர் பட்டம் கல்வியல் நிறைஞர் பட்டம் பின் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்று முதலில் பட்டதாரி ஆசிரியர் பின் முதுகலை பட்டதாரிஆசிரியர் பின்னர் உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியராகப் பணி தொடர்கிறது.
புதுக்கோட்டையில் தொடர்தமிழ் பணி து}ய்மையுடன் தொண்டாற்றிவரும் கவிராசன் அறக்கட்டளை வழங்கிய நல்லாசிரியர் விருது மகிழ்வித்து மகுடம் சூட்டியது அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தில் சிறை சென்று சில திங்கள் பணி நீக்கம் என்ற அனுபவம் எமை செம்மைபடுத்தியது.
பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகங்களில் மாவட்டப்பொறுப்புகள் எனை பொதுநலத்தொண்டுகளில் புகச்செய்தது.