பொல்லடிக்கலை - முஹம்மது சப்ரி

எம் சமூகத்தில் வாழ்ந்த மூத்தோர் தங்களது பொழுதுபோக்கிற்காகவும், தமக்கென்று ஓர் அடையாளம் தேவையென்று கண்டுபிடித்த கலைகளில் ஒன்றுதான் பொல்லடி எனும் நாட்டுப்புறக்கலை. இது வாய்மொழியாக வந்த கலையாகும். இக்கலை முஸ்லிம் சமூகத்தில் பேணப்பட்டு வருகிறது. தற்காலத்தில் அழிவடைந்து வரும் கலையாக உள்ளது வேதனை தரக்கூடிய விடயம்.

குறிப்பிட்ட சிலர் ஒன்றுசேர்ந்து நடந்து கொண்டே பாடல் பாடி பொல்லினால் மாறி மாறி அடித்து ஆடும் ஆட்டமே பொல்லடி. பொல்லடிக்கு பயன்படும் பொல்லானது பலகையால் வளைவாக சீவப்பட்டு கைப்பிடி வைத்து அதன் சத்தம் வரக்கூடிய சலங்கை கட்டப்படும். அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து எழுப்பும் சத்தம் கேட்போருக்கு உற்சாகத்தை வரவழைக்கும்.

தந்தனத்தந்தன என்ற சந்தத்தோடு ஆரம்பிக்கும்பாடல் இடையிடையே வரிகளாலும் பாடப்படும். பொல்லடியில் நுணுக்கமான பார்வையும் சிந்தனையும் கலைஞர்களுக்கு தேவை. இல்லையெனில் தவறான ஓசைகளை எழுப்பும். இதனை பழக்குபவர் அண்ணாவியார் எனப்படுவர். கலைஞர்கள் அனைவரும் வட்டவடிவமாக நின்று ஆடிப்பாடும் போது மக்கள் அதனை சுற்றி நின்று பார்வையிடுவர்.

இந்நிகழ்வு விசேடமாக திருமண வீடுகள், கத்னா வீடுகள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றில் நடைபெறும். இளைஞர்கள் இக்கலையை கற்று வளர்க்க முன்வர வேண்டும். எமது முதுசக்கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sabryadp&oldid=2605348" இலிருந்து மீள்விக்கப்பட்டது