பயனர்:Sadamhasani/மணல்தொட்டி

"அ.சதாம் உசேன் ஹஸனி"

தொகு
 
பணி:ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் பிறப்பு:28/12/1991 ஊர்:தொண்டி

பெற்றோர்கள் பெயர்:

தொகு

தந்தை பெயர் :மு.அஹமது ஜலாலுதீன்

தொகு

தாயார் பெயர்:அ.ஜரினா பேகம்

தொகு

ஆரம்ப கல்வி :

தொகு

அரசு மேற்கு தொடக்கப் பள்ளி தொண்டி

உயர் நிலைக் கல்வி:

தொகு

செய்யது முஹம்மது அரசு மேல் நிலைப்பள்ளி தொண்டி

மேல் நிலைக் கல்வி:

தொகு

அரசு ரயில்வே மேல்நிலைப்பள்ளி பெரம்பூர் சென்னை.

கல்லூரி கல்வி :

தொகு

பாரதிதாசன் பல்கலை கழகம் திருச்சி.

உஸ்வத்துல் ஹஸனா ஷரியத் கல்லூரி பள்ளபட்டி.

சதாமின் சிறுபிராய குறு வரலாறு:
தொகு

சதாம் சிறு பருவத்திலிருந்தே கற்கும் வேட்கை கொண்டவராகவே திகழ்ந்தார்.தன்னுடைய ஆரம்ப கல்வியிலேயே பாடசாலைகளில் தன்னுடைய புத்தி கூர்மையாலும் துறுதுறுவென சிறந்து செயல்படும் பன்பாலும் அனைத்து ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பெற்றுத்திகழ்ந்தார்.குறிப்பாக கணக்குப்பாடத்தில் மிக கைதேர்ந்தவராக செயல்பட்டுவந்தார் என்பதை இப்பொழுதும் அவருடைய கணித ஆசிரியர் கூறி மகிழ்வதை காண முடிகின்றது.அவ்வாறே விளையாட்டு நாட்டுப்பண் போன்றவற்றிலும் சிறுபிராயம் தொட்டே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.எனவே உயர் கல்வி கற்கத்தொடங்கும் சமயமே சாரனர் இயக்கம் மற்றும் என்.சி.சி யில் இணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.இன்னும் உயர் நிலைக்கல்வி கற்கும் பொழுதே எழுத்துத்துரையில் காலடி வைத்தார்.அது அவருக்கு புது அனுபவங்களை கொடுத்தது.

பிறகு முறையாக பல்வேறு பெரிய வகுப்பு மாணவர்கள் மூலமும் இன்னும் ஆசிரியர்கள் மூலமும் கட்டுரைகள் வடிக்கும் திறனை கற்றுத்தேர்ந்தார்.இதன் விளைவாக பள்ளியில் நடைபெறும் அனைத்து கட்டுரை போட்டிகளிலும் கலந்து பெரும் பெரும் சிறப்பு விருந்தினர்கள் மூலம் பல்வேறு பரிசுகளையும் பாராட்டுக்களையும் சிறுபிராயத்திலேயே அடைந்தும் வந்தார்.பிறகு அவரது தாயார் ஜரினா பேகம் அவர்கள் மதம் சார்ந்த ஆழமான நம்பிக்கையும் பின்புலமும் கொண்டவர் என்பதால் தனது கடைசி மகனான சதாமின் கல்வி சார்ந்த தீட்ஷன்யத்தை உணர்ந்து கொண்டு அவரை இஸ்லாமிய மத குருவாகவும் சிறந்த கல்வியாளராகவும் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.

எனவே அவரை மேல்நிலைக் கல்வி கற்க வைப்பதற்காக சென்னைக்கு இடம்பெயர்ந்தார்கள்.சென்னையில் இஸ்லாமிய வேதமான குர்ஆனை மனனம் செய்யும் அரபி மதரசாவில் சதாம் சேர்க்கப்பட்டார்.பிற்கு அங்கு சதாம் மேல் நிலைக் கல்வியையும் பூர்த்தி செய்தார்.அத்தோடு இஸ்லாமிய புனித வேதமான குரான் முழுவதையும் மனனமிட்டு "ஹாபிழ்" என்ற பட்டமும் பெற்று தன் தாயாரின் கனவையும் நினைவாக்கினார்.பிறகு தன் தாயார் சதாம் குர்ஆனை மனனமிட்டது மட்டும் போதாது என்றுணர்ந்து இஸ்லாமிய ஷரியத் சட்டம் சார்ந்த புலமையும் பெற வேண்டும் என்று விரும்பினார்.இதனால் அவரை இஸ்லாமிய ஷரியத் கல்வியையும் இன்னும் கல்லூரி கல்வியையும் சிறப்பாக போதிக்கும் ஒரு கல்லூரியில் படிக்க வைக்க விரும்பினார்.அவ்வாறே பல்வேறு ஆலோசனைகளின் அடிப்படையில் சதாம் பள்ளபட்டியில் உள்ள "உஸ்வதுல் ஹஸனா ஷரியத் சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.ஐந்து வருட அரபி இலக்கண மற்றும் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மற்றும் ஏனைய மதங்கள் சார்ந்த ஆய்வு கல்வி பாடதிட்டத்தை தனது பிடித்த கல்வி பாடமாகவும் சதாம் தேர்ந்தெடுத்தார்.மூன்று வருடம் முற்றிலும் அரபி இலக்கணத்தில் இலங்கலை பட்டத்தை திருச்சி பாரதிதாசன் பல்கலை கலகத்தில் 90 % மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று பூர்த்தி செய்தார்.அத்தோடு முற்றிலும் இலக்கண மற்றும் இலக்கிய மற்றும் பொருளாதார மற்றும் மனிதவள மேம்பாட்டு ஆய்வு கல்வி மற்றும் ஷரியத் சார்ந்த அனைத்து சட்டக் கலைகளிலும் தேர்ச்சி பெற்று வெற்றிகரமாக ஐந்தாண்டு கல்வியையும் முடித்து இஸ்லாமிய அறிஞராக மௌலவி பட்டம் பெற்று தன் தாயாரின் இரண்டாவது கனவையும் நிஜமாக்கினார்.


பிறகு தனது தாயார் சொந்த ஊரிலேயே ஆரம்ப பணியை தொடர வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தொண்டியில் இஸ்லாமிய கல்வி சங்கத்தை சார்ந்த முஸ்லிம் கல்வி சொசைட்டிக்கு சொந்தமான நான்கு பள்ளிகளில் ஒன்றான அமீர் சுல்தான் அகாடெமி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் அரபி பண்டிதராகவும் மனிதவள மேம்பாட்டாளராகவும் முதல் முதலில் பணியில் சேர்ந்தார்.(மீதம் பணிகள் என்ற தலைப்பின் கீழ் அறிந்து கொள்ளலாம்.)

பணிகள்:
தொகு
ஆதாரங்கள்
தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sadamhasani/மணல்தொட்டி&oldid=3497767" இலிருந்து மீள்விக்கப்பட்டது