ஸபீர் ஹாபிஸ்

எழுத்தாளர், தமிழ்த்துறைப் போதனாசிரியர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

  • இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூவரசை மரங்களின் சொர்க்கபுரியாக விளங்கிய ஏறாவூர் நகரில், தந்தை முஹம்மது உசனாருக்கும் தாய் பாத்தும்மாவுக்கும் நான்காவது புதல்வராக ஜூலை 15ல் ஸபீர் ஹாபிஸ் பிறந்தார்.
  • அவரது இரண்டாவது சகோதரர் முஹம்மது பஷீர், அக்காலப்பகுதியில் சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளிலும் இலங்கை வானொலியின் தமிழ், முஸ்லிம் சேவைகளிலும் சிறுகதைகள் எழுதியனுப்பி, சிறுதொகைப் பணமும், வாழ்த்தும் பெற்று வந்த காலத்தில், அவரது இடுப்பில் ஏறியமர்ந்து சில்மிஷங்கள் செய்யும் சிறுவனாக இருந்த ஸபீர் ஹாபிஸுக்கும் எழுத்தின் மீது ஆசை துளிர்விட்டது.
  • சகோதரரின் சிறுகதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகியும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டும் சமூகத்திலும் குடும்பத்திலும் வரவேற்பையும் பிரமிப்பையும் பெற்றுக் கொடுத்த நிகழ்வு, அவருள் சிறியதொரு தீச்சுடராய் பற்றிற்று.
  • அதன் பயனாக ஸபீர் ஹாபிஸின் கையில் வந்தமர்ந்த பேனா, கவிதை, சிறுகதை எனும் பெயரில் நீண்ட காலமாய் கிறுக்கி வந்தவை, இலங்கையின் இரண்டாந்தரப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பிடித்தமை அப்போது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய உற்சாகமாகவும் அங்கீகாரமாகவும் அமைந்தன.
  • எனினும், அவரது பெரியப்பா எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுடனான நெருங்கிய உறவின் பின்பே உண்மையான சிறுகதைகள் பற்றிய அறிமுகமும் புரிதலும் அவருக்குக் கிடைக்க, ஏற்கனவே எழுதிவிட்ட கதைகளுக்காக உள்ளுக்குள் வருந்திக் கொண்டு தீவிர வாசிப்பில் இறங்கியதன் விளைவாக நல்ல பல இலக்கியப் படைப்புகளையும், இலங்கையில் நல்ல எழுத்தாளர்களிடையே அறிமுகமும் அவருக்குக் கிடைத்தன.
  • சமயக் கல்வியில் நீண்ட காலத்தைச் செலவிட்டதன் விளைவாக, ஆரம்பத்தில் சமய இலக்கியங்களில் தீவிர வாசிப்பும் தேடலும் அவாவாகவும் நிர்ப்பந்தமாகவும் அவரது வாழ்வில் இடம்பெற்றன. அதன் விளைவாக சமய நூல்கள் பலவற்றை எழுதவும் மொழிபெயர்க்கவும் வாய்ப்புக் கிடைத்ததுடன் அவற்றுக்கு ஒரு சமூக வட்டத்துக்குள் நல்ல வரவேற்பும் கிடைத்தன.
  • தமிழ் இலக்கியம் எனக் களமிறங்கிய பின், முதலாவதாக வெளியிட்ட பாலைவனத்து பயணங்கள் கவிதைத் தொகுதி, அதைத் தொடர்ந்தவையான ஆற்றங்கரை மற்றும் பிற கதைகளுடன் சிறுகதைத் தொகுதி, உணர்வுகளால் வாழ்வை வரைதல் நெடுங்கவிதைத் தொகுதி, இரவுப் போர்வையும் நானும் கவிதைத் தொகுதி, இறுக்கம் சிறுகதைத் தொகுதி என்பன கலை இலக்கிய வட்டத்தில் அவருக்குப் பெரும் புகழையும் பாராட்டையும் ஈட்டிக் கொடுத்தன.
  • 1997இல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் 1998ல் க.பொ.த. உயர்தரப் பரீட்சையிலும் மிகச் சிறப்பாகச் சித்தியடைந்து, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை கலாசாரப் பிரிவில் அனுமதி பெற்றார். 2004 பட்டப்படிப்பை சிறப்புச் சித்தியுடன் பூர்த்தி செய்தார்.

தொழில் முயற்சி தொகு

  • 2005 - 2007 வரை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறையில் தற்காலிக விரிவுரையாளராகக் கடமையேற்றார். இக்காலப்பகுதியில் அவர் எழுதிய பல கல்வியியல் மற்றும் சமூகவியல் ஆக்கங்கள் இலங்கையின் பல பத்திரிகைகளிலும் பிரசுரமாகி அவருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெயரைப் பெற்றுக் கொடுத்தன.
  • 2007 - 2008 வரை, ஈரான் இஸ்லாமியக் குடியரசு தூதரக கலாசாரப் பிரிவின் செயலாளராகப் பணியாற்றினார். இக்காலப்பகுதியில், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு, அரசாங்கப் பாடசாலைகளுக்கான போதனாசிரியராகப் பொறுப்பேற்றார்.
  • 2008-2015 வரை, மீராவோடை அல்ஹிதாயா மகாவித்தியாலயத்தில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியராகவும், கணினி கற்கை நிலைய முகாமையாளராகவும் கடமையாற்றினார்.
  • 2016 தொடக்கம், மட்|மம|கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் சிரேஷ்ட ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.

எழுத்துத்துறை ஈடுபாடு தொகு

கல்வி பயிலும் காலத்திலே எழுத்துத்துறையில் ஈடுபடலானார் இவரின் ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன சமயக் கல்வியில் நீண்ட காலத்தைச் செலவிட்டதன் விளைவாக, ஆரம்பத்தில் சமய இலக்கியங்களில் தீவிர வாசிப்பும் தேடலும் அவாவாகவும் நிர்ப்பந்தமாகவும் அவர் வாழ்வில் இடம்பெற்றன. அதன் விளைவாக சமய நூல்கள் பலவற்றை சுயமாகவும், மொழிபெயர்த்தும் எழுதியுள்ளார்.

வெளியிட்ட நூல்கள் தொகு

சமய நூல்கள்:

  • பாத்திமா ஸஹ்ரா (அலை) – வரலாறும் முன்மாதிரிகளும் - (சமயவியல்) 1998, வெளியீடு: கௌஸர் சொஸைட்டி, கொழும்பு
  • தியாகச் செம்மல் இமாம் ஹுஸைன் (அலை) - (சமயவியல்) 1999, வெளியீடு: கௌஸர் சொஸைட்டி, கொழும்பு
  • அல்ஹஜ் - நடைமுறை வழிகாட்டல்கள் - (சமயவியல்) 2000, வெளியீடு: இன ஐக்கிய சனசமூக நிலையம், ஏறாவூர்
  • துஆவின் தாத்பரியங்கள் - (சமயவியல்) 2005, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • இஸ்லாமிய வாழ்வியல் கடமைகள் - (சமயவியல்) 2006, வெளியீடு: இஸ்லாமிய கற்கைகள் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்
  • வஸீலா - சமய ஆய்வுத் தொகுப்பு - (சமயவியல்) 2006, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • இஸ்லாமிய நோக்கில் சுதந்திரம் - (சமயவியல்) 2006, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • இலங்கையில் அஹ்லுல்பைத் பாரம்பரியங்கள் - (சமயவியல்) 2006, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • வெள்ளிக்கிழமை குத்பாக்கள் - (சமயவியல்) 2010, வெளியீடு: கலாசாரப் பிரிவு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு
  • நபி (ஸல்) அவர்களின் பிரதிநிதி - (சமயவியல்) 2011, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • நபி (ஸல்) அவர்கள் இமாம் அலீ (அலை) அவர்களுக்கு வழங்கிய நல்லுரைகள் - (சமயவியல்) 2011, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்களின் மருத்துவம் - (சமயவியல்) 2011, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • இஸ்லாமிய எண்ணக்கருக்கள் - (சமயவியல்) 2011, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • இமாம் ஹுஸைனின் இஸ்லாமியப் புரட்சி - (சமயவியல்) 2011, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு

இலக்கிய நூல்கள்:

  • பாலைவனத்துப் பயணங்கள் - (கவிதைத் தொகுப்பு) 2002, வெளியீடு: இளங்கலை இலக்கியப் பேரவை, வாழைச்சேனை
  • உணர்வுகளால் வாழ்வை வரைதல் - (கவிதைத் தொகுப்பு) 2003, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • இரவுப் போர்வையும் நானும் - (கவிதைத் தொகுப்பு) 2006, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • ஆற்றங்கரை மற்றும் பிற கதைகள் - (சிறுகதைத் தொகுப்பு) 2007, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • இறுக்கம் - (சிறுகதைத் தொகுப்பு) 2011, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு
  • ஒளியும் நிலவு - (சிறுகதைத் தொகுப்பு) 2012, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு

ஏனையவை:

  • அன்றாட வாழ்வில் அறபு மொழி - (மொழியியல்) 1999, வெளியீடு: மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரி, மீராவோடை, ஓட்டமாவடி
  • ஈராக் தேசமும் சதாமின் ஆட்சியும் - (விமர்சனம்) 2004, வெளியீடு: அல்ஹுதா பப்ளிகேஷன்ஸ், கொழும்பு


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Safeer_Hafis&oldid=2009872" இலிருந்து மீள்விக்கப்பட்டது