Saimalar tam pu
Joined 2 சனவரி 2018
தலைப்பு : நீதிக் களஞ்சியம்
மக்களின் நல்வாழ்க்கைக்கும் தேவையான அறக் கோட்பாடுகளை எடுத்துரைக்கும் நூலாக நீதிக் களஞ்சியம் திகழ்கிறது ..
வரலாறு: முதற் பதிப்பு 2007 ஆறாம் பதிப்பு 2014 பதிப்பாசிரியர் : எஸ் .கெளமாரீஸ்வரி நூலின் பெயர் : நீதிக் களஞ்சியம் பொருள் : இலக்கியம் பக்கங்கள் : 208 சங்கம் மருவிய கால இலக்கியங்களில் தொடர்ச்சியாய்ப் பிற்கால நீதி இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவாய் திகழ்பவை ஆத்திசூடி, கொன்றைவேந்தன் , உலகநீதி , வெற்றிவேற்கை , மூதுரை, நல்வழி , நன்னெறி , என்னும் இலக்கியங்களாகும்
சங்க மருவிய கால இலக்கியங்களில் கூறப்பட்ட அறங்ளே பிற்கால நீதி நூல்களிலும் பேசப்பட்டிருக்கின்றன பிற்கால நீதிநூல்கள் அறம் கூறும் முறையினாலும் சிறந்து விளங்கின்றன
அறம் , கொடை , குற்றமற்ற வாழ்க்கை , சுற்றம் போற்றல் , நட்புத்தேர்தல் , ஆராய்ந்து துணிதல், முயற்சி உடைமை , இன்சொல் பேசுதல் , சினம் தணித்தல் , பொய்போசாதிருத்தல் , சூதுதவிர்த்தல் , வறியவர்களுக்கு உதவுதல் என்னும் பல்வேறு களங்களில் இவ்விலக்கியங்களின் பாடல்கள் அறக்கருத்துகளை எடுத்துக் கூறுகின்றன