பயனர்:Sakthisowndharya.s/மணல்தொட்டி

பாவ்னாஜாட் (பிறப்பு: மார்ச் 1, 1996 கப்ரா,ராஜஸ்தான்) 20 கிலோ மீட்டர் பந்தய நடைபயிற்சி (Race walking) போட்டியில் பங்கேற்கும் ஓர் இந்தியவிளையாட்டு வீராங்கனை.இந்த நிகழ்விற்கான இந்திய தேசியசாதனையை அவர்படைத்துள்ளார். இந்த சாதனையை தொடர்ந்து, பாவ்னா, 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.


தனிப்பட்டவாழ்க்கைமற்றும்பின்னணி:

ஜாட் 1 மார்ச் 1996 அன்று ராஜஸ்தானின் கப்ராகிராமத்தில் பிறந்தார். அவர் ஒரு ஏழைவிவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை சங்கர்லால்ஜாட்இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் மற்றும் அவரது தாயார் நர்சோதேவி ஒரு இல்லத்தரசி. [1]

உடன் பிறந்தவர்கள் மூன்று பேரில்இளையவரானஜாட்,தடகளத்தில்ஆர்வம் கொண்டிருந்ததோடு தேசியசாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்கவிரும்பினார். அதற்கு அவர் முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டியிருந்தது. அவரது பள்ளி ஆசிரியர் ஒரு முறை அவரை மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் சென்றிருந்தார். இருப்பினும், அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது, அனைத்து தடகளபோட்டிகளிலும் பங்கேற்பாளர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது.ஆனால் பந்தயநடைபயிற்சி நிகழ்வில் மட்டும் ஒருகாலியிடம் இருக்கவே, ஜாட்அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். [2]

ஜாட், உடற்கல்வி ஆசிரியர்ஹிராலால் குமாவத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக பந்தயநடைபயிற்சிக்கான பயிற்சியைத்தொடங்கினார்.  [6] இருப்பினும், பயிற்சி மற்றும் பயிற்சிக்கான உள்கட்டமைப்பு இல்லாதது உள்ளிட்ட சவால்கள் அவருக்கு இருந்தன. அவருடைய கிராமப்பள்ளியில் பயிற்சிக்கு சரியானமைதானம்கூட இல்லாததால்,அவரது கிராமத்தைச்சுற்றியுள்ள பகுதிகளில்பயிற்சி எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். அதுவும் எளிதானதாக இருக்கவில்லை. அவரது கிராமத்தில் ஒரு இளம் பெண்ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு பயிற்சிசெய்வது ஒப்புக்கொள்ளப்படாத விஷயமாக இருக்க, அதற்காகவே யாரும் பார்க்காமல் இருக்க, அவர் அதிகாலையில் பயிற்சி செய்யவேண்டியிருந்தது. அவரது குடும்பத்தின் நிதி நெருக்கடி மற்றொரு பெரிய தடையாக இருந்தது. அதனால் ஜாட்,கல்லூரி படிப்பை பாதியில் விடவேண்டியிருந்தது.ஆனால்தன்குடும்பத்தினர் தன்விளையாட்டு வாழ்க்கையை முடிந்தவரை அனைத்து வகையிலும் ஆதரித்ததாக கூறுகிறார் ஜாட். அவரது மூத்த சகோதரரும் கல்லூரியைவிட்டு வெளியேறி, ஜாட்டின்பயிற்சி தேவைகளை ஆதரிப்பதற்காக ஒருவேலையில் சேர்ந்தார். தனது குடும்பத்தின் ஆதரவு மற்றும் தியாகங்களால் மட்டுமே தனது விளையாட்டு வாழ்க்கையில்முன்னேற முடிந்ததாக ஜாட் கூறுகிறார்.[2]

2017 ஆம்ஆண்டு ஜாட்டிற்கு இந்தியரயில்வேயில்வேலை கிடைத்தது. அது அவருக்குமிகவும்தேவையான நிதிஸ் திரத்தன்மையை வழங்கினாலும், எட்டுமணிநேர வேலை என்பது,அவரது பயிற்சிக்கு தடையாக இருந்தது. அதாவது குறைந்த நேரம் மட்டுமே அவரால் பயிற்சி செய்ய முடிந்தது.[5]

தொழில்முறைசாதனைகள்:

2016ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த ஜூனியர்தேசியசாம்பியன்ஷிப் போட்டியில் ஜாட், 10 கிலோமீட்டர் பந்தய நடைபயிற்சி நிகழ்வில் வெள்ளிப்பதக்கம் வென்றார். [5]

2019ஆம்ஆண்டில் அகில இந்திய ரயில்வே போட்டியில், 1: 36: 17 விநாடிகளில் போட்டியை முடித்து தங்கப்பதக்கம் வென்ற போது தனது முதல் பெரிய வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றி அவருக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. ஒரு வருடம் கழித்து, ராஞ்சியில் நடைபெற்ற தேசியசாம்பியன்ஷிப் 2020-ல் 1: 29: 54 விநாடிகளில் 20 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயநடைபயிற்சி போட்டியை முடித்து சாதனை படைத்ததன் மூலம் தங்கப்பதக்கம் வென்றார். புதிய தேசிய சாதனை படைத்தது, அவரை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற உதவியது. ஏனெனில் ஒலிம்பிக்கிற்கான கட்-ஆஃப்குறி 1 மணி 31 நிமிடங்கள்ஆகும்.  [3][4] இந்தநிகழ்வில் ஜாட் படைத்த சாதனைக்கு, ராஜஸ்தான்முதல்வர்அசோக்கெலோட் தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார். [1]

இந்தியாவில் உள்ள பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சர்வதேச போட்டிகளில் வெளிநாட்டு தடகள வீரர்களுடன் போட்டியிட, இன்னும் நிறைய ஆதரவும், வாய்ப்புகளும் தேவை என்று ஜாட் கூறுகிறார். ஒருசர்வதேசநிகழ்விலும், சர்வதேசபோட்டியாளர்களுடன்போட்டியிடதனக்குஇன்னும் வாய்ப்புகிடைக்கவில்லைஎன்றுஅவர்கூறுகிறார். எனினும், அவரதுகடந்தகாலங்களைக்கருத்தில்கொண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குதான் ஒரு பதக்கத்தை வெல்லும் நம்பிக்கையில் இருப்பதாகவும் ஜாட் கூறுகிறார். [2]


வலதுகைபக்கபெட்டிதகவல்:

பெயர்: பாவ்னாஜாட்

பிறப்பு: 1 மார்ச் 1996 கப்ரா, ராஜஸ்தான்

குடியுரிமை: இந்தியா

விளையாட்டு: பந்தயநடைபயிற்சி

பிரதிநிதித்துவம்: இந்தியா


பதக்கங்கள்:

ஜூனியர் தேசியசாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம்

அகில இந்தியரயில்வேபோட்டியில், 2019ல்தங்கப்பதக்கம்

2020 தேசியசாம்பியன்ஷிப்பில்தங்கப்பதக்கம்


சான்றாதாரங்கள்:

1. https://hindi.oneindia.com/news/jaipur/bhawna-jat-biography-in-hindi-rajasthan-s-daughter-qualified-for-tokyo-olympics-2020/articlecontent-pf258410-546858.html

2. https://www.bbc.com/tamil/sport-55946603

3. https://www.thehindu.com/sport/athletics/bhawna-jat-qualifies-for-olympics-in-20km-race-walk/article30829190.ece

4. https://www.patrika.com/other-sport-news/Bhawna-jat-qualified-for-tokyo-olympics-in-pad-chalan-5778355/

5. https://thelogicalindian.com/news/bhawna-jat-rajasthan-tokyo-olympics-race-walker-19775


6. https://www.newindianexpress.com/sport/other/2020/feb/16/rajasthan-daughter-creates-new-national-record-qualifies-for-tokyo-olympics-2104282.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sakthisowndharya.s/மணல்தொட்டி&oldid=3109018" இலிருந்து மீள்விக்கப்பட்டது