ராஜஸ்தானின் சுற்றுலா மையங்கள்

ராஜஸ்தான் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா மையமாக விளங்குகிறது. இதன் பழங்காலக் கோட்டைகள், அரண்மனைகள், கலாச்சாரம் மற்றும் கலை ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாக அமைந்துள்ளன.[1][2]இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் மூன்றில் ஒருவர் ராஜஸ்தானுக்குச் செல்கின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் , உதய்பூர் , பிகானீர் , ஜோத்பூர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடங்களாக உள்ளன. ராஜஸ்தானின் உள்ளூர் உற்பத்தியில் 8 சதவீதம் சுற்றுலாப் பயணிகளால் வர்த்தகம் செய்யப்படுகிறது. சுற்றுலா மூலம் உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது. கைவிடப்பட்ட பெரும்பாலான பழைய கோட்டைகள் சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

முக்கியமான இடங்கள்

தொகு
  • அகோர்
  • அஜ்மீர்
  • பார்மர்
  • பிகானீர்
  • புண்டி
  • ஜெய்ப்பூர்
  • ஜெய்சால்மர்
  • ஜோத்பூர்
  • அபு மலை
  • நாத்ட்வாரா
  • புஷ்கர்
  • ராணக்பூர்
  • ரந்தம்போர்
  • ஷிகாவதி
  • உதய்பூர்

மேற்கோள்கள்

தொகு