Sandhana xaviour Bilavendhiran
Joined 21 திசம்பர் 2017
அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் B.சந்தான சேவியர். அறிவியலில் உள்ள மிகுந்த ஆர்வத்தின் காரணமாகவும், அறிவியலில் எதையாவது புதிதாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும், நான் சுயமாக சிந்தித்து, ஆராய்ந்து கண்டறிந்த, கோட்பாட்டு ரீதியான சில அறிவியல் உண்மைகளை இந்த ஆராய்ச்சி கட்டுரையில் (Thesis) மிகத் தெளிவாக விளக்கியுள்ளேன். என்னுடைய இந்த ஆய்வறிக்கையானது நாம் இதுவரை அறிந்திராத சில அறிவியல் உண்மைகளை, இரண்டு புதிய இயக்க விதிகளின் மூலம் நமக்கு புதிதாக விளக்குவதாக அமையும். இதன் மூலம் இயற்கையில் நடைப்பெறும் இயக்கங்களைப் பற்றிய நம்முடைய புரிதலும், கண்ணோட்டமும் இப்போது இருப்பதை விட இன்னும் தெளிவாகும் என்பது என்னுடைய நம்பிக்கை. கோட்பாட்டு ரீதியான அறிவியல் என்பது, "இயற்கையின் படைப்பின் இரகசியத்தை, மனிதன் சுயமாக சிந்தித்து அறிய முயற்சிக்கும் செயல்" என்று தான் நான் பார்க்கிறேன். இதன் அடிப்படையில் எனது சிந்தைக்கு எட்டிய, இதுவரை நடைமுறையில் இல்லாத சில அறிவியல் உண்மைகளை இக்கட்டுரையில் வெளியிடுகிறேன். இயற்கையில் நம்மைச் சுற்றி நடைப்பெறும் இயக்கங்களின் உண்மையான காரணங்களை தெளிவாக புரிந்துக் கொள்வதற்காக 'சேவியர்- இயக்க விதிகள்' என்ற தலைப்பில் இரண்டு இயக்க விதிகளை புதிதாக உருவாக்கியுள்ளேன். இவை விசையினால் நடைப்பெறும் இயக்கங்களை மிகத் துல்லியமாக விளக்கும் வகையில் அமைந்துள்ளன. 'அறிவியல் உண்மைகள் என்பவை புரிதல் அதிகரிக்கும் போது மாறிக் கொண்டே இருக்கும்' என்பதைப் போல, நான் வெளியிட்டுள்ள சில அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவியல் மீதான ஆர்வத்தையும், இயக்கங்களைப் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்து, ஓர் புதிய வழியை அறிவியல் உலகத்தில் திறந்து வைக்கும் என நான் நம்புகிறேன். ....நன்றி..*****