சஞ்சய்

தொகு

படிமம்:சஞ்சய்.jpg சுவிசில் "சாவிலும் வாழ்வு" நிகழ்வின் 20 ஆவது நாள் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை தூர்க்கா, பிறிபேர்க் மாநிலங்களில் நடைபெற்றன.


தமிழர் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தூர்க்கா தமிழர் கலை, கலாச்சார மன்றத்தினால் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வினை தூர்க்கா பகுதியைச் சேர்ந்த கிராம சபையின் தலைவர் திருமதி. guttinger heidi மற்றும் சமூக சேவையாளாரான திருமதி. zink ஆகியோரும் குத்துவிளக்கினை ஏற்றி தொடங்கி வைத்தனர்.

பிறிபேர்க் மாநிலத்தில் அப்பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் நிகழ்வினை ACAT எனப்படும் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பின் பிரதிநிதிகளான Jean Widmer, திருமதி சஞ்சய், திரு. Jean Hervieux ஆகியோர் சுடரேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினர்.இரு போராட்டங்களிலும் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர்.

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை வெளியுலகுக்கு வெளிக்காட்டும் பதாகைகளை மக்கள் தாங்கியிருந்தனர்

தமிழ் இளையோர் அமைப்பினரும், தமிழப் பாடசாலை மாணவர்களும் சுவிஸ் தேசிய மொழிகளில் விளக்கப் பிரசுரங்களை விநியோகித்தனர். சுவிஸ் மக்களின் கேள்விகளுக்கும் அவர்கள் விளக்கமளித்தனர்.

சுவிசின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்புப் போராட்டம் 21 ஆவது நாளான இன்று Schwyz (ஸ்வைச்) மாநிலத்திலுள்ள Einschiedeln (அயன்சீடல்ன்) தேவாலய வளாகத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sanjai95~tawiki&oldid=1843376" இலிருந்து மீள்விக்கப்பட்டது