பயனர்:SanjayMuthusamy/மணல்தொட்டி

நிழல் மறையும் நாள் (அ) பூஜ்ய நிழல் நாள் , Zero Shadow Day 20.04.2017

"வானியல் சிறப்பு மிக்க நிகழ்வு நிகழ இருக்கின்றது"

தொகு

நிழல் நாள் (Zero Shadow Day) என்றால் என்ன? பொதுவாக,ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்குச் செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே உச்சியில் இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது, நிழல் நம் கால்களுக்கு கீழே மறைந்து இருக்கும்.

ஆனால், சூரியன் எல்லா நாட்களிலும் நம் தலைக்கு மேலே செங்குத்தாக உச்சியில் வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டு முறை மட்டுமே. நம் இருப்பிடத்திற்கு மேல் நேர் செங்குத்தாக வரும். அவ்விரு நாட்களில் நடு உச்சிவேளையில் பொருட்களின் நிழல் குறைந்துகொண்டே வந்து, பூஜ்ஜியமாகின்றது. அந்த நாளையே நிழல் மறையும் நாள்' அல்லது, பூஜ்ய நிழல் நாள் Zero Shadow Day என்கிறோம்.

உலகின் அனைத்து நாடுகளிலும் இந்நிகழ்வைக் காண முடியுமா?...

மகர ரேகைக்கு Tropic of Capricorn டிகிரி வடக்கிலும்.., கடக ரேகைக்கு Tropic of Cancer 23.5 டிகிரிக்கு தெற்கிலும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்நிகழ்வைக் காண முடியும்.


நாம் இருக்கும் இடத்தில் எப்போது இந்நிகழ்வு வரும் என்று எப்படித் தெரிந்துகொள்வது?

அனைத்து இடங்களிலும் ஒரேநாளில் இது நிகழ்வதில்லை. அவ்விடத்தின் அட்ச ரேகை ( Latitude ), தீர்க்கரேகை (Longitude) களுக்கேற்ப..., வெவ்வேறு நாட்களில் நிகழும். சூரியனின் வடநகர்வு நாட்களில் (உத்தராயணம்) ஒருநாளும், தென் நகர்வு நாட்களில் ( தட்சிணாயணம் ) ஒருநாளும் என..., ஆண்டிற்கு இருமுறை நிகழும். மேலும், அது, மதியம் சுமார் 12 மணியை ஒட்டி..., நிழல் பூஜ்ஜியமாகும்.

எங்கெங்கு காணலாம்...?

சென்னை- ஏப்ரல் 26 & ஆகஸ்ட் 16

திருச்சி - ஏப்ரல் 17 & ஆகஸ்ட் 16

மதுரை - ஏப்ரல் 15 & ஆகஸ்ட் 27

சேலம் - ஏப்ரல் 20 & ஆகஸ்ட் 22

மற்ற ஊர்க்காரர்கள் பின்வரும் தொடர்பு மூலமாக உங்கள் இடத்தைத் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் ஊரில் எப்போது இந்நிகழ்வு நடைபெறும் என அறிந்துகொள்ளலாம்.[1]

இதைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்?

பல்வேறுப் பொருட்களின் நிழலின் நீளங்களை உற்றுநோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும், புவியின் சுழற்சி வேகத்தை கணக்கிடவும்..., புவியின் அச்சு, சாய்வாக உள்ளதையும்..., செயல்பாட்டு முறைகளில் கற்கவும் உறுதுணையாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எரட்டோஸ்த்தனஸ் ( Eratosthenes ) என்ற கிரேக்க அறிஞர்...,  இரண்டாயிரத்து இருநூறு  ஆண்டுகளுக்கு முன்பே...,  நிழலைக் கண்காணித்ததன் மூலம்..., இந்த நிழல் மறையும் நாளன்று தான்..,  பூமியின் சுற்றளவை, சரியாக அளந்து கூறினார்...!  

இன்னாளின்.... நிழல் நோக்குவோம்..! இயற்கையின்.... நிஜம் அறிகுவோம்...!

  1. https://alokm.com/zsd.html. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SanjayMuthusamy/மணல்தொட்டி&oldid=2259450" இலிருந்து மீள்விக்கப்பட்டது