அரிவு



மரம் அரிவு ஆலை ஒன்றின் திறப்பு விழா வில் பரிமாறப்பட்ட மதிய உணவில் நஞ்சு கலந்ததில் அதை உட்கொண்டவர்களில் 20 பேர் மயக்கம் மற்றும் உணர்விழந்த நிலை யில் யாழ்.ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டி ருக்கின்றனர். இவர்களில் இருவர் தொடர்ந் தும் மயக்க நிலையில் உள்ளனர் என்று மருத் துவமனை வட்டாரங்கள் நேற்றிரவு தெரி வித்தன. கொக்குவில், நந்தாவில் பகுதியில் புதி தாக நிறுவப்பட்ட மரம் அரிவு ஆலையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த வைபவத்தில் மதிய உணவு பரிமாறப்பட் டது. உணவை உட்கொண்ட சிறிதுநேரத்தில் பலருக்கும் தலைசுற்று மற்றும் மயக்கம் ஏற் பட்டது. மதிய உணவை உட்கொண்டவர்களில் இருவர் மயக்கமடைந்தனர். பெண்கள் உட் பட ஏனைய பலருக்கு உடற்சோர்வு ஏற்பட் டது. உணவு உட்கொண்ட அனைவரும் உட னடியாக யாழ்.மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். மதிய உணவு சமைத்தபோது கறையானுக் குப் பயன்படுத்தப்படும் ஒரு வகை நச்சுப் பவுடர் சமையலில் கலந்துள்ளது என்று கூறப் படுகிறது. கடுகுபோன்று குறுணலாக காணப் படும் இந்த விவசாய உயிரியல் நச்சுப் பொருளை கடுகு என்று எண்ணி சமையலில் சேர்த்ததனாலேயயே உணவு நஞ்சடைந்தது என்று கூறப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sat_tamil&oldid=35040" இலிருந்து மீள்விக்கப்பட்டது