தனியெழிலன்


இவர் வளர்ந்து வரும் தமிழ் கவிஞர்களுள் ஒருவர் ஆவார். இவரது சொந்த ஊர் சுவாமிமலை ஆகும். இவரது இயற்பெயர் சதீஷ் ஆகும்.


இயற்பெயர் : சதீஷ்

சிறப்புப் பெயர் : தனியெழிலன்

பிறப்பு : 20.09.2001

பெற்றோர் : காளிதாசு & உசா


உடன்பிறந்தோர் : கௌசல்யா உமாமகேசுவரன்

படிப்பு : இளங்கலை பொறியியல்(கணினி அறிவியல்)


இளமை :

தஞ்சாவூர் இராமலிங்கத்தின் மகன் சுவாமிமலை தவில் வித்வான் காளிதாசு என்பவருக்கும் மங்கநல்லூர் அருகிலுள்ள கப்பூர் குஞ்சிதபாதம் மகள் உசா என்பவருக்கும் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் தான் தனியெழிலன். இவருடைய பெற்றோர் இவருக்கு சாமிநாதன் என பெயரிட விரும்பினர். எனினும் அவர்களுடைய உறவினர்களின் அறிவுறுத்தலால் சதீஷ் என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.


இவர் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை சுவாமிமலை தொடக்கப்பள்ளியில் பயின்றார். அதன் பின் இவரது குடும்பம் வறுமையின் காரணமாக பந்தநல்லூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பைப் பந்தநல்லூர் தொடக்கப்பள்ளியிலும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பந்தநல்லூர் மேல்நிலைப் பள்ளியுிலும் பயின்றார். மேல்நிலைக் கல்வியை கும்பகோணம் சிறிய மலர் பள்ளியில் பயின்றார்.

தமிழ் ஆர்வம் :

இவரது பெற்றோர்களுக்கு படிப்பறிவில்லை எனினும் இவருக்கு சிறு வயது முதலே தமிழ் ஆர்வம் இருந்து வந்துள்ளது. பந்தநல்லூர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக பயிலும் ஒரு சில மாணவர்களுள் இவரும் ஒருவர் என்று பெயர் பெற்றார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்ததோடு அவர் பள்ளியிலேயே முதல் முறையாக கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சிறப்பித்தார். அதன் பின் சிறிய மலர் பள்ளியில் தனது தமிழ் ஆசிரியர் லூயிஸ் அவர்கள் கவிதை எழுதுவதைத் தேர்வறைகளில் தானும் எழுதத்துவங்கிவிட்டார்.

கும்பகோணம் சிறிய மலரில் படித்த காலங்களில் தனியாக விடுதியில் தங்கியிருக்க நேர்ந்தது. அதுவே அவருக்கு வாழ்க்கைப் பாடங்களை கற்பித்தது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sathish_kalidoss&oldid=2964232" இலிருந்து மீள்விக்கப்பட்டது