முனைவர் சத்யா வேல்முருகன் (இலக்கிய உலகிற்கு), முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இருபது ஆண்டுகால ஆராய்ச்சி அனுபவமிக்கவர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டமும், புதுடில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர். அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் உள்ள ஒஹாயோ பல்கலைக் கழகத்தில் இயற்கை வளங்கள் மேலான்மையில் பயிற்சி பெற்றவர். 

இவர் இயற்கைவள மேலாண்மை, மக்களும் பருவநிலை மாற்றமும், மாறிவரும் விவசாய முறைகள், பண்டைத் தமிழக வேணாண் முறைகள், சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடியினர் விவசாயம் குறித்து சர்வதேச மற்றும் தேசிய பத்திரிகைகளில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை, மனித உணர்வுகளை தமிழ் இலக்கியங்கள், நீதிநூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, சிந்திக்கவைக்கும் சிறுகதைகள், நெகிழவைக்கும் நிகழ்வுகள், வரலாறு தந்த பாடங்களை இணைத்து நகைச்சுவையை தெளித்து எழுதும் இளைய தலைமுறை தமிழ் எழுத்தாளர். இவர் சிறந்த தொழில்நுட்ப புத்தகத்திற்கான விருதும், அந்தமான் நிகோபார் துணைநிலை ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழையும் பெற்றவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sathya_velmurugan&oldid=3192650" இலிருந்து மீள்விக்கப்பட்டது