○தமிழ் அறிஞர்கள் வரிசை

○ முனைவர் பா.இறையரசன்( தஞ்சாவூர்)

○ வாழ்க்கைக்குறிப்புகள்

○பிறப்பு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருவையாறு 15 -3 -1948

கல்வி

○பள்ளிப்படிப்பு .கொரடாச்சேரி அய்யம்பேட்டை ,குத்தாலம், மதுக்கூர் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகள்.

○இளங்கலை பிஏ பூண்டி புட்பம் கல்லூரி.

○ முதுகலை சென்னைமாநிலக் கல்லூரி.

○ எம்.ஃ பில் மெய்யியல் முதுவர் ○திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்( 1985 )

○ஆய்வுத் தலைப்பு

○ தென்னாற்காடு மாவட்ட சோழர் காலக் கல்வெட்டுக்களில் தமிழ்ப்பெயர்கள்.

○முனைவர் பட்டம்( 1991 )

○தலைப்பு "முன்னோடி த்தமிழ் இதழ் ஆசிரியர் சி. சுப்பிரமணிய பாரதியார்"

பணி

○ தமிழ்ப்பேராசிரியராக அ. வீ. வா .நினைவு திரு புட்பம் கல்லூரியில் இருபத்தி ஏழு ஆண்டுகள் (1975-2003)

○ இடைப்பட்ட காலத்தில் ஒன்றரை ஆண்டுகள் திருவையாறு அரசர் கல்லூரியிலும் ஒன்றரை ஆண்டு கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார். ○ தமிழ்ப்பற்று ○ தமிழ் மொழிமீது தணியாப் பற்றுடையவர். தனித்தமிழ் மீது கொண்ட பற்றினால் தன் பெற்றோர் தனக்கு இட்ட சாமிநாதன் என்ற வடமொழிப் பெயரை தனித்தமிழில் இறையரசன் என மாற்றி அதே பெயரில் பட்டம் பெற வேண்டும் என அரசிதழில் மாற்றிய பின்னரே பட்டம் பெற்றவர் .மதுக்கூரில் மதுரை தமிழ் மன்றம் ஒன்றை 1960 -1964 வாக்கில் நடத்தினார் .தஞ்சாவூர் கீழவாசலில் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகள் மன்றம் நடத்தினார்.

○ சமூகப் பற்று

○ பூண்டி கல்லூரியில் கல்லூரி முதல்வரைத்தலைவராகக் கொண்ட மாணவர்களுக்கான சமூக நலத் திட்டத்தில்( social service leag) துணை த்தலைவராக( 1990- 1993 )இருந்து சுற்றிலுமுள்ள சிற்றூர்களில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே 400 மரக்கன்றுகள் நடச்செய்தார். முற்பகலில் மட்டுமே கல்லூரி என்பதால் பிற்பகலில் தமிழ்மாலை மன்றம் அமைத்து அனைத்து பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் பேச்சுப் பயிற்சி, கணினித் தமிழ், இதழியல் பயிற்சிகள் அளித்தார். ○.தஞ்சை மாவட்ட ஆட்சியரைத்தலைவராகக் கொண்ட( சவகர் சிறுவர் மன்றம் ) தமிழக அரசால் அமைக்கப்பெற்ற குழந்தைகள் நல அமைப்பின் துணைத் தலைவர் பொறுப்பில்( 1999- 2 013) இருந்து பணியாற்றினார் தமிழிசை, நடனம், கல்வெட்டு, ஓவியம் சதுரங்கம், கையெழுத்துப் பயிற்சி சிலம்பப்பயிற்சி, பறை இசைப் பயிற்சி, வயலின், வீணை போன்ற கருவி இசைப்பயிற்சி ஆகியன குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்தார். திருக்குறள் ஒப்பித்தல் பேச்சுப்போட்டி ,பாட்டுப்போட்டி, நடிப்பு ,நடனம் ஆகியவற்றிலும் போட்டிகள் நடத்தி குழந்தைகள் திறன்வளர்த்தார். தனித் தமிழ் ,இதழியல், வரலாறு தமிழ்த் தொண்டு, இயற்கை நலவாழ்வு ஆகியன இவருடைய தளங்கள் . ○"குழந்தைக்குத்தமிழ்பெயர்கள்" என்ற இவரது நூல்( 1982) பல பதிப்புகளைக் கண்டு உலகம் முழுவதும் தனித்தமிழ் பெயர்சூட்டு தலைப் பரப்பி வருகிறது ○ இதழியல் பணி ○இராசமாணிக்கனார் இலக்கிய வட்டத்தில் பாரதியார் மாபெரும் கவிஞர் மட்டுமல்ல அவர் ஓர் இதழ் ஆசிரியர் என்ற பெருமைக்கும் உரியவர் என நிலைநாட்டி( 25. 4 .1987)உரையாற்றினார் .அதனை முனைவர்பட்டஆய்வேட்டிலும்( 1991 )நிறுவினார் ○ தமிழ்ப்பணி ○ தஞ்சை தமிழ்ப் பேரவையின் செயலராக இருந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் தமிழ்த்தொண்டு ஆற்றியவர் .தமிழ்ப்பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழ் அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இணைப்புப்பாலமாக "திங்கள் தோறும் தீந்தமிழ்" என்று மாதம்தோறும் கூட்டங்கள் நடத்தினார் இலக்கியத் துறையுடன் இணைந்தும் அறிவியல் வளர்ச்சித் துறையுடன் இணைந்தும் அறிவியல் மற்றும் தமிழ்க்கூட்டங்களை நடத்தினார். தமிழில் கடை ப்பெயர்ப் பலகைகள் அமைத்தல் ,மதுவிலக்கை நீக்கியதற்கு எதிர்ப்பு ,தமிழ் வழிக் கல்வி, தமிழ்வழியில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், தமிழில் வழிபாடு, தமிழிசை, ஈழத்தமிழர் காப்பு ஆகியவற்றுக்காக பாடுபட்டவர் இராசராச சோழன் சிலை, கண்ணகி கோயில் ஆகியன ஏற்கப்பட வேண்டும் எனவும் தமிழ்ப்பல்கலைக்கழகம், தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியன தஞ்சையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பேரவை மூலம் வற்புறுத்தியவர். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பெற வேண்டும் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்( 6,04.1995 )பேசியவர். குன்றக்குடி அடிகளார் உருவாக்கிய திருக்குறள் பேரவை மூலம் சிறப்புக் கூட்டங்கள் ,சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், திருக்குறள் ஒப்பித்தல் ஆகியவற்றை தஞ்சாவூரின் பல பகுதிகளிலும் நடத்தினார் அனைத்திந்திய தமிழாசிரியர் மன்றத்திலும் அனைத்து இந்திய அறிவியல் தமிழ் மன்றத்திலும்உறுப்பினராக இருந்து பல கட்டுரைகளை அளித்துள்ளார். முனைவர், தமிழ்த்திரு என்ற சொல் ஆக்கங்களைஉருவாக்கியவர். ○ .வானொலியில் செய்திகள் _வாசிப்பது என்று கூறுவது தவறு என்று தொடர்ந்து 1978 முதல் நடுவண் அரசுக்கு எழுதியும் இதழ்களில் எழுதியும் செய்திகள் வாசிப்பவர் என மாற்றம் செய்தார். 26 கிரந்த எழுத்துக்களை தமிழ் ஒருங்குகுறியில்(யூனிகோடு) சேர்க்க வேண்டும் என்று காஞ்சி மடத்தைச் சேர்ந்த சீரமண சர்மா முயன்றபோது (2010) தமிழக அரசுக்கும் நடுவண் அரசுக்கும் அமெரிக்க ஒருங்குகுறி ஆணையத்திற்கும் எழுதி அதைத் தடுக்கப்பாடுபட்டார். ○ சமூகப்பணி ○ எழுத்தேணி கல்வித் தொண்டு அறக்கட்டளையின் செயலராக இருந்து கல்விக்கட்டணம் கட்ட இயலா பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நிதி கிடைக்க இணையதளம் மூலம் வழிகாட்டியவர் .பணி ஓய்வு பெற்று சென்னை வந்தபின் 2006 முதல் தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலாளராக தமிழ்ப் பணி செய்து வருகிறார் அனைத்து தமிழ் அறிஞர்களையும் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து கீழடி அகழ்வாய்வுச் சின்னங்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க கல்வி அமைச்சரை சந்தித்துப் பேசியதில் அமைச்சர் உடனடியாக முக்கால் ஏக்கர் நிலம் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தருவதாக உறுதியளித்தார். ○ வங்கிகளில் படிவங்களிலும் விண்ணப்பங்களிலும் மடல்களிலும் தமிழ் உரிய இடத்தைப் பெறவும் காசாள் கருவிகளில் தமிழ் இடம் பெறவும் சென்னை இருப்பு வங்கி (ரிசர்வ்) உயரதிகாரி உயர்திரு சதக்கத்துல்லா அவர்களை தமிழ் ஆர்வலர்களை அழைத்துச் சென்று 19-10- 16 பிற்பகல் 2மணிக்கு சந்தித்தார். ○ கடலூர் சென்னை வெள்ளம் (2015) வார்தா புயல்( 2016 )ஆகியவற்றால் பாதிப்புகளுக்கு உள்ளான ஏழை மக்களுக்கும் மாணவர்களுக்கும் இணையதளம் மூலம் சென்னை கடலூர் புயல் என்ற குழு ஏற்படுத்தி பிறரிடமிருந்து நிதி திரட்டி மருத்துவ முகாம்கள், பாத்திரங்கள், பாய் ,போர்வை ,மருந்துகள் வழங்க ஆவன செய்தவர் . கஜா புயலின் போது (2018) காவிரி கடைமடைப் பகுதியில் தஞ்சை, புதுக்கோட்டை, வேதாரண்யம், நாகை ,திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, மதுக்கூர் முதலிய சிற்றூர்களில் தமிழ் அமைப்புகள், அன்பர்கள், நண்பர்கள் உதவியுடன் தமிழ் எழுச்சிப்பேரவை சார்பில் 8 லட்சம் ரூபாய் அளவுக்கு உதவிப் பொருள்கள் வழங்கியதுடன் 15 வீடுகள் கட்டியும் கொடுக்கச் செய்தார். ○ இலக்கியப் பணி ○ தமிழ்மொழியின் வளம், இலக்கணம் ,இலக்கியம், இயற்கை வாழ்வு, மகளிர் நலம், வாழ்வியல் வரலாறு ,பண்பாடு முதலிய பல துறைகளில் கதை ,கவிதை, கட்டுரைகளை தினத்தந்தி, மாலை முரசு, தினமணி ,தமிழோசை ராணி ,கல்கி, அமுதசுரபி, கவிக்குயில் ,பெண்மணி, இனிய உதயம் ,தென்மொழி முதலிய பல இதழ்களில் 1968 முதல் எழுதி வருகிறார் ○.ஏறத்தாழ 55 ஆண்டுகளாக எழுத்துப் பணியாற்றி வரும் இவர் தமிழ் அமைப்பு மூலம் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்துள்ளார் மாணவப்பருவத்தில் நடத்திய நடத்திய மதுகைத்தமிழ் மன்றம் (1960 -64) 4 ஆண்டுகள், தஞ்சை கீழவாசல் மறைமலைஅடிகள் மன்றம்( 1968 )ஓராண்டு ○ தஞ்சாவூர் தமிழ்ப்பேரவை (1978 -2013 )25 ஆண்டுகள் ○சென்னையில் தமிழ்எழுச்சிப்பேரவையில்( 2006 _2021 )15 ஆண்டுகள் ○வரலாற்று ஆய்வுப்பணி ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக்கோரி தமிழ் அறிஞர்கள், அன்பர்கள் குழுவின் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் ,மு. மேத்தா திரைப்பட இயக்குநர், நடிகர் ,யார் கண்ணன் "இனிய உதயம்" இதழ் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் உள்ளிட்டோருடன் கண்ணகி சிலை முன் கூடி அரசுக்கு கோரிக்கை வைத்தார். வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதுடன் பேரரசன் இராசராசன் வென்ற நாடுகளில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டு வருவதற்காக வரலாற்றறிஞர் கண்ணன் அவர்களுடன் சிங்கப்பூர் மலேசியாவிலுள்ள கடாரம் (கெடா )கம்போடியா( அங்கோர் வாட் கோயில் )முதலிய நாடுகள் சென்று வந்துள்ளார். ○ சயாம் மரண ரயில் பாதை என்னும் வரலாற்று ஆவணங்களை த்திரட்டி மாபெரும் திரைப்படமாக்கும் குழுவிலும் ,தென்கிழக்கு ஆசிய சங்கங்களின் ஒருங்கிணைப்பிலும் பணியாற்றி வருகிறார். இணையத்தில் ஆய்வுத் தமிழ், இறையரசு ,தமிழ்ப்பெயர்கள் என மூன்று தளங்கள் வலைப்பூக்களாக(blogspot.com) நடத்திவருகிறார் . ○உடல்நலம் குறித்த பணிகள் தமிழ்நாட்டில் சித்த மருத்துவமும், இயற்கை மருத்துவமும் உலகமெல்லாம் பரவ தமிழ் மருந்துகள், இயற்கையம்( ஆர்கானிக் )பற்றி இணையதள முகநூல் பக்கங்கள் மூலம் எழுதி வருகிறார். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவியபோது பப்பாளி இலை தட்டு அணுக்களை அதிகமாக்கி நோய் நீக்கும் என தொடர்ந்து பரப்பியதுடன் தமிழக அரசுக்கு எழுதி ஏற்கச் செய்தவர். புற்றுநோய் போக்க உதவும் சீதாப்பழம் முதலிய நாட்டு மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.

இயற்கையைப்போற்றும் பணிகள் இயற்கை வாழ்வு, இயற்கை உணவு  ஆகியவற்றைப் பரப்பி வருவதுடன் நாட்டு மரசெக்கு எண்ணெய்கள், சிறுதானியங்கள், மூலிகைச் செடிகள் மாடித்தோட்டம் ஆகியவற்றையும் அறிமுகம் செய்து வருகிறார்.
பசுமைச்சென்னை(Re green Chennai)  இயக்கத்தின் மூலம் சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மரக்கன்றுகள், விதைப்பந்துகள் மூலம் மரம் செடி கொடிகள் மூலிகைகள் பரவப் பாடுபட்டு வருகிறார் புதுவை  (பாரதியார் கருத்தரங்கம் )திருச்சி, சென்னை வானொலிகளில் (சான்றோர் சிந்தனை )மக்கள்,சன் ,கே டிவி, கலைஞர், பொதிகை ,தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினர், நேர்காணல் நிகழ்ச்சிகளில் உரையாற்றியுள்ளார்.
சத்தியம் தொலைக்காட்சியில் இலக்கண இலக்கிய வளம் பற்றி தொடர் உரை நிகழ்த்தியுள்ளார் .

இணையத்தில் தொடர்ந்து எழுதுவதுடன் தமிழ் எழுச்சிப்பேரவையில் மாதந்தோறும் கூட்டம் நடத்துவதால் தமிழ் நலத்துக்காக எழுத்தும் பேச்சும் தன் உயிர் மூச்சாகக் கொண்டுள்ளார்.

முனைவர் இறையரசன் நூல்கள்     1.குழந்தைக்குத்தமிழ் ப்பெயர்கள் (முதல் பதிப்பு 1981) 1990 ,1995 ,2013 

2தமிழ்நாட்டு வரலாறு(1982,2006 ,2016 )பூம்புகார் பதிப்பகம் சென்னை 3. தமிழ் இலக்கிய வரலாறு (1982 2017 )பூம்புகார் பதிப்பகம் சென்னை 4.தமிழர் நாகரிக வரலாறு( 1993, 2018) பூம்புகார் பதிப்பகம் சென்னை

5.பாலைநூறு (1988 )

6. இதழாளர் பாரதியார்( 1995 ,2018) நியூ செஞ்சரி பதிப்பகம் சென்னை.

7.தனிநாயக அடிகள் இதழியல் வழி தமிழ்ப்பணி (1998 )உத ஆநி
8 கல்வித் தமிழ் மலருமா( 1999 ,2014)  மணிவாசகர் பதிப்பகம் சென்னை .

9 மேடுபள்ளம்(2001)பாவை பதிப்பகம்(சென்னை) 11 செம்மொழிச்செம்மல்கள் (முதல் தொகுதி 2010 )தமிழ்மண் பதிப்பகம் 12 செம்மொழிச்செம்மல்கள்( தொகுதி-2 2010) தமிழ்மண் பதிப்பகம்

13பாலியல்+வன்முறை=திரைப்படம்( 2012) பாவை பதிப்பகம் சென்னை
14 செம்மொழியும் சிவந்த ஈழமும்( 2012) பாவை பதிப்பகம் சென்னை
15 .The historyof Tamil nadu The only surviving classical Civilization இந்
நூல் பா. இறையரசன் எழுதிய தமிழ் நாட்டு வரலாறு நூலின்ஆங்கில மொழிபெயர்ப்பு .(கோ. கண்ணன் ந. முத்துகிருஷ்ணன்)( 2016 )சென்னை 

16 சங்க இலக்கியச் சோலை( 2018) மணிவாசகர் பதிப்பகம் சென்னை

17 தமிழ் இந்தியா வரலாற்றுக்களங்கள் 2018 ராதாபாய் பதிப்பகம்
சான்றுகள்

1. தமிழரங்கம் மாத இதழ்( ஜனவரி 2018) இறையரசன் சிறப்பிதழ் 2. கவிக்குயில் இலக்கிய மாத இதழ்( மார்ச் 2018) "எழுபதாம் அகவையில் இறையரசனார்" தினபூமி (25 7 1996) எழுத்தாளும் உலகம் பா .இறையரசன்

3 இனிய உதயம் இலக்கிய மாத இதழ் (ஏப்ரல் 2014 )மடலேறும் மடல்கள் இயக்குநர் கவிஞர் யார் கண்ணன்

4 இனிய உதயம் இலக்கிய மாத இதழ் (நவம்பர் 2016)சொல்லமறக்காத கதை-5 இயக்குநர் யார் கண்ணன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SbkTnj&oldid=3418085" இலிருந்து மீள்விக்கப்பட்டது