பயனர்:Selvasivagurunathan m/சிறு கையேடு

தொகுத்தல் தொகு

அனைத்துப் பக்கங்களிலும் தொகு என்ற பொத்தான் உள்ளது; நீங்கள் திருத்த விரும்பும் பக்கத்திற்குச் சென்று அங்குள்ள தொகு தொடுப்பை சொடுக்கவும். இப்போது தொகுப்பு சாளரம் திறக்கும். அதில் உங்களின் உரைகளை சேருங்கள்.

முன்தோற்றம் காட்டு தொகு

பக்கத்தைச் சேமிக்கவும் பொத்தானை அடுத்துள்ள முன்தோற்றம் காட்டு பொத்தானை சொடுக்கவும் (பார்க்க:படம்). இப்போது பக்கம் சேமிக்கப்படுவதற்கு முன்னர் பக்கம் எவ்வாறு காண்பிக்கப்படும் எனக் காணலாம். இந்த செயல்பாட்டின் மூலம் அவற்றை நம்மால் சரிசெய்ய இயலும்.

பக்கத்தைச் சேமிக்கவும் தொகு

முன்தோற்றம் கண்டு திருத்தியபின் உங்கள் தொகுப்புகளை சேமிக்க பக்கத்தைச் சேமிக்கவும் பொத்தானை சொடுக்கவும். நீங்கள் எழுதிய முதல்வரிகள் இப்போது விக்கிப்பீடியாவில் தெரியும்.

தொகுத்தல் சுருக்கம் தொகு

சேமிப்பதற்கு முன், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த விளக்கத்தை தொகுத்தல் சுருக்கம் பெட்டியில் இடுவது ஓர் நல்ல வழக்கமாகும். காட்டாக பிழைதிருத்தம் என இட்டீர்கள் என்றால், நீங்கள் எழுத்து/இலக்கண பிழை திருத்தம் செய்துள்ளீர்கள் என பிறர் அறிய உதவும்.

உங்களுக்கு தயக்கமிருப்பின் முதலில் உங்களின் மணல்தொட்டியில் தொகுத்துப் பழகலாம்.

வடிவமைத்தல் தொகு

தடித்த மற்றும் சாய்வு எழுத்துகள் தொகு

  • தடித்த சொல் அல்லது சொற்றொடரைப் பெற இருபுறமும் மூன்று ஒற்றை மேற்கோள்குறிகளை (''') இடவேண்டும்.
  • சாய்வான சொல் அல்லது சொற்றொடரைப் பெற இருபுறமும் இரண்டு ஒற்றை மேற்கோள்குறிகளை ('') இடவேண்டும்.

விக்கிப்பீடியாவில், ஓர் கட்டுரைப் பொருளின் பெயர் முதல்முறையாக குறிப்பிடப்படும்போது தடித்து காட்டப்படுகிறது. காட்டாக, சென்னை பக்கம் துவங்கும்போது: சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். சாய்வு எழுத்துகள் புத்தகங்கள், திரைப்படங்கள், இசைவட்டுகள் மற்றும் கணினி/காணொளி விளையாட்டுகள் பெயர்களை இடும்போது பயன்படுத்தப்படுகிறது.

தலைப்புகளும் துணைத்தலைப்புகளும் தொகு

கட்டுரையில் வேறுபட்ட உள்ளடக்கங்கள் விவரிக்கப்படும்போது தலைப்புகள் கொடுத்து தனித்தனி பத்திகளாக அமைப்பது தேவையானதாகும்.

  • தலைப்பினை எழுத இருபக்கமும் இரண்டு சமன்குறிகளை இட வேண்டும். காட்டாக == வாழ்க்கை ==
  • துணைத்தலைப்பினை எழுத இருபக்கமும் மூன்று சமன்குறிகளை இட வேண்டும். காட்டாக === பிறப்பும் கல்வியும் ===

மேற்கோள்கள் / உசாத்துணைகள் தொகு

நீங்கள் உள்ளிடும் தகவலுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். தொகுக்கும் பெட்டியின் கீழே விக்கி நிரல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • உங்கள் உசாத்துணை இணைப்பின் இருபக்கமும் உசாத்துணை குறிகளை இட வேண்டும். <ref>உசாத்துணை</ref>
  • கட்டுரையின் இறுதியில் மேற்கோள்கள் எனும் தலைப்பின்கீழ் {{Reflist}} அல்லது <references/> என இட வேண்டும்.

பேச்சுப்பக்கம் தொகு

ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பிற்கு அருகில் உரையாடல் என்ற இணைப்பு இருக்கும். இங்குக் கட்டுரை குறித்த உங்கள் சந்தேகம், குறை, கருத்து போன்றவற்றை எழுதலாம்.

ஏற்கனவே உரையாடல் பக்கம் உருவாகியிருந்தால் நீல நிறத்திலும், இல்லாவிட்டால் சிவப்பு நிறத்திலும் காட்சிதரும். நீல நிறத்தில் அப்பக்கம் இல்லாவிட்டாலும் நீங்கள் அதைத் திறந்து எழுதலாம்.

உரையாடல் இணைப்பைச் சொடுக்கினால் புதிய சாளரம் வரும், அங்கே உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். இறுதியாக உங்கள் கையெழுத்தை எழுதுங்கள் அல்லது எளியவழியில் -~~~~ என்ற குறியீட்டை எழுதி, சேமிக்கும்போது தானாகப் பெயர் வரும்.

உங்கள் பேச்சுப்பக்கத்தில் யாரேனும் செய்தி எழுதினால் உங்களுக்கு "உங்களுக்கு ஓர் புதிய செய்தி" என்ற அறிவிப்பு காட்டும். அதைப் போல பிற பயனர்களின் உரையாடல் பக்கத்தில் நீங்களும் கேள்வி, பாராட்டு போல உங்கள் எண்ணத்தை எழுதலாம்.

உள்ளிணைப்பு தொகு

உள்ளிணைப்பு என்பது ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு விக்கிப்பீடியா பக்கத்திற்குச் செல்லும் வசதிக்காகக் கொடுக்கப்படும் தொடுப்பாகும். ஒரு கட்டுரையின் உள்ளே இன்னொரு கட்டுரைக்கு இணைப்பை உருவாக்குவது எளிது. அந்தக் கட்டுரைப் பெயரை எழுதி முன்னே [[ என்ற குறியீடும் பின்னே ]] என்ற குறியீடும் எழுதினால் போதும்.

இப்படி இணைப்பு உருவாக்கப்பட்ட சொல் வேறு நிறத்தில் தெரியும். நீல நிறத்திலிருந்தால் அக்கட்டுரை உள்ளதென்றும் சிவப்பு நிறத்திலிருந்தால் கட்டுரை இல்லையென்றும் அர்த்தம். அப்படிக் கட்டுரை இல்லாவிட்டால் நீங்களே எழுதிவிடலாம். கட்டுரை உள்ள தலைப்பிற்கு உள்ளிணைப்பும் உருவாக்கலாம்.