Senthooramjag
செந்தூரம் ஜெகதீஷ்
பாகிஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்து வந்த குடும்பத்தின் மூத்த மகனாக பிறந்த ஜெகதீஷ் தமிழ்ப் படித்த சிந்தி மொழிக்காரர். இதன் காரணமாக தமிழில் எழுதத் தொடங்கி எண்பதுகளில் செந்தூரம் என்ற சிற்றிதழை தொடங்கினார். அதனால் அன்று முதல் செந்தூரம் ஜெகதீஷ் என்று அழைக்கப்படுகிறார். ஓஷோவின் புத்தகங்களை ஆரம்பக் காலத்திலேயே தமிழில் வெளியிட்ட முக்கிய படைப்பாளியாகவும், சிறு பத்திரிகைகளில் முதன் முறை சினிமா சிறப்பிதழ் வெளியிட்ட இதழாளராகவும் சாதனை படைத்தார். பின்னர் தமிழ் ஊடகங்களில் பணியாற்றி, மணிக்கொடி எழுத்தாளர்கள் உட்பட பல தமிழ்ப் படைப்பாளிகளின் வாழ்க்கையை ஒலி-ஒளி தொகுப்புகளாக குறும்படங்களாக உருவாக்கினார். இவர் எழுதிய இன்னும் மிச்சமிருப்பவை ( கவிதைகள்) செந்தூரம் ஜெகதீஷ் கவிதைகள், சிறகுப் பருவம் ( சிறுகதைகள்) கிடங்குத் தெரு( நாவல்) காதல் தேவதை ( மாசோக்கிசம் பற்றிய மாசோக்கின் நாவல் மொழியாக்கம்) ஆகியவை குறிப்பிடத்தக்க புத்தகங்கள். கிடங்குத் தெரு நாவல் 2004ம் ஆண்டில் தஞ்சை ப்ரகாஷ் விருதையும், மைசூர் இந்திய மொழி வளர்ச்சி மையத்தின் பாஷா பாரதி விருதையும் பெற்றது.