பயனர்:Shanmugamp7/WM2017 Report
மாண்ட்ரியால், கனடாவில் நடைபெற்ற விக்கிமேனியா 2017ல் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது நான் பங்கேற்கும் முதல் விக்கிமேனியா. அது குறித்து ஒரு சிறு அனுபவப்பகிர்வு.
விக்கிமேனியா நடக்கவிருக்கும் இரண்டு நாட்கள் முன்பு வரை நுழைவுச்சீட்டு பிரச்சினை காரணமாக எனது பயணம் உறுதியாகாமல் இருந்தது. இறுதியில் 6 ஆம் தேதி சனிக்கிழமை கடவுச்சீட்டு கைக்கு கிடைத்து, திங்கட்கிழமைக்கான பயணம் உறுதியானது. சென்னையிலிருந்து ஆகத்து 8ஆம் நாள் அதிகாலை எனது 26 மணி நேர பயணத்தை ஆரம்பித்தேன். அதே நாள் இரவு 8 மணி (நேர வலய மாற்றம் காரணமாக :)) அளவில் கருத்தரங்கு நடக்கும் லா சென்டர் செரடன் விடுதியை சென்றடைந்தேன்.
தமிழ் விக்கிபீடியர்களான இரவியும் நீச்சல்காரனும் விக்கிமேனியாவிற்கு வந்திருந்தனர்
ஆகஸ்ட் 9, 10 முன் கருத்தரங்கு நாட்கள் - இவ்விரு நாட்களில் வட அமெரிக்க விக்கி கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இதில் கலாச்சார சுற்றுலா, நூலகச் சந்திப்பு, அமர்வுகள் என பல நிகழ்வுகள் நடந்தன. கனட ஆதிக்குடிகளான முதல் நாட்டினர் எவ்வாறு தங்கள் மொழி, பண்பாடு, பழக்கவழக்கம் மற்றும் கலாச்சாரத்தை விக்கி மூலமாக பாதுகாக்கிறார்கள் என்ற அமர்வின் மூலம் பல முக்கிய தகவல்களை அறிய முடிந்தது.
ஆகஸ்ட் 11-13 வரை நடைபெற்ற விக்கிமேனிய முதன்மை கருத்தரங்கில் உரைகள், விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள், பயிற்சிகள் என நூற்றுக்கணக்கான அமர்வுகள் இருந்தன. எந்த நிகழ்வை விடுவது எதில் பங்கேற்பது என்ற குழப்பமிகுமளவிற்கு நிகழ்வுகள் இருந்தன. நான் பங்கேற்ற சில நிகழ்வுகளைப் பற்றிய கருத்துகள் :
- விக்கித்தரவு தொடர்பாக பல நிகழ்வுகள் இருந்தன. அதில் The (Wiki)Data (R)Evolution என்ற அமர்வின் மூலமாக விக்கித்தரவின் தற்போதைய நிலை, வரவிருக்கும் மேம்பாடுகள் போற்றவற்றையும், விக்கித்தரவில் உள்ள தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது எனபதனையும் அறிய முடிந்தது
- ஏன் விக்கிப்பீடியாவை படிக்கிறோம் என்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் ஏன் விக்கிப்பீடியாவை படிக்கிறார்கள் என்பது குறித்த சில ஆர்வமுள்ள தகவல்கள் கிடைத்தன. இந்த கருத்தெடுப்பு தமிழ் விக்கிக்கு தேவைப்படின் இதற்கான விக்கிமீடிய அறக்கட்டளை அதிகாரிகளை அணுகலாம்.
- சட்ட ஆலோசனை குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதன் விக்கிமீடியா அறக்கட்டளையின் சட்ட எதிர்கொள்ளல்கள் பற்றிய ஒரு அறிமுகம் கிடைத்தது.
- wm2017:Submissions/Bringing_all_the_voices_to_the_conversation:_what_the_Wikimedia_movement_has_learned_from_lower_awareness_regions
- wm2017:Submissions/What is the smallest community that can support a Wikipedia?
- wm2017:Submissions/How I learnt basics of Photography ? என்ற பஞ்சாப் விக்கிப்பீடியர் சட்தீப்கில்லின் உரை பயனுள்ளதாக இருந்தது. வளரும் நாடுகளில் உள்ள விக்கிப்பீடியர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வண்ணமும் இருந்தது. கொடையாக கிடைத்த ஒரு கருவியை பஞ்சாப் விக்கிமீடியர்கள் அனைவரும் தேவைப்படும் போது பயன்படுத்தி வருகின்றனர். விக்கிமீடியா ஜெர்மனி நிறுவனம் வழங்குவது போல விக்கிமீடியா இந்தியா / CIS நிறுவனம் சில நிழற்படக் கருவிகளை வாங்கி வைத்து விக்கித் தொடர்பாக தேவைபடுவோருக்கு இரவலாக கொடுத்தால் இந்திய விக்கிபீடியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- wm2017:Submissions/Is Wikipedia ready for videos? விக்கிப்பீடியா கட்டுரைகள் காணொளி வடிவில் இருக்குமானால் ஏற்படும் சாதக பாதகங்களை விளக்கியது
- wm2017:Submissions/The Keilana Effect: Visualizing the closing coverage gaps with ORES
- wm2017:Submissions/So,_you_have_data._Now,_what_do_you_do?
- வருங்காலத்தில் விக்கிமேனியா எப்படி இருக்கலாம் என்பது போன்ற விக்கிமேனியாவின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொணடேன். (குறிப்புகள்).
- விக்கிமீடியா வியூகத் திட்டமிடல் தொடர்பான அமர்வில் கலந்து கொண்டு வரைவு வியூகத்தின் மீதான பின்னூட்டத்தை அளித்தோம்.
இப்பக்கத்தில் அனைத்து அமர்வுகள் பற்றிய குறிப்புகளுக்கான இணைப்புகளைக் காணலாம். இவை மட்டுமல்லாமல் பல சிறப்புரைகளும் இருந்தன. சிறப்புரைகள் உட்பட சில நிகழ்வுகளை விக்கிமீடியா அறக்கட்டளையின் யூடியூப் பக்கத்தில் காணலாம்.
தெற்காசிய விக்கிமீடியர்களுடனான சந்திப்பு , ஆசிய விக்கிமீடியர்களுடனான சந்திப்பு, செயல்படுத்துபவர்கள்( functionaries) சந்திப்பு போன்ற சந்திப்புகளில் கலந்து கொண்டதன் மூலம் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்திருந்த விக்கிப்பீடியர்களை சந்தித்து உரையாட முடிந்தது.
இறுதியாக விக்கிமேனியா நிறைவு விழாவுடனும் அதன் பிந்தைய கொண்டாடத்துடனும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் விக்கிமேனியா இனிதே நிறைவுற்றது. இறுதிக் கொண்டாட்டத்தில் விக்கிப்பீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்சை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தத்தில் விக்கிமேனியா ஒரு தனியான அனுபவம்:).