வெப்பமயமாதல் என்பது மிக முக்கிய உலகளாவிய பிரச்சனையாகும் . பூமியின் சராசரி வெப்பம் 1950 இருந்ததைவிட தற்போது மிக அதிகமாக உள்ளது . மனித பழக்க வழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பது உண்மையான கருத்தாகும. புவி வெப்பமயமாதலின் காரணிகள் புவி வெப்பமயமாதல் என்பது இயற்கையை பாதிக்கும் பல காரணிகளின் இறுதி பாதிப்பாகும் .புவியின் மேற்பரப்பு வெப்பநிலை மனித செயல்கள் மற்றும் இயற்க்கை செயல்கள் என்று இருவேறு காரணிகளினால் உண்டாகின்றன . இயற்கை காரணங்கள்

  • சூரியன் சுற்று வட்ட பாதையில் ஏற்படும் சிறுமாற்றங்களினால்
  • கிரீன்ஹவுஸ் வாயுக்களான கார்பன் மோனாக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு வாயுக்கள் சூரிய வெப்ப கதிர்களை வெளியேற விடாமல் புவியின் மேற்பரப்பில் சுழல செய்வதினால்
  • எரிமலை வெடிப்பின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்சைட் வளிமண்டலத்தில் பெருகுவதனால்
  • வளிமண்டலத்தில் பெருகிவரும் மீத்தேன் வாயு கிரீன்ஹவுஸ் வாயு என்பதினால் ஏற்படும் பாதிப்பு

மனித காரணங்கள்

  • மனித வளர்ச்சியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாகன பயன்பாட்டினால் நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் அதிகமாக எரிக்க படுவதினால்
  • வாகனம் மற்றும் தொழிற்சாலைகளினால் வெளியேற்றப்படும் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைட் வளிமண்டலத்தில் பெருகுவதனால்
  • சுரங்க தொழில் மூலமாக மீத்தேன் வாயு வெளியேற்றம் போன்ற காரணங்களால்
  • மனித முயற்சியால் நடைபெற்ற காடழிப்பு நடவடிக்கையினால்
  • கடல் சார் உயிரினங்கல் மற்றும் கடல் பாசி போன்ற கடல் சார் தாவரங்கள் அளிக்க படுவதினால்

புவி வெப்பமடைதலின் விளைவுகள் புவி வெப்பமயமாதலினால் மிகப்பெரிய விளைவுகளை நாம் சந்தித்து வருகின்றோம் .

  • புவியின் துருவங்களில் உள்ள பனி உருகுவதினால் மிக பெரிய ஆபத்து உருவாகி உள்ளன
  • பனி உருகுவதினால் கடல் மட்டம் உயருகிறது .இதன் காரணமாக நெதர்லாந்து போன்ற குறைந்த உயரமுடைய தீவு நாடுகள் கடலில் மூல்கும் ஆபத்து அதிகமாக உள்ளது
  • துருவ வாழிடங்கள் குறைந்து வருவதினால் அங்கு வாழும் உயிரினங்கள் வாசிக்க இடமில்லாமல் இறப்பது சகஜமாகி விட்டது
  • எப்போதும் இல்லாத அளவு சூறாவளி தோன்றுகின்றன குறிப்பாக இந்திய பெருங்கடல் காற்றும் தென் இந்திய பகுதிகளில் ஏற்படும் புதிய புதிய புயல் சின்னங்கள் தோன்றுகின்றன
  • சூறாவளி மற்றும் புயலினால் ஏற்படும் பொருளாதார சீரழிவு அதிகமாக உள்ளது.புயலடித்த பகுதிகளில் மீட்ப்பு பணிகளுக்கு தனியாக நிதி தேவைப்படுகிறது

புவி வெப்பமடைதலின் தீர்வுகள் புதிய புதிய பிரச்சனைகள் இந்த நூற்றாண்டிலேயே நாம் சந்திக்க தொடங்கி விட்டதினால் புதிய ஆபத்துகளை தவிர்க்க அகில உலக அரசுகள் பல புதிய உத்திகளை தொடங்கிவிட்டன

  • இயற்க்கை எரிபொருளுக்கு மாற்றான எரிபொருள் பயன்படுத்துதல்
  • அணுசக்தி கொள்கையை கடைபிடித்தால் (அணுசக்தி ஆபத்தான ஒன்றாக இருந்தாலும் தற்போதைய தேவைகளை பூர்த்திசெய்ய நமக்கிருக்கும் வழி இது ஒன்றே ஆகும்)
  • நிலக்கரி பயன்பாட்டை குறைத்து சூரிய சக்தி மற்றும் புனல் சக்திகளை பயன்படுத்துதல்
  • அனைத்து விதமான பொருட்களையும் மறுசுழற்சி செய்தல் (குறிப்பாக பேப்பர் ,பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள்)
  • மக்காத குப்பைகள் மற்றும் மக்கும் குப்பைகளை எரிப்பதை தடுப்பது இதற்க்கு சூரிய சக்தியை பயன்படுத்தி சமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • புவி வெப்பமயமாதலுக்கு வெப்பத்தை வெளிப்படுத்தும் மின்னணு கருவிகளை பயன்படுத்துவதை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்
  • குளிர்சாதன பெட்டி மற்றும் குளிர்சாதன அறைகளை பயன்படுத்துவதை முடிந்த அளவு குறியாக்க வேண்டும்
  • அதிக மரங்களை வளர்த்தல்
  • பிராண வாயுவை உற்பத்தி செய்யும் கடல் வாழ் தாவரங்கள் மற்றும் பவளத்திட்டுகளை செயற்க்கை காரணங்களுக்காக அளிப்பதை தடுத்தல்
  • தற்போதைய மனித பழக்க வழக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை களைய நடவடிக்கைகளை இப்போதே நாம் தொடங்க வேண்டும் .புதிய அறிவியல் வளர்ச்சியில் தற்போதைய தீர்வுகளையும் கையாள வேண்டும்


1.புவி வெப்பமடைதல் (Global Warming): வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி வெப்பமடைதல். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களை கட்டுமீறி பயன்படுத்தியதும், காடழிப்பும் பசுங்குடில் வாயுக்களின் அளவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.

2.காலநிலை மாற்றம் (Climate Change): புவி வெப்பம் அடைவதால் பூமியின் பருவகாலநிலை, தட்பவெப்பநிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றம். ஒரு பகுதியின் சராசரி வானிலையில் ஏற்படும் மாற்றம்தான் காலநிலை மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

3.பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases): பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஒரு போர்வை போல சேகரமாகி இருக்கும் நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள் சூரிய வெப்பத்தை பூமிக்குள் அனுமதிக்கின்றன. ஆனால், பூமியின் மேற்பரப்பில் இருந்து எதிரொளிக்கப்படும் வெப்பத்தை (அகச்சிவப்பு கதிர்களை) விண்வெளிக்கு அனுமதிக்காமல் தடுத்து, பூமிக்கே திரும்ப அனுப்புகின்றன. இதனால் பூமி கூடுதல் வெப்பமடைகிறது. கிரீன்ஹவுஸ் எனப்படும் கண்ணாடிக் கூடு போல, இந்த வாயுக்கள் பூமியை வெப்பமடையச் செய்வதால் இந்தப் பெயர் வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shiva_kumar2110685&oldid=3608797" இலிருந்து மீள்விக்கப்பட்டது