பயனர்:Shriheeran/மணல்தொட்டி/4 /1

மனிதர்களும் புறாவும்

தொகு
 
ஜெய்ப்பூரில் புறாக்களுக்கு உணவளிக்கப்படுகின்ற ஒரு காட்சி

இராணுவம்

தொகு

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் புறா பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்சு, செருமனி, அமெரிக்கா ஆகிய நாடுகளியே புறாக்கள் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரில் வழங்கப்பட்ட பங்களிப்புக்களுக்காக 32 புறாக்களுக்கு டிக்கின் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உணவாக

தொகு
 
வாழையிலால் சுற்றப்பட்ட சோற்றுடன் பொரித்த புறா இறைச்சி

புறாக்களில் ஒரு சில உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அனைத்துப் புறா வகைகளும் உண்ணக்கூடியவையே ஆகும். [1] புறா இறைச்சியில் மார்பு இறைச்சியே மிகவும் சுவையானதாகும். பண்டைய மத்திய கிழக்கு, பண்டைய உரோம், மத்திய ஐரோப்பா ஆகிய காலப்பகுதிகளில் இருந்தே வேட்டையாடப்பட்ட அல்லது வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்கள் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. யூதர்கள், அசாமியர்கள், அரேபியர்களின் உணவில் புறா பொதுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆசியர்களில், இந்தோனேசியரும், சீனரும் புறாக்களை உண்கின்றனர்.

குறியீடாகப் புறாக்கள்

தொகு

இசுரேலியக் கடவுள் அசெரா, உரோமானியக் கடவுள் வீனஸ், போர்சுனேட்டா, போன்பேசியக் கடவுள் தனித் ஆகியோரினை பிரதிநிதித்துவம் செய்யும் குறியீடாகப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. [2] கிறித்தவத்தில் புறாக்களின் அலகில் தாங்கப்பட்ட ஒலிவ் இலைக் கொத்துக்கள் சமாதானத்தின் குறியீடாகக் கருத்தப்படுகின்றன.

  1. (http://www.eattheweeds.com/eggs-for-survival-and-food-2/ )
  2. The enduring symbolism of doves, from ancient icon to biblical mainstay by Dorothy D. Resig BAR Magazine
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shriheeran/மணல்தொட்டி/4_/1&oldid=2242216" இலிருந்து மீள்விக்கப்பட்டது