Sivaloganathankarur
'''முனைவர் கா சிவலோகநாதன்''' டிசம்பர் 07, 1968ல் ஈரோடு மாவட்டம். அந்தியூர் தாலுகாவில் உள்ள பிரம்மதேசம் என்ற ஊரில் இவர் பிறந்தார். இவர் தந்தை பெயர் '''காளியண்ணன்'''. இவர் பரதநாட்டியத்துறையில் பல சாதனைகள் புரிந்து உள்ளார். பரதநாட்டியத்தில் இவர் முதல் குரு '''உயர்திரு கவுந்தி வெங்கடாச்சலம்''' அவர்கள். அவரிடம் சிறிது காலம் கற்றபின் நாட்டிய மேதை '''திரு.ராஜாராம்''' அவர்களிடம் நாட்டியம் கற்றார். நாட்டியத்தில் வழுவூர் பாணி, பந்தணை நல்லூர் பாணி, கலாஷேத்ரா பாணி, தஞ்சாவூர் பாணியும் கற்று உள்ளார்.
'''வழுவூர் பாணியை திரு.ராஜாராம்''' அவர்களிடமும், '''பந்தணை நல்லூர் பாணியை “கலைச்செல்வம்” திரு.கோபிராமசந்திரன்''' அவர்களிடமும், '''கலாஷேத்ரா பாணியை “பத்மபூஷன்” திரு.தனஞ்ஜெயன்''' அவர்களிடமும், '''தஞ்சாவூர் பாணியை “கலைமாமணி” திரு.பாப்பையா பிள்ளை''' அவர்களிடமும் கற்றுக்கொண்டேன். '''மோஹினி ஆட்டத்தை கேரளா கல்யாணிக்குட்டி''' அம்மாளிடம் கற்றபின் நவரஸ பாவத்தையும் கதகளி நாட்டியத்தையும் '''“பத்மபூஷண்” கலா மண்டலம் கிருஷ்ணா நாயரிடம்''' கற்றுக்கொண்டார். குச்சிப்புடி நடனத்தை '''பத்மபூஷன் வேம்பட்டி சின்னசத்யம்''' அவர்களிடம் கற்றார்.
இவர் கடந்த 30 வருடங்களாக '''கரூர் நாட்டிய அகாடமி''' என்ற நாட்டியப்பள்ளியை '''கரூர்''' மாவட்டத்தில் மிக சிறந்த முறையில் நடத்தி வருகிறார். இவர் இது மட்டும் இல்லாது சிதம்பரம் '''அண்ணாமலைப் பல்கலைக்கழகம்''' இசைத்துறை துறையில் பேராசிரியர் ஆகா தற்போது பணியாற்றி வருகிறார். மேலும் கரூர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் செயலாளர் ஆகவும் இருந்து வருகிறார்.