திருஅவதாரம்

புளியம்பொக்கனை என்ற நல்லூரோடு ஒன்றிணைந்த கொழுந்துபுலம் என்ற சிற்றூரில் பிரிவில்லாது வாழ்கின்ற வன்னிய வேளாளர்கள் அனைவருக்கும் ஓர் முதல்வனாகி முதலியார் பட்டம் பெற்றவராகி ஆதிமூர்த்தியாகி பரமசிவனின் நல்லருள் பெற்று நன்மை ஆகிய கதைகள் ஆகமங்கள் என்பவற்றறை சந்தேகமறக்கற்று பேரறிவினை உடையவராகி நீதி நாயக முதலியார் என்ற பொலிவாகிய பெயரைப்பெற்று பகைவர்களும் வியக்கும் பொருட்டு வேளார்களுக்குரிய முதன்மைசிறப்பான ஏர்ச்சீரோடுவாழ்ந்து வந்தார்.

இவர் அளவற்ற நெற் கழனிகளும் ஆடு,மாடு எருமைகளும் எவ்வளவு பெரிய வேலையானாலும் மிகவும் விரைவாக செய்து முடிப்பதற்குஏற்ற வேலையாட்களும் குடிமக்களும் ஒரு சேர திறமையினாலேயே சம்பாதிக்கப்பெற்ற பல்வகைத்திரவியங்களுமாகிய பதினாறுவகை செல்வசிறப்பையும் ஒருங்கே பெற்று விளங்குவதன் நீதி நாய முதலியாருக்கு நிகராக எவரையும் எடுத்துச் சொல்ல முடியாது. சுத்தியத்திற்கு நல்ல அரிச்சந்திரனையும் செல்வளத்திற்கு குபேரனையும் பொருட்களை தர்மம் செய்வதில் கர்ணனையும் வலிமையான வீரத்திற்கு அனுமானையும் பார்க்கின்ற பேரழகிலே மன்மதனையும் அடைந்தோரைக்காப்பதில் நெடியமகாவிஷ்ணுமூர்த்தியையும் பொலிவாகிய அன்பு ஆதரவில் இயமபுத்திரனாகிய தர்மராசானையும் நிகர்ந்து விளங்கினார். இப்படியான உயர்ந்த நிலைமை பெற்று வாழ்கின்ற சிறப்பைக்கண்ட அவர்களது சுற்றத்தவர்களிலே மூத்தவர்கள் ஆராய்ந்து அறிவது சொல்லப்பட்ட முறை நிறைநீதியுடன் ஒத்து விளங்குவதும் இவருக்கு சமமாகிய வன்னி மரபிலே உள்ளவருமாகிய கமலம் என்னும் பெயருடைய கன்னிகையை அக்கினி சாட்சியாக வைத்து விவாகம் செய்து பிரிவில்லாமல் இருந்தார். இதை உவமித்து சொல்வதானால் இரண்டு உடலிற்கு ஓருயிர் போலவும் இரவும் பகலும் நீங்காத காதலுற்ற மன்மதனும் ரதியும் போல இன்பம் அனுபவித்து வாசனையுடைய மலரும் மணமும் போல ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள். நீதி நாயகமுதலியார் தான் சம்பாதித்து சேர்த்த செல்வத்தாலும் பிதா மாதா கொடுத்த முதுசொத்தாலும் மனைவியின் சீதனப்பொருட்களாலும் இன்னும் பலவிதவருவாய்களினாலும் அரசனைப்போல செல்வத்தை அனுபவித்தால் எனினும் பிறிதொருகாரியத்தை நினைத்து மனதிலே பெரும் கவலையடைந்தார். பொருட்செல்வத்தால் குறைவில்லை சாதியிற் குறைவென்ற துன்பம் இல்லை இனத்தவர்களால் இடரில்லை. பகைவர்களாலும் துயரமில்லை எனினும் நாம் விவாகம் செய்து இவ்வளவு காலம் நடத்திய இல்லற வாழ்வில் கண்ட சுகம் ஒன்றுமில்லை என்று மனதில் நினைந்து பெரிய துன்பக்கடலில் வீழ்ந்தார் நீதிநாயகமுதலியார். ஆந்தப்பெருந்துன்பம் யாதெனில் அளவில்லாத பெருஞ்செல்வத்தை தனக்கும் பின் அனுபவிப்பதற்கும் இக்காலத்தில் மழலை மொழிகேட்டு இன்புறுவதற்கும் சந்ததி பெருகுவதற்கும் தகுந்த புத்திரபாக்கியம் இல்லாததேயாகும். இதனை பசிய வளையல்களை அணிந்த கைகளைஉடைய கமலம் அம்மையாரிடம் சொல்லுகின்றார் பின்வருமாறு பேண்ணே நாம் திருமணம் செய்து இதுநாள்வரையும் இல்லறஇன்பம் குறைவின்றி அனபவித்தோம் எமக்கு இறப்புவரும்காலத்தில் ஈமக்கிரியை முதலான கடமைகளை செய்வதற்கேற்ற புத்திரபேறில்லையே இதனால் இந்த இல்வாழ்வில் என்ன சுகத்தைக்கண்டோம் ஒன்றுமில்லையே பசுவதை செய்தேளோ? வீட்டில் அடைக்கலம் என்று வந்தவர்க்கு துன்பம் செய்தேனா? அல்லது நல்ல பூங்காவினை வெட்டி அழித்தேனா? நல்ல கலைஞானங்களை கற்றுணர்ந்த வித்துவான்களை நிந்தித்தேனா? மாவடுவை ஒத்த கூரிய கண்ணினை உடைய கன்னிப்பெண்ணின் கற்பை அழித்தேனா? தேவர்களிடத்தே பழியைப்பெற்றுக்கொண்டேனா? இப்பயான பாவங்கள் எதையுமே நான் செய்யவில்லையே கொலை முதலான பஞ்சமா பாதகங்களையும் குலதெய்வங்களிடத்தில் பொய்ச்சத்தியம் செய்தல் போன்ற பழிகளை செய்த பாவத்தினால் புத்திரபாக்கியம் இல்லாமல் போகலாம் ஆனால் நாம் செய்தது ஒன்றுமில்லையே என்றால் முற்பிறவியிலே நாம் செய்த பிரார்த்துவம் என்ற வினையே இல்லாமல் இப்பிறப்பிலே நான் அறிய செய்த பாவங்கள் ஒன்றுமில்லை ஆகவே எமக்கு புத்திரன் பிறக்க வழி சொல்லு என கற்புடைய மனைவியான கமலம் அம்மையாரிடம் யோசித்துக் கூறுகிறார் ஐயா கல்வி அறிவு குறைந்த மாந்தர்களைப்போல உள்ளம் கலங்குவது அழகல்ல எமது இந்த சிறிய துன்பம் நீங்கவேண்டுமெனில் சிவபெருமான் உமையாரினது செந்தாமரை மலர் போன்ற பாதங்களில் நல்ல மனம் பொருந்திய மலர்கள் தூவி வணங்கி நல்ல விரதாங்களை முறை தவறாது அனுட்டித்தால் வருகின்ற பாவங்களை நீக்கி புத்திரபாக்கியத்தை தருவார் இது நிச்சயம் என்றார் மனைவியான கமலம் அம்மை. துணைவியார் சொல்லிய வார்த்தையைச் சிவபெருமான் திருவருள் என்றே ஏற்றுதானும் துணைவியாரும் பற்பல விரதங்களை அனுஸ்டித்தும் அன்னதானம் ஆகிய மகேஸ்வர பூஜை செய்து குறையாய் இருக்கும் ஆலயங்களைக்கட்டி முடித்தும் மற்றும் இப்படியான தானதருமங்களை வரைவில்லாமல் செய்து வந்தார்கன். இப்படியே பலகாலம் தர்மதானங்கள் செய்துவர இறைவன் திருவருளினாலும் இன்னும் காலை,உச்சி,மாலை ஆகிய முக்காலங்களிலும் செய்கின்ற தானதருமங்களாலும் பூரண கலத்தையொத்த தனங்களையுடைய கமலம் அம்மையாரினது திடமான கற்புநெறியாலும் தவறில்லாமல் கர்ப்பம் தரித்தாள் சுற்றத்தார்கள் வாழ்த்தும் படியாக அனுஸ்டித்த விரதபலன் எமக்கு இங்கே கைமேல்கிடைத்தது என்று கர்பகாலத்திலே செய்வதாகிய சீமந்தம்,வளைகாப்பு முதலிய கருமங்களை செய்து இன்புற்றிருக்க மயில்போன்ற சாயலை உடைய பெண்ணும் வயிற்றிலே உண்டாகிய கர்ப்பம் முதிர்ந்து பத்துமாதம் நிறைவடைந்து ஒருவிததுன்பமும் இல்லாமல் ஓர் ஆண்மகவைப்பெற்றெடுத்தாள். அந்தவேளையில் தந்தையாரான நீதிநாயகமுதலியார் மனம் மகிழ்ந்து தன்புதல்வன் சிறந்த லக்கினம் கிரகநிலை முதலியவற்றை விரைவாகப்பார்த்து அவை நல்ல பலன் அழிப்பதால் பிள்ளை இல்லை என்ற துன்பமும் கெட்ட கிரகவலு இல்லை என்ற துன்பமும் ஆகிய இருவகைத்துன்பங்களும் நீங்கி பேர்உவகையடைந்து நாள்தோறும் தவறாமல் செய்து வருகின்ற சிவபூசை மற்றும் சிவத்தொண்டுகள் என்பவற்றை சுற்றத்தவர்களும் சந்தோசப்படும்படி மேலும் அதிகமாக செய்து வறுமையினால் மனம் கலங்கி வருகின்ற வறியவர்களுக்கு நல்ல பொருட்களும் ஆடை ஆபரணங்களும் தானமாக கொடுத்தார். சொல்லப்படுகின்ற தங்கள் குலப்பெருமை விளங்கும் படியாக விருப்பத்தோடு மாப்பாணம் முதலிய என்ற பெயரை புதல்வனுக்கு சூட்டி நல்ல அன்போடு வளர்த்து வந்தார். புத்திரன் பிறந்தமையாலே பிள்ளை இல்லை என்ற பெரும் துயர் மனதில் நீங்கி இன்பம் எய்தி நிலைபெற்ற புதல்வனோடு வாழ்கின்ற நாட்களில் சொல்லப்பட்ட அருந்தவம் மேலோங்கி கமலா அம்மையார் மீண்டும் ஓர் ஆண்மகவைப்பெற்றெடுத்து ஊரில் உள்ள இனசனங்கள் எல்லோரும் மெச்சும்படி வவுனியமுதலியார் என்ற சந்ததிப் பெயரினை சூட்டி மகிழ்ந்து தங்களது இருகண்களைப்போல இருபுதல்வர்ளையும் காத்து சிவபெருமான் திருவருளைப்பெற்று வளர்த்தார்கள். இளம்பராயத்தோடு வளர்கின்ற இரண்டு பிள்ளைகளினதும் மழலைமொழிகளைக் கேட்டு மனமகிழ்ச்சியடைந்து அளவில் அடங்காத இன்பம் அடைந்தனர். வளங்கள் சிறந்துவிளங்கும் அன்னை கமலம் அம்மையாரும் பிதா நீதிநாயகமுதலியாரும் இளம்பருவத்தோடு வளர்கின்ற பிள்ளைகளுக்கு தேடுதற்கரிய பொனாபரணங்கள் ஆடைகள் அணிவித்து அழகைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்து உரிய காலத்திலே அவர்களுக்குரிய கல்வியையும் ஓதுவித்தார்கள். இரண்டு பிள்ளைகளும் அந்தஊரில் வசிக்கின்றவர்கள் அனைவரும் மிகந்த விருப்பத்தோடு மகிழும்படி உத்தமனான குணத்தோடு தாய்,தந்தை,சுற்றத்தார் எல்லோருக்கும் ஒப்பற்ற செல்வமாக வளர்ந்து சகல கலைகளையும் கற்றுணர்ந்தவர்கள் கண்ணின் மணிபோல அருமையாக இரண்டு ஆண் பிள்ளைகளைப்பெற்றும் பெண்பிள்ளை இல்லையே என்ற பெரிய துன்பம் நீங்கும் பொருட்டு குளிர்ந்த சந்திரனை அணிந்த சடாமுடியினையுடைய சிவபெருமான் திருவருள் பெற்று கமலம் அம்மையார் கர்ப்பம் உற்றுஇருந்தார் மிகுந்த சந்தோசத்தோடு நிலைபெற்ற உலகம் எல்லாவற்றையும் முதன்மையோடு ஆண்டு காக்கின்ற வேதநாயகராகிய சிவபெருமான் திருவருளினாலே கமலம் அம்மையாரும் கர்ப முதிர்ச்சி பெற்று பங்குனி மாதத்தில் வருகின்ற உத்தம நட்சத்திரமும் பூரணையும் கூடிய சுபதினத்தில் பிரசவ வேதனையுற்று ஒரு பாம்பையும் பெண்குழந்தையும் இரட்டையாகப்பெற்றார். பெற்ற பாம்புக்குட்டியைப் பார்த்து பிரிவில்லாத சுற்றத்திலுள்ள பெண்களும் ஊரில் உள்ள மற்ற பெண்களும் பயம் கொண்டு மனதிலே துயரமுற்றறு ஒருதடியால் அந்த பாம்புக்குட்டியை தூக்கி வெளியே எறிந்தனர் அப்பாம்பானது உடனே சுற்றி ஊர்ந்து வந்து படுக்கையில் ஏறி மடியில் சேர்ந்தது. இந்த அதிஅற்புதமான தன்மையை தாயானவர் கண்டு இது சிவன்செயலே என்று எண்ணி அன்போடு எடுத்து அணைத்து அதனையும் தனது பிள்ளை போல இரண்டு பேருக்கும் பாலூட்டி வளர்த்தார் இந்த செயலை பிதாவாகிய நீதிநாயகமுதலியாரும் கண்டு மனதில் அடங்காத சந்தோசம் கொண்டார். தேவர்களும் வியந்து வாழ்த்துவதாகிய பாம்புக்குழந்தை வந்து பிறந்ததன் பின்னர் பிதா,மாதாவிற்கு முன்பிருந்த செல்வத்திலும் பத்துமடங்காக செல்வம் அதிகரித்து பெருகியது. கிடைத்த பெரும் செல்வத்தினாலே குபேரனைப்போல பூமியில் அனைவரும் மதிக்கும்படியாக ஒப்பற்ற கொடை வள்ளலும் ஆகினார். மனவிருப்பத்தோடு வளர்ந்து பாம்பு உருவான குழந்தைக்கு சற்றேனும் மனத்தளர்ச்சி இல்லாமல் தம்பிரான் எனப்பெயர்சூட்டினர். அதனுடன் கூடப்பிறந்த சகோதரியான அழகுமிகுந்த பெண்குழந்தைக்கு நல்ல அறிவாளர்களும் மகிழும்படியாக வள்ளிநாச்சன் என்ற பெயரும் சூட்டினர். எட்டுத்திசையிலும் உள்ளவர்களும் புகழ்ந்துரைக்கும் படி அந்த ஊரிலே சிறந்த அழகு பொருந்திய புதிய வீடொன்று கட்டி குடியிருந்த மனதில் எந்தவித கவலையுமின்றி மக்கள் நால்வரையும் அதிக அன்போடு வளர்த்தார்கள். thumbnail

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Smuralee&oldid=1856917" இலிருந்து மீள்விக்கப்பட்டது