பயனர்:Sri Jaya Durga R D/மணல்தொட்டி

சிவானி கட்டாரியா

சிவானி கட்டாரியா
Shivani Kataria
Shivani kataria.jpg
நீச்சல் வீராங்கனை
தனிநபர் தகவல்
பிறப்புசெப்டம்பர் 27, 1997 (1997-09-27) (அகவை 23)
குருகிராம், அரியானா
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்
நீச்சல்பாணிகள்கட்டற்ற வகை

சிவானி கட்டாரியா (Shivani Kataria) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீச்சல் வீராங்கனையாவார். 1997 ஆம் ஆன்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி இவர் பிறந்தார்.

பெண்கள் 200 மீட்டர் கட்டற்றவகை நீச்சல் போட்டிகளில் இந்தியாவுக்காக சிவானி பங்கேற்று வருகிறார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 200 மீட்டர் கட்டற்றவகை நீச்சல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.[1] இதைத் தவிர இவர் பல தேசிய சாதனைகளையும் சிவானி நிகழ்த்தியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

சிவானி அரியானாவில் பிறந்தார், குருகிராமில் வளர்ந்தார், குருகிராமிலுள்ள டி.ஏ.வி. பொதுப் பப்ளிக் பள்ளியில் பயின்றார்.[2] பெற்றோரின் ஆதரவுடன் சிவானி தனது வீட்டிற்கு அருகிலுள்ள பாபா கேங்நாத் நீச்சல் குளத்தில் ஒரு கோடைக்கால முகாமில் 6 ஆவது வயதில் நீந்தத் தொடங்கினார்.[3][4] முதல் பயிற்சியாளர் திரு. யாதவின் வழிகாட்டலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். குசராத்து சி.பி.எசு.சி பள்ளிகளுக்கான தேசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[2] 2012 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை நீச்சல் வீரராக மாற முடிவு செய்தார். காலையில் இரண்டு மணிநேரமும், மாலை இரண்டு மணி நேரமும் பகலில் ஒரு மணிநேர முக்கிய பயிற்சிகளுடன் தீவிரமாக நீந்தத் தொடங்கினார்.[2] 2015 ஆம் ஆண்டில், தாய்லாந்தின் புக்கெட்டில் உள்ள தியான்புரா நீச்சல் முகாமில் ஒரு வருடம் பயிற்சி பெற்றார்.[3][5]

தொழில்முறை சாதனைகள்தொகு

  • 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளைஞர் சாம்பியன் பட்டப்போட்டியின் 200 மீ கட்டற்ற வகைப் போட்டியில் சிவானி ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
  • 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.[6]
  • 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று நீந்தினார்.
  • 2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் 12 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

மேற்கோள்கள்தொகு