https://www.google.com/search?rlz=1C1GCEB_enIN938IN938&sxsrf=ALeKk00lQ71U7aPqPcGI4NThP1HyqGpLIw:1612764302934&source=univ&tbm=isch&q=srija+venkatesh&sa=X&ved=2ahUKEwicvoebz9nuAhVZdCsKHRlOAfwQjJkEegQIDBAB&biw=1366&bih=600


ஸ்ரீஜா வெங்கடேஷ் ஒரு தமிழ் எழுத்தாளர். நெல்லை மாவட்டம் (அப்போது) கடையம் என்ற ஊரில் திரு பி. ராமநாதன் அவர்களுக்கும், சாவித்திரி அம்மாளுக்கும் இரண்டாவது மகளாக 1972ஆம் ஆண்டு பிறந்தார். ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியில் கணிப்பொறியியல் இளங்கலை பயின்றார். 1994ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதனை அடுத்து ஒடிசா தலைநகரம் புவனேசுவரத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கே புவனேசுவர் தமிழ்ச் சங்கம் சார்பாக 4 மேடை நாடகங்கள் எழுதி இயக்கியுள்ளார். 2002 ஆம் ஆண்டு 23ஆவது அகில இந்திய நாடக விழாவில் இவரது நாடகமான என் ஆர் ஐ இடம் பெற்றது.

2010ஆம் ஆண்டு தமிழகத் தலைநகரம் சென்னைக்கு மீண்டும் இடம் பெயர்ந்தார். இவரது முதல் சிறுகதையான "பாட்டியின் பெட்டி" கலைமகள் இதழில் வெளிவந்து பாராட்டப்பட்டது. அக்கதை 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இக்கதை கோடி என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பல நாவல்கள், சிறுகதைகள் என இவரது படைப்புலகம் விரிந்தது.

இது வரை எழுதிய நாவல்களின் எண்ணிக்கை - 85

இது வரை எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை - 45

இது வரை எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை - 14

இவரது நாவல்கள் பிரபல நாவல் இதழ்களான கண்மணி, ராணி முத்து, மதுமிதா, ரம்யா போன்ற இதழ்களில் மாதம் ஒரு முறை வெளிவந்தன. சிறுகதைகள் குமுதம், குங்குமம், சூரியக் கதிர், ராணி, மங்கையர் மலர், கணையாழி, செல்லமர் போன்ற பிரபல வார/மாத இதழ்களில் வெளிவந்தன. இவரது கட்டுரையான "சென்னையில மட்டும் இன்னா வாயுதாம்?", பெண்களின் அரசியல் பயணம் என்ற கட்டுரைகள் தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்டது. கல்வி குறித்த இவரது கட்டுரைகள் ஆலைகளா? கல்விச்சாலைகளா? போன்றவை தினமலர் நாளிதழில் வெளிவந்தன.

புத்தகமாக வெளிவந்தவை:

1. என் மேல் விழுந்த மழைத்துளியே

2. மெழுகாய்க் கரையும் பெண்மைகள்

3. பொன் அந்திச் சாரல் நீ

4. காதலென்னும் தேரேறி

5. அகத்திய ரகசியம்

6. பாண்டிய நெடுங்காவியம் - 3 பாகங்கள்

7. மாயக்கோட்டை - மின்னல்

8. மூன்றாவது படி

9. காதலென்னும் வீதியிலே

10. ஓவியப்பாவை

பரிசுகள் மற்றும் விருதுகள்

2011 ஆம் ஆண்டு "பாட்டியின் பெட்டி" என்ற சிறுகதை 2011ஆம் ஆண்டின் 12 சிறந்த சிறுகைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு திருப்பூர் அரிமா சங்கம் "சக்தி" விருது வழங்கியது.

2016 ஆம் ஆண்டு வாசவி மித்ரா என்ற தமிழ் தெலுங்கு இரு மொழி மாத இதழ் சிறந்த தொடர்கதைக்கான விருதை வழங்கியது.

2018ஆம் ஆண்டு எஸ் எம் தமிழ் நாவல்ஸ் என்ற வலை தளம் இவரது அகத்திய ரகசியம் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான பரிசு வழங்கியது.

2019 ஆம் ஆண்டு சில்ஜீ கிமோ என்ற தமிழ் வலை தளம் அறிவித்த தமிழ் மற்றும் ஆங்கில நாவலுக்கான போட்டியில் இவரது நாவல் "கடல் நிலவு" மற்றொரு ஆங்கில நாவலோடு இணைந்து முதல் பரிசு பெற்றது.

2019 ஆம் ஆண்டு "முகநூல் நட்பதே நட்பு" என்னும் மேடை நாடகத்தை எழுதி இயக்கி நடித்து பாராட்டைப் பெற்றார். இந்த நாடகத்தை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பு மேடையேற்றியது.

மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த பாண்டியர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.[1]

  1. "தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்", தமிழ் விக்கிப்பீடியா, 2020-02-03, பார்க்கப்பட்ட நாள் 2021-02-08
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Srija_Venkatesh&oldid=3103214" இலிருந்து மீள்விக்கப்பட்டது