என் ஆராய்ச்சி கணினி நெட்வொர்க்கிங், செயற்கை அறிவுத்திறன், கல்விக்கான தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருந்திருக்கிறது. நான் ஐஐடி மும்பையில்  மாஸ்டர் மற்றும் டாக்டர் டிகிரிகளை பெற்றேன். மற்றும் CMUவில் ஆராய்ச்சியாளராக பணியாட்டியிருக்கிறேன்.

நான் மும்பை TIFR-இல் ஆராய்ச்சியாளராக வேலை தொடங்கினேன். பின்னர் தேசிய மென்பொருள் தொழில்நுட்ப மையத்தின் (NCST-இன்) முதல் இயக்குனராகப் பணிபுரிந்தேன்.  1987-ல் இந்திய ஆராய்ச்சி கூடங்களை இணைப்பதற்காக ERNET என்கிற கல்வி நெட்வொர்க்கை உருவாக்குவதில் NCST ஒரு முக்கிய பங்கை எடுத்துக்கொண்டது. என் தலைமையில் வேலை செய்த குழு இந்தியாவிலிருந்து முதல்  Internet இணைப்பை அமைத்தது.

பின்னர், HP Labs India-வில் முதன் இயக்குனராகப் பணியாற்றினேன். இன்டர்நேஷனல் கவுன்சில் பார்  கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன் தலைவராகவும், இந்தியாவின் கம்ப்யூட்டர் சொசைட்டியின் தலைவராகவும், UN ICT பணிக்குழுவின் ஆலோசனை நிபுணர் குழுவின் உறுப்பினராகவும்  நான் பணியாற்றியிருக்கிறேன். 2014 இல் Internet சொசைட்டி அவர்களுடைய ஹால் ஆஃப் ஃபேமில் என்னை உறுப்பினராக ஆக்கியது. http://www.internethalloffame.org/inductees/srinivasan-ramani

என் பொழுதுபோக்கு: ப்ளாகு எழுதுதல் http://NewStudentResearch.blogspot.com

http://HindiMeSTEM.blogspot.com மற்றும் http://ObviousTruths.blogspot.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Srinivasan_Ramani&oldid=2518199" இலிருந்து மீள்விக்கப்பட்டது