Sureshrosey
- தூளி Dr சுரேஷ் ரோஸ் முதலியார்*
( Dhulee .Dr Suresh Rose mudaliyar) ஓர் இந்திய அரசியல்வாதியும், மருத்துவர்,வழக்குரைஞர் ,சமுக நல ஆர்வலர் மற்றும் தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவு திருவள்ளுர் மேற்கு மாவட்டடத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக திருவள்ளுர் மேற்கு மாவட்டத் மருத்துவ பிரிவு தலைவராக,அப்போதையா மாவட்டத் தலைவர் திரு J. லோகதநான் அவர்களின் முன்னிலையில் பொறுபேற்றார்.
- வாழ்க்கைக் குறிப்பு*
இவர் திருவள்ளுர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் என்ற சிற்றூரை அடுத்த வரதாபுரம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 26 மே 1987 ஆம் நாள் பிறந்தார். இவர் அகமுடைய முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் ரோஸ் வேலப்பன் மற்றும் குப்பம்மாள் ஆகியோர்கள் ஆவர். இவர் சரஸ்வதி பழனி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
- கல்வி*
அவர் திருவள்ளுர் மாவட்டத்தில் மஞ்சகுப்பம் கிராமத்தில் அரசு தொடக்கபள்ளியில் தொடக்க கல்வியும் , பட்டரைபெரும்புதூரில் அரசு உயர்நிலை பள்ளியில் உயர்நிலை படிப்பையும் திருவள்ளூரில் அரசு தர்மமூர்த்தி ராவ் பகதூர் பள்ளியில் மேல்நிலை பள்ளிப்படிப்பையும் முடித்தார் மற்றும் தமிழ்நாட்டில் கிண்டி கிங் மருத்துவ தொழில்நுட்பக் கல்லூரியில் மருத்துவ ஆய்வுகூட நுட்பனர் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, மருத்துவ ஆய்வுக்கூட நிபுணராக காசநோய் பிரிவில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின் மருத்துவர் ஆக வேண்டும் எண்ணத்தில் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவ பட்டப் படிப்பை முடித்தார், அதன்பின் சென்னை Dr அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பை முடித்தார்.
- மருத்துவ பங்களிப்பு*
கிண்டி கிங் மருத்துவ ஆய்வுக்கூட நிபுணர் பள்ளியில் ஆய்வுக்கூட நுட்புனர் படிப்பை முடித்துவிட்டு பொன்னேரி மற்றும் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் பணி செய்தார். பின்பு சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு திருவள்ளூரில் கோரக்கர் சித்த வைத்தியசாலை என்ற நிறுவனத்தை நிறுவி மக்களுக்கு சித்த மருத்துவத்தை செய்து வந்தார். பின்பு மக்களின் 100 வருட நோயில்லா வாழ்க்கை முறைக்கு அடித்தளமிடும் வகையில் ஷாத்தாயுஸ் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பதவி வகித்தார் அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முறையை செய்து வந்தார், இவரின் மருத்துவ சேவையை பாராட்டி இவருக்கு சிறந்த மருத்துவர் என்ற அங்கீகாரம் மக்களிடையே பரவ தொடங்கியது.
- அரசியல் பங்களிப்பு*
தீவிர இந்துத்துவவாதி ஆன இவர் பள்ளிப் பருவத்திலேயே ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்(RSS) சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் சித்தாந்தத்தை நன்கு புரிந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் சா ஆகியோரை மானசீக தலைவர்களாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினார் அதனால் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்,(2009)
கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து பின்பு கட்சியின் கிளை தலைவராக பொறுப்பு வகித்து, அதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட மருத்துவப் பிரிவு தலைவர் மாவட்ட அறிவுசார் பிரிவு தலைவராக பொறுப்புகளை வகித்து வருகிறார்.
இவர் தேசமே என் தெய்வம் என்ற நோக்கத்தை முழங்குவார்.