கா.சுஜோ

கா.சுஜந்தன் / ஓவியன் /சுஜோ கிளிநொச்சியில் கடினகாலங்களில் பணியாற்றிய ஒரு சுயாதீன ஊடகவியலாளர்.இவர் கிளிநொச்சியிலிருந்து வெளியான "விழி" மருத்துவ மாத இதழின் ஆசிரியராகவும் நிறுவனராகவும் இருந்தார்."விழி" மருத்துவஇதழ் 2000 ஆண்டிலிருந்து 2008 வரை மாதம் தவறாது தொண்ணூற்றி ஐந்து இதழ்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு இதழ்களிலும் 1350-1500 பிரதிகளும் , சிறப்பு இதழ்களில் (25 ,50 ,60 ,75 )  இரண்டாயிரம் பிரதிகளும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. விழிமருத்துவ இதழ் கிளி /சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் கன்னிநிலம் அச்சகம், ஸ்கந்தபுரத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.  

இவர் "சுதேச ஒளி" என்ற காலாண்டு இதழின் ஆசிரியராயும் நிறுவனராகவும் இருந்தார்."சுதேச ஒளி" காலாண்டிதழில் ஆறு இதழ்களே 2006 -2008 காலப்பகுதியில் கிளிநொச்சியிலிருந்து வெளியாகியிருந்தது,ஒவ்வொரு இதழ்களிலும் 500 பிரதிகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் இறுதி நான்கு இதழ்களுக்கே இதழாசிரியராய் இருந்தார், முதல் இருஇதழ்களுக்கும் ஒரு ஆயுர்வேதமருத்துவர் இதழாசிரியராய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் நகரில் இயங்கிய சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் "அக ஒளி" வருட இதழ்களின் (இரு) ஆசிரிய ஆலோசகராய் இருந்தார். புலிகளின் குரல்,ஈழநாதம்,தமீழீழ தேசியத்தொலைக்காட்சி ஆகியவற்றின் சுயாதீன செய்தி வழங்குனராகவும் இருந்தவாறே அக்காலப்பகுதியில் வன்னியில் பலநூறு மருத்துவ கண்காட்சிகளை ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்ததும் குறிப்பிடப்படவேண்டியது.இவர் குறுந்தூர வானொலி ஒலிபரப்பினையும் சிலகாலம் ஒழுங்கமைத்து நடத்தியிருந்தார்.இவர் ஒக்ஸ்பாம்  என்ற நிறுவனத்தின் உதவியுடன் இரு மருத்துவ வீடியோ ஆவணப்படங்களையும் உருவாக்கியிருந்தார். இவர் யோகாசனம், தற்காப்புக்கலைகளிலும் ஈடுபாடுகொண்டவராய் இருந்தார்.இவர் இதழியல் துறையில் பட்டபின் கல்வி டிப்ளோமா கற்கையை பூர்த்திசெய்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Suruthy&oldid=3748953" இலிருந்து மீள்விக்கப்பட்டது