Sweetrascalwiki
முழுப்பெயர் - ஜான்பீட்டர் நான் தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டமாகக் கருதப்படும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாலுகாவில் உள்ள காய்நத சருகுகளின் ஓசையையே தாலாட்டாக நினைக்கும் கோபாலபட்டணம் கிராமத்தில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு தந்தை போஸ் அவர்களுக்கும் தாய் ராணி அவர்களுக்கும் மகனாகப் பிறந்தேன்.
வம்சம்
தொகுதந்தை பிறந்தது இந்துவாக இருப்பினும் வளர்ந்தது ஒரு முஸ்லிம் மதத்தவரது ஆதரவில் தான் . அவர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் திருச்சி மாவட்டம் இலால்குடி தாலுகாவில் காய்கறி வியாபாரத்தைத் தொடங்கினார். அவரது நட்பு வட்டாரத்தில் கிடைத்த அன்பால் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஜோஸ்பின் நேரு அமல் ராணியான எனது தாயை மணம் முடித்தார். அவ்வாறு மணம் முடிக்கும் போது தனது இயற்பெயரான போஸ் என்பதனை கிறித்தவ மதத்திற்காக அருள் ஞான போஸ் என மாற்றிக்கொண்டார். மதம் மாறியது தாயின் வழியென்றாலும் வம்சம் வளர்வது தந்தையின் வழியன்றோ . எனது தந்தையின் வம்சம் கீழ வீட்டு வம்சம் என்றே அழைக்கப்படுகிறது . அவ்வம்சத்தில் பிறந்த ஆண் குழந்தை நான் மட்டுமே . மற்றவர் அனைவரும் பெண் குழந்தைகளே. தந்தை விருப்பத்திறகேற்ப முதல் குழந்தையை இந்துவாகவும் இரண்டாவது குழந்தையை கிறித்துவ மதத்தைச்சார்ந்தவர்களாக வளர்க்க எண்ணி முதலில் பிறந்த அக்காவிற்கு சுப்புலெட்சுமி என்று இந்து மதத்திலும் இரண்டாவதாகப்பிறந்த எனக்கு ஜான்பீட்டர் என கிறித்துவ மதத்திலும் பெயரிட்டனர்.
பள்ளிப்பருவம்
தொகுஇளமையில் கல்வி அறிவைக்கண்டு நான்கு வயதிலேயே பள்ளிக்குச் சென்றேன். அரசு ஆரம்பப்பள்ளியில் தொடக்கக் கல்வி கற்று கிறித்துவனாக இருந்ததால் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் நடுநிலை வகுப்புக்களை முடித்தேன். அதற்கு மேல் கல்வியில் அதிக செலவு செய்ய முடியாத காரணத்தால் சாலைக்கிராமத்திலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்புக்களை தமிழ் வழியில் முடித்தேன்.
மாற்றுப்பெயர்கள்
தொகுஇந்து மதத்தின் ஊரான கோபாலபட்டணம் கிராமத்தில் பிறந்ததால் அவ்வூர் மக்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட பெயர்களிலேயே கருப்பு என்றும் முருகா என்றும் கருப்பட்டி என்றும் அழைக்கின்றனர். இந்து மத ஜாதகத்தில் எனது பெயர் வேலவன் என்றே எழுதப்பட்டுள்ளது. பிராமண குலத்தைச் சேர்ந்த ஐயர் ஒருவர் எனது அறிவுத்திறனைக் கண்டு எனக்கு ஞான பீடன் என்னும் பெயரளித்தார்.