TNSEMANGAIYERKARASIDIETKGI
Joined 4 சூலை 2017
'உயிர் மெய் வரிசை
“ர்” “ற்” வேறுபாடு
“ர்” “ற்” என்ற இரண்டு எழுத்துகளுமே மெய் எழுத்துகள். இவற்றின் ஒலியும் ஒன்று போலவே ஒலிக்கும்.ஆனால் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு முக்கியமானது. 1.”ற்” ஒரு வல்லின மெய்யெழுத்து இதைச் சற்று அழுத்தி உச்சரிக்க வேண்டும். இதைப் பெரிய”ற் “என்று சொல்லலாம். 2.”ர்” இடையினத்தைச் சேர்ந்த மெய்யெழுத்து அதனால் அதன் ஓசை “ற்” எழுத்தைவிட சற்று இறங்கி இருக்கும். இதைச் சின்ன “ர்” என்று சொல்லலாம்.
3. ”ற்” மெய் எழுத்து சொல்லின் கடைசியில் வராது.
4.“ர்” மெய் எழுத்து சொல்லின் கடைசியில் வரும்.