பயனர்:TNSE Malarvizhi DIET CHN/மணல்தொட்டி

கணித மேதைகள்

கணிதம் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. மனிதஇனத்தின் அறிவுவளர்ச்சிக்கு கணித வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. கணித வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை நாம் கணிதமேதைகள் என்று அழைக்கின்றோம். கணிதத்தின் மீது ஆர்வம் உடைய கணிதமேதைகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளால் சிறந்து விளங்கினார்கள். இவர்கள் உலக நாடுகள் பலவற்றில் வாழ்ந்துள்ளனர். இந்திய மற்றும் அயல்நாட்டு மேதைகள் கணிதத்துறைக்கு ஆற்றிய பணிகள் மிகவும் சிறந்ததாகும்.

இந்திய கணிதமேதைகள்

தொகு
படிமம்:Image = Srinivasa Ramanujan - OPC - 1.jpg
ஸ்ரீனிவாச ராமானுஜம்

அயல்நாட்டு கணிதமேதைகள்

தொகு

கணிதமேதைகளின் பங்களிப்புகள்

தொகு

பாஸ்கரா I

தொகு

இந்திய கணிதமேதையான இவர் ஆறாம் நுற்றாண்டில் வாழ்ந்தவர்.(கிபி 600-680). இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தார். இவர் ஆர்யபட்டா Iஇன் வழிவந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் மஹாபாஸ்கரியா,லகுபாஸ்கரியா மற்றும் ஆர்யபட்டியபாஸ்யா ஆகிய மூன்று நுல்களை எழுதியுள்ளார்.இவற்றில் மஹாபாஸ்கரியா எட்டு அத்தியாயங்களை கொண்டது. எட்டு அத்தியாயங்களும் வானவியலைப் பற்றியதாகும்.இவர் திரிகோணமிதியில் ‘sin x' என்பதின் மதிப்பைக் காண sin x=[16x( -x)/ 15x2-4x( -x)] என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தினார். இச்சூத்திரத்தைப் பயன்படுத்தி sin /2=1 என அமைவதைக் காணலாம்.[1]

பாஸ்கரா II

தொகு

உஜ்ஜைனியில் வாழ்ந்த இவர் கி.பி. 1114ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். இவர் பாஸ்கராச்சார்யா எனவும் அழைக்கப்பட்டார். இவருடைய தந்தை மஹேஸ்வரா ஒரு ஜோதிடர் ஆவார். பாஸ்கரா IIஇம் ஜோதிடத்தில் நம்பிக்கை உடையவராவார். இவர் எதிர்மறை எண்களை, கடன், நட்டம் இவற்றிற்கு ஒப்பிட்டார். பாஸ்கராச்சார்யா உஜ்ஜயினியில் உள்ள வானியல் கழகத்தின் தலைவராக இருந்தார். இவர் எழுதிய நுல்கள் லீலாவதி, பீஜ கணிதம், சித்தாந்தசிரோமணி, வசனபாஷ்யா,கரணகுதுஹலா மற்றும் விவர்ணா. கணிதவியலிலும், அளவியலிலும் இவர் இயற்றிய நுல் ‘லீலாவதி’ இவருடைய மகளின் பெயர் ஆகும். லீலாவதி என்ற நுலை பிஸி என்பவர் பெர்சியன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய கணித நுல்களிலிருந்து இவர் காலத்திய நாட்டின் பொதுவான நிலையையும் பொருளாதார நிலையையும் அறியமுடிகின்றது. மேலும் அந்நாளில் வழக்கத்திலிருந்த அடிமை வியாபாரமுறை, வட்டி முறைகளைப் பற்றியும் இவருடைய நுலில் காணலாம். 5ஆம் நுற்றாண்டிற்கும் 12ஆம் நுற்றாண்டிற்கும் இடையில் வாழ்ந்த கணிதமேதைகளில் இவர் மேம்பட்டவர் என தமயந்திபாக்கியநாதன் கூறுகிறார்.[2]. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. கணிதம் கற்பித்தல்-வளநுல்-பக்கம் 13
  2. கணிதம் கற்பித்தல்-வளநுல்-பக்கம் 14
  3. என்.தமயந்திபாக்கியநாதன்-கணிதம் கற்பித்தல்-பக்கம் 35