TNSE RAMANII DGL
இயற்கையைப் பாதுகாப்பதில் பள்ளிகள்[மூலத்தைத் தொகு] இயற்கை அன்னையின் படைப்புகளைப் பாதுகாப்பதில் பள்ளிகள்[மூலத்தைத் தொகு] இயற்கை அன்னையின் படைப்புகளைப் பாதுகாப்பதில் பள்ளிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் மத்தியிலே இயற்கையை பாதுகாக்கும் ஏற்றமிகு மாற்றத்தை உருவாக்குவதில் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. பள்ளியும்-பள்ளிக்குழந்தைகளும்:[மூலத்தைத் தொகு] எக்காலத்திலும் பிரிக்கமுடியாத சொத்தாய் பள்ளியும்-பள்ளிக் குழந்தைகளும் இருந்தாலும் விதைக்கும் விதை நல்லவையாக இருந்தால் மட்டுமே நல்விளைச்சல் பெற முடியும். விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? விதைக்கும் பொழுதே இயற்கை உணர்வினை சேர்த்து விதைத்தால் அது வளரும் பொழுது இயற்கையை பாதுகாக்கும் உணர்வுடன்தானே வளரும்? தரமான பாடத்திட்டங்களை வைத்திருக்கும் நம்மால் நேர்த்தியான சமுதாயத்தை ஏன் படைக்க முடியாது? நிச்சயம் முடியும்? மாற்றம் ஒன்றே மாறாதது என்று மேடை பேச்சு பேசினால் போதுமா? அதனை செயலில் காட்ட வேண்டாமா? போனவை போகட்டும் புதியவை படைத்திடுவோம் !!!! =[மூலத்தைத் தொகு] புதியவை படைத்திடுவதில் மாணவர் சமுதாயம்:[மூலத்தைத் தொகு]
=
தொகுபுதியவை படைத்திட பள்ளி மாணவர்கள் போதுமே! 1 முதல் 17 வயது பள்ளி மாணவர்களிடம் பொதிந்துள்ள ஆற்றலே போதும் நமது சமூகமுன்னேற்றத்திற்கு தேவையான எல்லா வளங்களையும் பெற்றுக்கொள்ளலாம். நாம் விதைக்கும் விதையும், விளைவிக்கும் இடமும் தரமாக இருக்கும் பொழுது எந்த விதையும் சோடைபோவதில்லை.===== இயற்கையை பாதுகாக்கும் பாடத்திட்டங்கள்[மூலத்தைத் தொகு] ===== இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கத்துடனேதான் பள்ளிப் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. முறையான பாடத்திட்டத்தினை, முழுமையாகவும், ஆழமாகவும், அக்கரையுடனும், அற்பணிப்புடனும் பயிற்றுவித்தால் போதுமே “காணாமல் போன இயற்கை, வற்றிப்போன ஆறுகள், வறண்டு போன கண்மாய்கள், அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள், மாசுபட்ட நிலங்கள், குறைந்து போன வளங்கள், இவற்றையெல்லாம் காக்கலாமே”! ஆழமான கற்பித்தல் பள்ளிகளில் வேண்டும்:[மூலத்தைத் தொகு] கற்பிப்போர் ஆசிரியராக இல்லாமல், அப்பள்ளியின் ஆணிவேராக மாற வேண்டும். சற்றே பாடத்திட்டத்தை(அறிவியல்) உற்றுநோக்கினால் புரியும் ஒன்றாம் வகுப்பில் “வாங்க மரத்தடிக்குப் போகலாம்” என்ற பாடத்தில் ஆரம்பமாகி தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள், சுற்றுப்புறம், சுகாதாரம், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு என வகுப்புவாரியாக அழகழகாக செதுக்கப்பட்ட பாடங்கள். இப்பாடங்களை பயிற்றுவிக்கும் முறைகளிலும், மாணவர்களை கையாளும் விதத்திலும், கூடுதல் கவனம் செலுத்தும் போது உயிரோட்டமுள்ள வகுப்பறை உடைய பள்ளிகளாக மாறும். அறிவியல் உட்கருத்துக்களை உணர்வுப்பூர்வமாக கற்பிக்கும் பொழுதுதான், மாணவர்களின் மனங்களில் மாற்றங்கள் உருவாகும். “நான்” என்ற மனநிலை மாறி “நமது” சுற்றுப்புறம், “நமது” பூமி என்ற எண்ணம் உருவாகும். ஒவ்வொரு மாணவரிடமும் உருவாகும் எண்ணங்கள் விருட்சி அடைந்தால் நமது பூமி பாதுகாக்கப்படும் என்பது நிச்சயம்.