பயனர்:TNSE S.RAJESWARI NELLI KPM/மணல்தொட்டி

திருவழிச்சல்

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விஷயம் தெரியாது .சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் சாலுவன் குப்பம் என்ற கிராமம் , அன்றைய பெயர் திருவழிச்சல் .

இங்கே தான் (யூனிஸ்கோ )சின்னங்களின் ஒன்றான "புலிக்குகை "உள்ளது . எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன ஒரு கோயில் ,அதே சுனாமியால் 2004 ஆம் ஆண்டு மீண்டும் வெளிவந்தது .

தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழமையான கோயில் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது .இது தான் கிறிஸ்த்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோயில் .கோயிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது

சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி ,ஒரு பெண்ணின் சிலை ,விளக்குகள் ,சிவலிங்கம் ,சோழர்களின் செப்பு காசு போன்ற சங்ககாலத்திய பொருள்கள் கிடைத்துள்ளது .இங்கு கிடைக்கப்பெற்ற நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது .