மரங்களை வாழ்விப்போம்!!! உலகின் உயிர் மரங்கள்-விதைப் பந்துகள்

        இவ்வுலகையும் உலகில் வாழும் உயிர்களையும் உயிர்வித்துக் கொண்டிருக்கும் ஒரே இனம் மரங்களே!!!
        சமீபகால மாற்றங்களாலும் நகரமயமாதல் மற்றும் தொழிற்மயமாதல் காரணமாக மரங்கள் அழிக்கப்பட்டு பூமியே பாலைவனமாக மாறிவருவதை எவரும் மறுத்திட முடியாது.இதன் காரணமாக சூழ்நிலை சமநிலைக்கு பங்கம் ஏற்ப்பட்டுள்ளது.ஆகையால் இழந்த மரங்களை மீண்டும் உயிப்பிக்கவும் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும்  ஜப்பான் நாட்டை சேர்ந்த மசானோபு ஃபுகுவோகா என்பவர் உருவாக்கியுள்ள புதிய முயற்சியே விதைப் பந்துகள். 
        விதைப் பந்துகள் என்பது விளையாட்டு உபகரணமா? என்றால் இல்லை. அது இவ்வுலகை பசுமை செழிக்க செய்ய உருவாக்கப்பட்டுள்ள புதிய அணுகுமுறை.
       எப்படி உருவாக்குவது இந்த விதைப் பந்துகளை அனைவரும் அரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.  வேம்பு, புங்கன், அரசு, போன்ற விதைகளை சேகரித்து விதையுடன் எரு அல்லது சாணத்துடன் சேர்த்து உருண்டையாக்கிக்கொள்ள வேன்டும். பின்னர் விதையுருண்டையோடு செம்மண் வெளியடுக்காக கொண்டு உருண்டைப்போல் உருட்டிக்கொள்ள வேண்டும். இவ்வுருண்டையில் உள்ளே விதையும் அதன் மேல் சாணத்தால் ஆன அடுக்கும் வெளியில் செம்மண்ணால் ஆன அடுக்கும் காணப்படும். 
      இவ்விதை உருண்டைகளை தரிசாக கானப்படும் இடங்களிலும் சாலை ஒரங்களிலும் காடுகளிலும் எரிந்தோமானால் மழைக்காலம் வரும்போது விதைப்பந்துகள் நீரில் ஊறீ விதைகள் முளைக்கத்தொடங்கும். இம்முறையின் மூலம் மரங்களின் எண்னிக்கையினை அதிகப்படுத்தலாம். 
        உலகின் உயிர் மரங்கள் !!! விதை உருண்டைகள் முறையை ஊக்குவிப்போம்!!!உலக உயிர்களை காப்போம்!!!+

பகுப்பு (++): காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் (−) (±)(+)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SEKAR.T_KPM&oldid=2335828" இலிருந்து மீள்விக்கப்பட்டது