TNSE karan chn
எண் ஏழு பெருமை
தொகுஎண் ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண் .ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரனம் என்பது பொருள் .ஏழு என்பது இந்திய பண்பாட்டில் சிரப்பிடம்
பெற்ற எண்னாகும் .காலத்தை கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
ஏழு என்பது தமிழ் எண்களில் 'எ' என்று குறிக்கபடுகிறது .
எண் ஏழின் சிறப்புகள்
தொகு1.புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு இது அறிவிக்கப்பட்ட தேதி 07.07.2007.
2.எழு குன்றுகளின் நகரம் ரோம்.
3.வாரத்திற்கு மொத்தம் ஏழு நாட்கள்
4.மொத்தம் ஏழு பிரவி( மத நம்பிக்கை)
5.ஏழு சொர்க்கம் (குரான்)
6.ஏழு கடல்கள்
"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி
குறுகத் தெரித்த குறள்" -ஒளவையார்.
7.வானவில்லின் நிறங்கள் ஏழு(VIBGYOR)
8.ஏழு முனிவர்கள்(Rishi)
9.ஏழு ஸ்வரங்கள்(ச,ரி,க,ம,ப,த,நி)
10.ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa ,North America ,South America, Australia, Antarctica)
11.ஆதி மனிதன் ஆதாம்(Adam) மற்றும் ஏவாள்(eve) ஆகியோர் பெயரின் மொத்த எழுத்துக்கள் ஏழு
12.ஒவ்வொரு திருக்குறளில் உல்ல சீர்கள் ஏழு .மேலும் ஒன்றே முக்கால் அடி குறளைக் காற் காற் பகுதியாக வெட்டி பார்த்தால் அதுவும் ஏழு பகுதிகளாக வரும்
13.கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு ( Sun,moon,Mercury,mars,Jupiter,venus and saturn)
14.திருக்குறளில் "கோடி" என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
15.மொத்தம் ஏழு தாதுக்கள்
16.ஏழானது மிகப்பெரிய ஓரிலக்க பகா எண்(Prime number).
17.கடை ஏழு வள்ளல்கள்.
18.அகப்பொருள் திணைகள் ஏழு .
19.மனிதனுடைய தலையில் உல்ல ஓட்டைகளின் எணிக்கை ஏழு.
20.பெண்களின் பருவங்கள் ஏழு.(பேதை ,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம் பெண்).