பயனர்:TNSE sankarkuppan vlr/மணல்தொட்டி
அப்துல்லா சேகு
தொகுபிறப்பு
தொகுசிவகங்கை மாவட்டம் திருக்களாபட்டி கிராமத்தில் சின்னக்கண்ணு ராவுத்தருக்கும்,ரகுமான் பீவிக்கும் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்[1].
படிப்பு
தொகுதினசரி 14 கி.மீ தூரம் நடந்து சென்று பள்ளிப் படிப்பை பயின்றார்.பின்னர் விமானப் பொறியியல் பயின்று விமானப் படையில் சேர்ந்தார். விமானப்படையில் பணியாற்றிக்கொண்டே மருத்துவத்துறையின் மீதான ஆர்வம் காரணமாக ஓமியோபதி மருத்துவம் பயின்றார்.மற்றவர்களுக்கும் கற்பிக்க தொடங்கினார். மருத்துவத்துறையில் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கில் 1978 ஆம் ஆண்டு விமானப்படையில் இருந்து முறையாக ஓய்வு பெற்று காரைக்குடியில் ஓமியோபதி மருத்துவமனையை தொடங்கினார்.நிறைய பேருக்கு ஓமியோபதி மருத்துவத்தில் பயிற்சியும் வழங்கினார். மனிதனுக்கு ஏற்படும் எவ்வித நோயையும் மருந்துகளின்றி குணப்படுத்தும் மகத்துவம் அக்குபஞ்சருக்கு உண்டு என்பதை உணர்ந்தார். இம்முறையின் எளிமை,குணமாக்கும் வேகம்,உலகில் வேறு எந்த மருத்துவமுறைக்கும் இல்லை என்ற உண்மையை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் உணர்ந்து,இலங்கை கொழும்புவில் சர்வதேச திறந்த வெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம்( International Open University for Complementary Medicines) எனும் அமைப்பை நிறுவிஅக்குபஞ்சர் மருத்துவமுறையை உலகிற்கு அறிமுகம் செய்த பேராசிரியர்.டாக்டர்.உஜெய்சூர்யா அவர்களை சந்தித்து அவரது பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவமனையை(அப்துல்லா யின் ஆஸ்பிடல் டிரஸ்ட்) இணைத்துக்கொண்டார்.
அட்டாமா உருவாக்கம்
தொகுஅக்குபஞ்சர் மருத்துவமுறையை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் அட்டாமா( ATAMA-All Tamilnadu Acupunture & Alternative Medical Association) என்ற அமைப்பை உருவாக்கினார்.இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தின் பல இடங்களில் அக்குபஞ்சர் பயிற்சி மையங்களை நிறுவி,6000க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவர்களை உருவாக்கினார். 08.01.2005 அன்று கோவையில் இவரது பார்வையற்ற அக்குபஞ்சர் மாணவர்கள் மூலம் மற்றவர்களுக்கு சிகிச்சை அளித்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் 05.03.2005 அன்று புது டெல்லியில் அன்றைய பாரத பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்தித்து அக்குபஞ்சர் மருத்துவத்தின் அவசியத்தை விளக்கினார்.18.03.05 அன்று தமிழகம் திரும்பி தமிழக ஆளுநர் திரு.சிஜித்சிங் பர்னாலா அவர்களை சந்தித்தார்.அப்துல்லா சேகு அவர்கள் புதுடெல்லி சென்று நேரு யுவகேந்திரா என்ற அமைப்பின் உயர் அதிகாரிகளை சந்தித்து அக்குபஞ்சர் மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
இறப்பு
தொகுஇதற்கிடையே 24.04.2005 அன்று அட்டாமாவின் முப்பெரும் விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க காரைக்குடியில் இருந்து 12.04.2005 அன்று சென்னை வந்த போது மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானார்.விபத்தின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் 10.05.2005 அன்று காலமானார்.
மேற்கோள்கள்
தொகுரெய்கி அக்குபஞ்சர்-மருத்துவ நூல்-பேராசிரியர்.அப்துல்லா சேகு
- ↑ ரெய்கி புத்தகம்