Tamil Learning Centre Crawley-UK
எம்மைப் பற்றி:
தொகுதமிழ்க்கல்விக்கூடம், குறோளி 2006-இல் தொடங்கினோம்
எமது தலையாய நோக்கம், குறோளி மற்றும் அதன் அருகில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் மற்றும் ஏனைய மக்களுக்கும் தமிழ் மொழி, கலை, பண்பாடு, விளையாட்டு, நல்லொழுக்கத்தையும் போதிப்பது. பிள்ளைகளுக்கு இவைகளை போதிப்பதுடன் நில்லாமல், உலகில் போர் மற்றும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் செய்கிறோம்.
தமிழ் ஓர் தொன்மை வாய்ந்த உயர் தனிச் செம்மொழி. அச்செம்மொழியை எமது கல்விக்கூடத்தில் மழலையர் நிலை தொடக்கம் 12 ம் வகுப்புவரை பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்குப் புகட்டுகிறோம். எமது பள்ளி தமிழ் தேர்வு மையமாகவும் விளங்குகிறது.
தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் பாடத் திட்டத்தைப் பின்பற்றுகிறோம். தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் இப்பாடத்திட்டத்தை உலகில் 14 நாடுகளில் 70000 மாணவர்களும், பிரித்தானியாவில் மட்டும் 90 பள்ளிகளில் 8000 மாணவர்கள் படித்து பயனடைகின்றனர். இவர்களின் பாடத்திட்டத்தில் பட்டயக்கல்வி வரை உண்டு.
எமது கல்விக்கூடம், பிரித்தானிய தகுதிகள் மற்றும் தேர்வு ஒழுங்குமுறை செயலகத்தாலும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி சேர்க்கை சேவையினாலும் ( Ofqual ), தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழத்தினாலும் அங்கீகரிக்கப்பட்ட கிரிப்பின் கல்லூரியுடன் இணைந்து, நுண்கலைகளான
நாடகம்
· வீணை
· கீ போர்ட்
· வயலின்
· புல்லாங்குழல்
· மிருதங்கம்
· பரதம்
· சங்கீதம்
போன்றவற்றை கற்பிக்கும் நிலையமாகவும், நுண்கலை தேர்வு நிலையமாகவும் இயங்குகின்றது.
மேலும், அனைவரின் உடல், மனநல ஆரோக்கியத்தை முன்னிலைப் படுத்தி, எமது கல்விவிக்கூடத்தில் மாணவர் கலை மன்றம், கேரம் போர்ட், சதுரங்கம், பூப்பந்து, யோகா, போன்றவைகளும் நடைபெறுகின்றது. எமது பள்ளிக்கு தனித்த விளையாட்டு கழகமும் செயல்படுகின்றது.
About Us:
தொகுThe Tamil Learning Centre, Crawley was started in 2006.
Our motto is to enlighten the Tamil language, art, culture, games and morals for Tamil speaking people and all others, who are willing to be motivated and close to the Crawley neighbourhood. In addition to teaching the Tamil morals, we help the people affected by war and natural calamities around the world.
Tamil is one of the ancient, unique and classical language. We pride ourselves in teaching such a classical language in our school, across different levels from Nursery to Year 12. Also, our school acts as an exam centre for the Tamil exams.
We follow the Tamil Education Development Council curriculum (TEDC). Around the world 70,000 students in 14 countries, and in Britain alone 8000 students in 90 schools are benefitted by the Tamil Education Development Council curriculum. Their exam board offers up to diploma level of education (DTL).
We also have a collaboration with Griffin College, who have been approved by The Office of Qualifications and Examinations Regulation (Ofqual) and affiliated by Tamil University, Thanjavur to teach
Drama
· Veena
· Keyboard
· Violin
· Flute
· Miruthangam
· Classical Indian Dance Bharatanatyam
· Vocal
Our school acts as a training centre for such courses as well as an exam centre for fine arts exams.
Focussing on everyone’s wellbeing and to keep fit, relaxed and happy, we run students art club, carom board, chess, badminton and yoga. We have a specialized Sports Committee functioning in our school
tkkcr@hotmail.co.uk , +447367395859.