Tamiliyam
Joined 23 நவம்பர் 2013
காமராசரும் பேரூராதீனமும் 1958 ஆம் ஆண்டு கோயமுத்தூர் வருகை தந்த காமராசர் பேரூராதீனம் வந்து மதிய உணவுத் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.இந்நிகழ்வில் பேரூராதீன சன்னிதானம் தவத்திரு ஆறுமுகசுவாமிகள்,இளைய சன்னிதானம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.இந்நிகழ்வு ஆனந்த விகடன் இதழில் வெளிவந்துள்ளது.
கோவை மாவட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட காமராசர் இரண்டு நாட்கள் பேரூராதீன மாடி பங்களாவில் தங்கி சென்றுள்ளார். ஊட்டியில் பேருராதீன கட்டுப்பாட்டில் உள்ள திருக்காந்தள் திருமடத்திற்கு 1938 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் வருகை தந்த செய்தி அறிந்து 1961 ஆம் ஆண்டு காமராசர் அவர்கள் திருக்காந்தள் திருமடத்திற்கு வருகை புரிந்தார்.அங்குள்ள வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டுச் சென்றார். சிறுவாணி அணையைப் பார்வையிட சென்ற காமராசர் 2-வது முறையாக பேரூராதீனம் வருகை புரிந்து கல்லூரி விழாவில் பங்கேற்றுப் பேசினார்.இவ்விழாவில் வெள்ளக்கிணறு ஜமீன் திரு.சுப்பையா கவுண்டர் அவர்களும் கலந்து கொண்டார். நன்றி.சன்னிதானங்களின் உரையாடலில் இருந்து தொகுக்கப்பட்டவை.