கி.பார்த்திபராஜா

கி.பார்த்திபராஜா அவர்கள் மாற்று நாடக இயக்கம் மூலம் நாடகக் கலையை உயிர்ப்படையச் செய்து வருபவர். இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். 16 ஆண்டுகளாக இளைஞர்கள், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான நாடகப் பயிற்சி பட்டறை நடத்தி வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் செருவாக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். மாற்று நாடக இயக்கத்தின் பிளாஸ்டிக் மனிதர்கள், விசாரணை, பாரதி வருகிறார் போன்ற நாடகங்கள் மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரதியிலிருந்து மேடைக்கு, இப்படிக்குத் தங்கள் அன்புள்ள, நெடும் பயணம், தமிழ்க் கலைமணிகள், பாரதி, சமூக இலக்கியப் பயணம், இராமாயண ஒயில், புதிய ஒளி, மரபிலக்கியம் வளர்ச்சியும் தாக்கமும், சங்க காலச் சமூகவியல் போன்ற 25 நூல்களை எழுதியுள்ளார்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamilsaavi&oldid=2573950" இலிருந்து மீள்விக்கப்பட்டது