பயனர்:Thabeef/மணல்தொட்டி

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பு ஆகஸ்ட் தொகு

1941 ஆண்டு தஞ்சொங் பகார் சாலையில் முதன்முதலில் துவங்கியது. திருநெல்வெலி மாவட்டத்தில் அமைந்துள்ள கடையநல்லூரிலிருந்து புலம்பெயர்ந்து வந்த இந்திய முஸ்லிம் சமூகத்தினரது  கல்வி, சமயம் மற்றும் சமூகத்தேவைகளைப் பூர்த்திச் செய்யவே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. ஆரம்பக் காலத்திலிருந்தே   குடிநுழைவு மற்றும் குடியுரிமைப் பிரச்சினைகளை எல்லாம் கடந்து இன்று இவ்வமைப்பு இந்திய முஸ்லிம் சமூகத்தினரது கல்வி மற்றும் சமூகப் பிணைப்பு ஆகியவற்றுக்கும் இச்சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் அரும்பாடுபட்டு வருகிறது எனக் கூறுவது மிகையாகாது. அதோடல்லாமல் சிங்கைவாழ் பிற சமூகத்தினரிடையே பரஸ்பரம், புரிந்துணர்வு மற்றும் பிணைப்பையும் வளர்த்துவருகிறது.

சமயக் கல்வி-மதரஸா வகுப்புகள்        

   சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பு கடந்த  நாற்பது ஆண்டுகளாகப் பகுதி நேர மதரஸா வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்திய முஸ்லீம் மக்கள் தொகை கணக்கெடுப்பு சேவை மிகவும் தகுதியான பணியாளர்களைக் கொண்டு செய்யப்பட்டு வருகின்றது.  எங்களின் இளையர்கள் மற்றும் பெரியவர்கள் போதுமான, சரியான இஸ்லாமிய அறிவைக் கொண்டு மதரஸாவில் பணியாற்றினார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தற்போது இந்த வகுப்புகள் எங்கள் வளாகத்திலும் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள நான்கு மசூதிகளிலும்  ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

திருமண ஏற்பாடுகள்

  திருமண ஆலோசனை வகுப்புகளில் (MPC) இவ்வமைப்பு குடும்ப தகராறு, விவாகரத்து போன்ற வழக்குகளுக்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆலோசனைகளை வழங்கி வருகிறது.  பெண்களுக்கும் இளம்பிள்ளைகளுக்கும் மூத்தவர்களுக்கும்  தேவையான சட்ட ஆலோசனைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

இளைஞர்கள் தொண்டு

இன்றைய இளையர்கள் நாளைய தலைவர்கள் என்பதற்கேற்ப இளைஞர்கள் தங்களைச் சமூகம் மற்றும் சமூக சேவைகளுக்குள்  உட்படுத்திக்கொள்ளும் வகையில்  தளம் ஏற்படுத்திக்கொடுக்கிறது. அந்த வகையில் ஒரு பயனுள்ள மேடையை வழங்க சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் செயல்படுத்த விழைகிறது. இவ்வமைப்புடன் இணைந்து பணியாற்றும் எல்லா இளையர்களையும் ஒன்று சேர்க்கவும் தளம் அமைத்துத் தருகிறது. ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகக்கு தயாராகும் இளையர்களுக்கு ஏற்ப பல நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறது. மேலும் இளையர்கள் பண்பாட்டுக் கலாச்சாரமிக்கவர்களாக சிறந்த முஸ்லிம்களாக விளங்கவும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.

சமாதானச் சேவைகள்

 குடும்பத்தில் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ளவும் மற்றும் குடும்பப் பூசல்கள் இணக்கமாகும் வகையிலும், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகின்றது. குடும்பத்தில் ஏற்படும்  தகராறுகள் சண்டைகளினால் ஏற்படும் பிரச்சினைகளை சமாதானம் செய்து வைக்கும் சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இது நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சேவைகள் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பால் நன்கு தகுதி வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thabeef/மணல்தொட்டி&oldid=2250874" இலிருந்து மீள்விக்கப்பட்டது