Thamilselvan k
கலங்காதகண்டி மண்ணின் வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்கள்
அமைவிடம்: தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் பெரியபிள்ளைவலசை பஞ்சாயத்தில் அமைந்துள்ள கலங்காத கண்டி கிராமம் ஆனது பல நூற்றாண்டுகளாக தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கிராமானது செங்கோட்டை வட்டாரம் கேரளா பகுதியில் இணைந்துள்ள சமயத்தில் கலங்காத கண்டி கிராமம் தமிழகத்தில் இருந்துள்ளது மேலும் இந்த கிராமம் செங்கோட்டை ரயில்வே நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும் செங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலும் தென்காசியில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன. மேலும் இந்த கிராமத்தில் நிறைய கனிம வளங்களும் நீர் வளங்களும் சுற்றி மூன்று திசைபகுதியிலும் மலைகளால் சூழப்பட்டு அமைந்துள்ளது கிராமத்தின் சிறப்பு அம்சமாகும்.இந்த கிராமத்தில் கலங்காத கண்டி அணை உள்ளது அவற்றில் இருந்து சிற்றார் ஒன்று பிரிந்து விஸ்வநாதபுரம், அழகப்பபுரம், அய்யாபுரம் போன்ற கிராமங்களுக்கு விவசாய மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது. மேலும் செங்கோட்டை ரயில்வே நிலையத்துக்கு இந்த கிராமத்தில் இருந்து தான் குடிநீர் செல்கிறது கிராமத்தின் வெளிப்புற பகுதியில் நிறைய குளங்களும் நீரோட்டங்களும் அமைந்துள்ளன