மனிதனின் வாயசைவினால் எழும் அசைகள் ஓசை அல்லது ஒலி எனப்படும். வாயசைவினால் எழுப்பப்படும் ஓசைகளைக் கொண்டு உணர்வுகளை வெளிபடுத்தவும், ஒரு பொருளை குறிப்பிடவும் மனிதன் தலைப்பட்டான். "ஆ!" என அலறுவதும், "ஈ" என பல்லைக்காட்டி இளிப்பதும் கூட உணர்வுகளை வெளிபடுத்துவற்கான ஓசைகள் தான்.

பேச்சு

தொகு

பே பே என்று பேச முற்பட்ட மனிதனின் பேச்சை சக மனிதன் புரிந்துக் கொண்டபோது அது மனிதர்களுக்கு இடையேயான தொடர்பாடலுக்கான முதற்படி நிலையை அடைகிறது. எனவே மனித இனத்தின் கருத்துப் பறிமாற்றத்தின் முதற்படி நிலை பேச்சு எனலாம்.

வார்த்தை

தொகு

சொற்களின் கூட்டாக, சொற்களை இணைத்து சொற்றொடராக பேசும் போது அது வார்த்தை என்றாகிறது.

மொழி

தொகு

ஒரு மனித குழுவினரிடையே பேசும் ஓசைகளின் தொகுப்பு பேச்சு மொழி என்றாகிறது.

பேச்சுமொழி

தொகு

பேச்சுமொழி என்பது ஒரு இனக்குழுவினரால் பேசும் மொழியாகும். அது மந்திர மொழி, குறியீட்டு மொழி போன்றவற்றில் இருந்து வேறுபட்டது.

எழுத்து மொழி

தொகு

ஒரு பேச்சுமொழி எழுத்துமொழியாவது மிகவும் பண்பட்ட நிலையிலேயே நிகழ்கிறது. அந்த பண்பட்ட நிலையென்பது ஒரு நிலப்பரப்பில் வாழும் பல்வேறு சிற்சிறு இனக்குழுவின் ஒன்றுபட்ட நிலையில் தான் நிகழ்கிறது.

எழுத்து

தொகு

எழுத்துவடிவம் பெற்ற ஒரு மொழியின் முதல்நிலை அம்மொழியினர் பேசும் ஓசைகளுக்கு ஏற்ற எழுத்துக்களை உருவாக்குவதில் தொடங்குகிறது.

அரிச்சுவடி

தொகு

ஒரு மொழி எழுத்து வடிவம் பெறுவதற்கு, அம்மொழியனர் பேசிய ஓசைகளை எழுத்து வடிவில் எழுத, எழுதுபவைகளை வாசிக்க, அதற்கான அரிச்சுவடி அடிப்படையாகிறது. நடக்கும் போது பதியும் காலடிச் சுவடுகள் போன்று, எண்ணத்தில் எழும் எண்ணங்களை எழுத்துக்காளாய் எண்ணச் சுவடுகளாய் பதிப்பதற்கான அடிப்படை அரிச்சுவடியாகும்.

சொல்

தொகு

அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களை கொண்டு எழுதப்படும் சொல், அம்மொழியின் முதன்மை கூறாகும். ஒரு சொல் என்பது ஒரு மொழியனரின் கருத்தை, உணர்வை, பொருளை வெளிப்படுத்துவதற்கான ஓரெழுதைக் கொண்டோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களை கொண்டோ அமையலாம்.

சொற்களின் கூட்டு, சொற்றொடராகவோ, ஒரு முழுமையான வாக்கியமாகவோ அமையும்.

சொற்றொடர்

தொகு

எழுவாய் பயனிலை செயப்படுபொருள் என ஒரு முழுமையாக வாக்கியத்திற்கான அம்சம் அல்லாத, ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களின் கூட்டு சொற்றொடர் மட்டுமேயாகும்.

வாக்கியம்

தொகு

ஒரு வாக்கியம் என்பது எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் எனும் அம்சங்களை கொண்டிருக்கும்.

பந்தி

தொகு

பல வாக்கியங்களையும் சொற்றொடர்களையும் உள்ளடக்கி, ஒரு குறிப்பிட்ட விடயத்தின், பல்வேறு அம்சங்களை தனித்தனியாக விளக்க பிரித்து இடைவெளிவிட்டு எழுதுவதே பந்தி எனப்படும்.

கட்டுரை/கதை

தொகு

பல பந்திகளில் எழுதப்படுபவை கட்டுரையாகவோ, கதையாகவோ, அல்லது வேறு ஒரு வகை கொண்டதாகவோ இருக்கலாம்.

இலக்கியம்

தொகு

ஒரு மொழியில் எழுதப்படும் கட்டுரை, கதை, குறிப்புகள், பாடல்கள், செய்யுள்கள் போன்றன அம்மொழியின் இலக்கியம் என்படும்.

இலக்கணம்

தொகு

ஒரு மொழியின் இலக்கிய படைப்புகள்; அம்மொழியினரின் (சிலவேளை மொழி குடும்பத்தினரின்) பல்வேறு வட்டார வழக்குகளில் எழுதப்படுவதாலும், ஒரு வட்டார வழக்கில் உள்ள ஒரு படைப்பு இன்னொரு வட்டார வழக்கை கொண்டோரால் முழுமையாகவோ, ஒரு பகுதியையோ, சொற்களையோ, மொழிநடையையோ புரிந்துக் கொள்வதில் சிக்கல்கள் தோன்றும் பொழுது, அவ்வெழுத்து மொழிக்கு பொதுவான வரைவிலக்கணங்களை வகுப்பதே இலக்கணம் என்றாகிறது. இந்த இலக்கணம் என்பது ஒரு மொழியின் இலக்கிய வளம் வளர்ந்த நிலையிலேயே தோற்றம் பெறுவதாக மொழியியளாளரிடையேயான ஒருமித்த கருத்து நிலவுகிறது.


தமிழ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thennakoan/மணல்தொட்டி/4&oldid=3108538" இலிருந்து மீள்விக்கப்பட்டது