Thivajaya
Joined 6 சூன் 2013
பா.திவாகர் என்பது என் பெயர். இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றுள்ளேன். பள்ளி படிப்பு முடியும்வரை கணினி எனக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. தூரத்தில் நின்று பார்க்க மட்டுமே வாய்ப்புக் கிடைத்தது. பள்ளி முடிந்து கோடைவிடுமுறையில் எனக்கு கணினி அறிமுகமானது. ஒன்பதாம் வகுப்பிலிருந்து கணினியை இயக்க ஆர்வம் மிகுந்தது. அதனால் எனக்கு முதன்முறை இயக்கிய போது என்னை மறந்து அனைத்து தெரிவுகளையும் இயக்கிப் பார்த்தேன். தொடக்கத்தில் என்னக்கு விக்கிபீடியா பற்றி ஒன்றும் தெரியாது. இனைய தேடலின் போது முதல் மூன்று இடத்தில் விக்கிபீடியா இருப்பதைக் கண்டேன். பிறகு எந்த செய்தியையும் முதலில் விக்கிபீடியாவில் தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். இது ஒரு தன்னார்வ அமைப்பு என்பதால் என் பங்களிக்க விரும்புகிறேன்.