மெசயின் பரிசு

(பயனர்:Tnse subbulakshmi cbe/மணல்தொட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மெசயின் பரிசு என்பது அமெரிக்க சிறுகதை எழுத்தரான ஓ ஹென்றி[2] எழதிய நூலாகும்.

"மெசயின் பரிசு
The Gift of the Magi"
ஆசிரியர்ஓ ஹென்றி
நாடுஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
வகை(கள்)சிறுகதை
வெளியிடப்பட்ட காலம்தி போர் மில்லியன்
பதிப்பு வகைதொகுப்பு
வெளியீட்டாளர்மெக்ளூர், பிலிப்சு மற்றும் நிறுவனம்
வெளியிட்ட நாள்திசம்பர் 10, 1905 (செய்தித்தாள்); ஏப்ரல் 10, 1906 (புத்தகம்)[1]

நூலின் விவரம்

தொகு

ஓ ஹென்றியின் சிறுகதைகள் நியூயார்க்[3] நகரில் வசிக்கும் சாதாரண நடுத்தர மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை கதைக்கருவாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சிறுசிறு நிகழ்வுகளையும் அதற்கு திடீர் திருப்பங்களையும் எதிர்பாராத முடிவுகளையும் கொண்டிருக்கும். மெசயின் பரிசு சிறுகதை அன்பான கணவன் மனைவி இருவரும் ஒருவர் மற்றொருவருக்கு கிறித்துமசு பரிசு கொடுப்பதற்காக தன்னிடம் உள்ள சிறந்த பொருளை தியாகம் செய்ததைப் பற்றி கூறுகிறது.

நூலின் சுருக்கம்

தொகு

டெல்லா தன் கணவருக்கு கிறுத்துமசு பரிசு கொடுக்க பணம் இல்லாததால் அவளிடம் உள்ள விலை மதிக்க முடியாத நீண்ட கூந்தலை விற்று தன் கணவருக்கு அழகான கைக்கடிகாரச் செயினை வாங்குகிறாள். அவளுடைய கணவன் ஜிம் தன் மனைவி டெல்லாவிற்கு கிறித்துமசு பரிசு வாங்க பணம் இல்லாததால் தன்னுடைய ஆடம்பரமான கைக்கடிகரத்தை விற்று டெல்லாவின் நீளமான முடியை அழகுபடுத்துவதற்காக ஆமை ஓட்டினால் செய்யப்பட்ட அழகிய சீப்புகளை வாங்கி வருகிறான்.

நூலின் சாரம்சம்

தொகு
 
ஒ.ஹென்றி

மெசய் என்பவர்கள் மிகச்சிறந்த அறிவாளிகள். மாட்டுத்தொழுவத்தில் பிறந்த இயேசு பிரானுக்கு பரிசுகள் கொடுத்து கிறுத்துமசு பரிசு கொடுக்கும் மரபினைக் கண்டு பிடித்தவர்கள். ஆதலால் ஜிம் டெல்லா இருவரும் தன்னலமற்ற அன்பினால் தங்களிடம் உள்ள பொக்கிசங்களை ஒருவர் மற்றொருவருக்கு தியாகம் செய்ததால் இவர்களுடைய பரிசுகளும் மெசயின் பரிசுகளுக்கு சமமாக ஓ ஹென்றி கருதுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Gift of the Magi is published – This Day in History – 4/10/1906". history.com. 2011. பார்க்கப்பட்ட நாள் November 16, 2011.
  2. https://en.wikipedia.org/wiki/O._Henry
  3. https://en.wikipedia.org/wiki/New_York_City
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெசயின்_பரிசு&oldid=4050927" இலிருந்து மீள்விக்கப்பட்டது