Trincoboystr
2018 சிங்கள-முஸ்லிம் கலவரம்
சிங்கள முஸ்லிம் கலவரம் என்பது 2018 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையேயான கலவரம் ஆகும். இக்கலவரம் 2018 மார்ச்-1 தொடக்கம் 2018 மார்ச்-09 வரை இடம் பெற்றது. .
2018.02.22ஆம் திகதி முஸ்லிம் இளைஞர் குழுவினால் சிங்கள இளைஞன் தாக்கப்பட்டுள்ளதை அடுத்து கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையின் இளைஞன் உயிரிழந்துள்ளதை அடுத்து நீதிக்கு புரம்பான சம்வங்கள் சில பெரும்பான்மை சமூக அமைப்புக்களினால் மேற்க் கொள்ளப்பட்டன.
இக்கலவரம் அம்பாறையில் ஆரம்பித்து கண்டி வரை தொடர்ந்தது.
இதில் அதிகமான பள்ளிகள் உடைக்கப்பட்டதுடன் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
மேலும் கலவனத்தில் கண்டியைச் சேர்ந்த அப்துல் பாசித் தீயில் கருகி உயிர் பிரிந்தார்.
திகனயில் இனவாதச் சம்பவங்கள் தொடங்கப் பட்டதிலிருந்து (05.03.2018) இலிருந்து இப்போது வரை சிறிய அளவிலோ, பெரியஅளவிலோ தாக்கப்பட்ட#பள்ளிவாயல்கள்விபரம்.
(அம்பாறை ஜும்மா பள்ளிவாயல்) 1. திகன ஜும்மா பள்ளிவாயல் 2. ஹிஜ்ராபுர பள்ளிவாயல் 3. பல்லேகல பள்ளிவாயல் 4. கட்டுகஸ்தொட்டை குருநாகல் வீதி 4 ஆம் கட்டை உக்குரஸ்ச பிட்டிய ஜங்சன் பள்ளி 5. கட்டுகஸ்தொட்டை கஹல்ல மஸ்ஜித் 6. அலதெனிய பள்ளிவாசல் 7. வன்னிபொல பள்ளிவாயல் 8. யஹலத்தென்ன பள்ளிவாயல் 9. பெனிதெனிய பள்ளிவாயல் 10. தென்னக்கும்புர பள்ளிவாயல் 11. மனிக்கின்னே பள்ளிவாயல் 12. இலுக்குவத்த பள்ளிவாயல் 13. வத்தேகம பள்ளிவாயல் 14. ரம்புக்கன பள்ளிவாயல் 15. எழுகொட பள்ளிவாயல் 16. என்ரதென்ன பள்ளிவாயல் 17. முறுதலாவ பள்ளிவாயல் 18. அக்குரணை வெலேகட பள்ளிவாயல் 19. பேராதெனிய பள்ளிவாயல் 20. எல்பிடிய பள்ளிவாயல் 21. ஹீப்பிட்டி பள்ளிவாயல் 22. அலியதென்ன பள்ளிவாயல் 23. வாரியபொல(மாத்தளை) பள்ளிவாயல் 24. குருந்துகொல்ல பள்ளிவாயல்
இதற்கு காரணமானவர்களை இலங்கை அரசு கைது உலக அரங்கில் தன் நீதியை நிலை நாட்டினது.
முஸ்லிம் விவகார அமைச்சர், நிலமையின் விபரீதத்தை உணர்ந்து கண்டியிலுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொலிஸாரைக் கோரினார். இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.
அதனையும் மீறி இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதே நேரத்தில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை இரவு கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களை விடுவிக்கக் கோரி தெல்தெணிய பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்பாட்டமும் நடத்தப்பட்டது.
இவற்றைக் கலைப்பதற்கு பொலிஸார் முயற்சிகள் மேற்கொண்டனர். முதலில் நீர்த்தாரைப் பிரயோகம் முன்னெடுத்தனர். கலக்காரர்கள் கலைய வில்லை. பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். அதுவும் பயனளிக்கவில்லை. கலகக்காரர்களை கட்டுப்பாட்டுக்கு வராத நிலையில், மாலை 3 மணியளவில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸாருக்கு மேலதிகமாக சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே திகன பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலமை காரணமாக கடந்த இரு நாள்களாக கண்டி – மகியங்கனை பிரதான வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. கிழக்கில் இருந்து மகியங்கனை, கண்டி ஊடாக கொழும்பு நோக்கிய போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. பொது பயணிகள் சேவைகள் பலவும் இந்த பதற்ற நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டது.