உபமன்யு என்ற புனை பெயரிலுள்ளவர் திரு. ஓபுளா.சு.சுப்பிரமணியன். இவர் மதுரையில் வசிப்பவர். லைப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் 1962 முதல் 2003 வரை பணியாற்றி மேலாளர் (மேனேஜர்) பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். பணியில் சேரும் பொழுது கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.ஸி. பின்னாளில் தன் கல்வித்தகுதியை எம்.ஏ (தத்துவம்) ஸ்ரீ வெங்கடேஸ்வரா யூனிவர்ஸிடியிலும், டிப்ள்மா இன் லிங்க்விஸ்டிக்ஸ் (மொழியல்) படிப்பையும் தெலுங்கு மொழி டிப்ளமா படிப்பையும் மதுரை காமராஜர் பல்கலைகழக மாலை நேர கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்றவர். 1967 -ம் ஆண்டிலிருந்து தன் தாய் மொழியான சௌராஷ்டிர மொழியை ஆராய்ந்து வருபவர். சௌராஷ்டிர மொழியில் வெளி வந்துள்ள பல நூல்களைச் சேகரித்து வைத்துள்ளவர். 1972 முதல் 1974 வரை மதுரையில் தங்கி இருந்து சௌராஷ்டிர மொழியை ஆராய்ச்சி செய்த டாக்டர் நொரிஹிகொ உசிதா அவர்களுக்கு உறுதுணையாயிருந்து சௌராஷ்டிரர்களின் வாய்மொழி இலக்கியம் (Oral Literature of Saurashtrans) (1979) என்ற புத்தகம் மற்றும் சௌராஷ்டிரம்-ஆங்கிலம் அகராதி (1990) வெளிவருவதற்கு துணை புரிந்தவர். இன்றளவும் ஜப்பானில் கோபே நகரில் இருந்து வரும் டாக்டர் உசித னொரிஹிகொ அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவருடைய ஆராய்ச்சிக்கு உதவி செய்து கொண்டிருப்பவர். திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் திராவிட மொழியியலாளர் சங்கத்தில் (Dravidian Linguistics Association) ஆயுட் கால் உறுப்பினர். அண்மையில் பஞ்சாபி பல்கலைக் கழகம், பாடியாலாவில் நடைபெற்ற 39-வது திராவிட மொழியிலாளர் சங்க மாநாட்டில் ‘சௌராஷ்டிரமொழியின் 600 அடிப்படை சொற்கள் மராத்திமொழி யோடு ஒரு ஒப்பீடு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வாசித்தார். அதை இந்த வலைத் தளத்தில் சென்று கேட்கலாம்.

OSS speech at 39th All India Conference of DLA at Punjabi University, Patiala on 15.6.2011. http://soundcloud.com/nayagisongs/oss-speech-at-39th-all-india DLA conference. சௌராஷ்டிர மொழி எழுத்து மற்றும் இலக்கியம் குறித்து விக்கிப்பீடியாவில் எழுதி வருகிறார். அவருடைய மினஞ்சல் subramanian.obula@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:UPAMANYU&oldid=835720" இலிருந்து மீள்விக்கப்பட்டது